ந.பாண்டுரங்கன்

ந.பாண்டுரங்கன்

Profession எழுத்தாளர்

Biography

விருதுநகர் திருவில்லிபுத்தூரில் சிதம்பர வீரபத்திர நடராசன் – சாருமதி சகாய அம்மாள்
தம்பதியருக்கு 19.06.1950 அன்று பிறந்தார்.

மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் இளங்கலை (அரசியல், அறிவியல்) பட்டமும், அண்ணாமலைப்
பல்கலைக் கழகத்தில் முதுகலை வரலாறு பட்டமும், நூலகச் செய்தி அறிவியல் பட்டமும் பெற்றார்.

08.01.1971-இல் அரசு நூலகத்தில் உதவியாளராகப் பணியில் சேர்ந்தார். சின்னமனூர்,
சோழவந்தான் ஆகிய ஊர்களில் பணியாற்றியபின் மதுரை கிழக்கு கிளை நூலகத்தில் 6 ஆண்டுகள்
பணியாற்றினார். தொடர்ந்து தமிழ்நாடு அரசு பொது நூலகத் துறையில் பல்வேறு பணிகளைச்
சிறப்புற ஆற்றினார். பிறகு 1981-84 இல் நூலகராக டொம்புச்சேரி, உசிலம்பட்டி, பூசாரிக்
கவுண்டன்பட்டி, வாடிப்பட்டி போன்ற இடங்களில் பணியாற் றினார். மீண்டும் மதுரைக்கு மாற்ற
லானார். இரண்டு ஆண்டுகளில் இரண்டாம் நிலை நூலகர் பதவி உயர்வு பெற்று திருப்பரங்
குன்றத்திற்கு மாற்றலானார். 2003-இல் மதுரை மாவட்டத் தலைமை நூலகத்தில் முதல் நிலை
மாவட்ட நூலகராகப் பொறுப்பேற்றார். பிறகு மாவட்ட நூலகராக பதவி உயர்வு பெற்று
சிவகங்கையில் பணியாற்றி 2008-இல் பணி நிறைவு பெற்றார்.

சிறுவயதிலேயே அறிஞர் அண்ணா, கலைஞர் கருணாநிதி ஆகியோரை நேரில் சந்தித்துப் பேசும்
வாய்ப்புப் பெற்றவர்.

1968-இல், தினமணி, சுதேசமித்திரன் போன்ற இதழ்களில் வடமொழிச் சொற்களையே எழுதி வந்ததைக்
கண்டித்து பா. செயப்பிரகாசம், ப. முருகபூபதி, சேடப்பட்டி முத்தையா போன்றோருடன்
இணைந்து பத்திரிகை எரிப்பு போராட்டம் நடத்தினார்.

இவரது ‘திரும்பி வரமாட்டாயோ?’ கவிதையை பழ.நெடுமாறன் படித்துப் பாராட்டியதுடன்
‘குறிஞ்சி’ இதழில் வெளியிட்டார். மு.மேத்தா, பரிணாமன் போன்ற புகழ்பெற்ற கவிஞர்கள்
எழுதும் குறிஞ்சி இதழில் 21 வயதில் இவருடைய கவிதையும் வெளியானது இவரை உற்சாகப்
படுத்தியது.

1974இல் செம்மலரில் ‘நிர்ப்பந்தங்கள்’, தாம ரையில் ‘கெண்டைக் கரைவேட்டி’ ஆகிய கதைகள்
வெளியாயின. 1976இல் அண்ணாவின் ‘காஞ்சி’ இதழ் அட்டையில் இவரது கவிதை இடம்பெற்றது.

2000-இல் இவருக்கு தாய்மண் இலக்கியக் கழகம் ‘மொழிக்கடல்’ என்ற பட்டத்தையும் பின் னர்
‘நாவரசு’ எனும் பட்டத்தையும் அளித்து சிறப் பித்தது.2003-இல் உலகத் தமிழ் எழுத்தாளர்
சங்கம் ‘மரபுச் செம்மல்’ பட்டம் போன்ற ஏராளமான பட்டங்களையும் விருதுகளையும் பெற்றுள்ளார்.

2008-இல் பணிநிறைவுக்குப் பின் இவருடைய கதைகளை நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்’
வெளியிட்டது. தற்போது கலை இலக்கியப் பெருமன்றத்தில் செயலாற்றுகிறார்.