பேராசிரியர் ராஜ்கௌதமன்

பேராசிரியர் ராஜ்கௌதமன்

Profession அறிஞர்

Biography

விருதுநகர் திருவில்லிபுத்தூர் வத்திராயிருப்பு புதுப்பட்டி ரோமன் கத்தோலிக்க வடக்குத்
தெரு, ராக்கம்மா பாட்டியின் குடிசையில், சூசைராஜ் – செவந்தி தம்பதியருக்கு பிறந்தார்.

கிறித்தவராகப் பிறந்த இவர், இந்துவாக மதம் மாறியபோது ‘எஸ்.கௌதமன்’ என வைத்துக்
கொண்டார். ராஜ்கௌதமன் என்ற புனைபெயரில் எழுதத் தொடங்கினார். இவரது தங்கை எழுத்தாளர்
பாமா.

பாளையங்கோட்டையிலுள்ள செயின்ட் சேவியர் கல்லூரியில் இளம் அறிவியல் விலங்கியல் பட்டமும்,
தமிழ் இலக்கியத்தில் முதுகலைப் பட்டமும் பெற்றார்.

1969-ல் பாளையங் கேட்டை செயின்ட் சேவியர்ஸ் கல்லூரியில் தற்காலிக தமிழ் டியூட்டராகவும்,
அதே கல்லூரியில் 1970-இல் விலங்கியல் பாடப்பிரிவில் தற்காலிக விரிவுரையாளராகவும்
பணியாற்றினார். 1975-இல் காரைக்கால் அறிஞர் அண்ணா அரசினர் கலைக் கல்லூரியில் நிரந்தர
தமிழ் விரிவுரையாளர் வேலை கிடைத்தது.

1976-இல், ராஜ்கௌதமனுக்கு பாண்டிச்சேரியில் தமிழ் ஆசிரியராகப் பணியாற்றிய க. பரிமளம்
என்பவருடன் திருமணம் நடைபெற்றது. இத்தம்பதியருக்கு 1977-ல் ‘நிவேதிதா’ என்றொரு மகள்
பிறந்தார்.

1986-இல்புதுச்சேரி தாகூர் கலைக்கல்லூரியில் உதவிப் பேராசிரியரானார். 1992-இல்
சென்னைப் பல்கலைக்கழகத்தில் அ.மாதவய்யா குறித்து ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றார்.
2001-இல் புதுச்சேரி காஞ்சி மாமுனிவர் பட்ட மேற்படிப்பு மையத்தில் தமிழ்த் துறை
தலைவராகப் பொறுப்பேற்று, 2011-இல் தமது 62-வது வயதில் பணிநிறைவு பெற்றார்.

ஆசிரியர், ஆய்வாளர், படைப்பாளர், மொழி பெயர்ப்பாளர் என பன்முக ஆளுமையாக விளங்கும் இவர்,
தலித்தியம், மார்க்சியம், பெண் ணியம், நவீனத்துவம் சார்ந்து இயங்கிக் கொண்டிருக்கிறார்.

அவ்வகையில், ‘ராக்கம்மா பேத்தி’ எனும் ஒரு சிறுகதைத் தொகுதி, ‘சிலுவைராஜ்
சரித்திரம்’, காலச்சுமை’ என இரு தன் வரலாறு நூல்கள், ‘லண்டனில் சிலுவைராஜ்’ எனும் ஒரு
பயண நூல், ஆங்கிலத்திலிருந்து தமிழாக்கப்பட்ட ஆறு நூல்கள், நான்கு கருத்தரங்க கட்டுரைத்
தொகுப்புகள், எட்டு திறனாய்வு நூல்கள், நான்கு வரலாற்று ஆய்வு நூல்கள், ஆறு தலித்திய
ஆக்க நூல்கள் ஆகியவை ராஜ்கௌதமனின் நூல்கள் ஆகும்.

இவரின் நெறியாள்கையில் 20 இளமுனைவர்களும், 5 முனைவர்களும் பட்டம் பெற்றுள்ளனர்.

இவரதுபடைப்புகளை மதுரை காமராசர் பல்கலைக்கழக தமிழ்த்துறை மாணவர்கள் ஆய்வு செய்துள்ளனர்.
தில்லிப் பல்கலைக் கழகத்தில் ஒருவர் முனைவர் பட்ட ஆய்வை மேற்கொண்டுள்ளார்.