| Profession | எழுத்தாளர் |
|---|
தேனியில் சுப்பையா – குருவம்மாள் தம்பதியருக்கு 6.4.1950-இல் பிறந்தார். இயற்பெயர்
கருப்பையா. கருப்பையாவுக்கு 7-வது வயதில் பார்வை பறிபோனது.
சென்னை, பூந்தமல்லியில் உள்ள பார்வை இழந்தோர் பள்ளியில் சேர்ந்து, ப்ரெயில் மொழியில் கல்வி
கற்றார். ஆசிரியர்கள் ஆங்கிலக் கவிதை களையும் தமிழ் இலக்கியங்களையும் அவருக்கு வாசித்துக்
காட்டினர். எஸ்.எஸ்.எல்.சி.யில் முதல் மாணவராய்த் தேர்ச்சி அடைந்தார். எனினும் குடும்ப
வறுமை காரணமாக தொடர்ந்து படிக்க முடியவில்லை.
தேனி பேருந்து நிலையத்தில் பொரி கடலை வியாபாரம், பழ வியாபாரம் செய்யத் தொடங்கினார்.
கண் மருத்துவ முகாமில் கருப்பையாவுக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டு 80 விழுக்காடு
பார்வை கிடைத்தது. கந்தகோட்டம் பூங்காவில் அமர்ந்து ஏராளமாக எழுதினார். தன் பெயரை
‘சீருழை யான்’ எனச் சூட்டிக் கொண்டார். ‘சீர்’ என்றால் சிறப்பு, ‘உழை’ என்றால் இடம்.
சிறப்பை இடமாகக் கொண்டவன் எனப் பொருள். ‘செம்மலர்’, ‘சிகரம்’, ‘தாமரை’, ‘சமூக நிழல்’
போன்ற இதழ்களில் இவரது கவிதைகள் வெளிவந்தன.
த.மு.எ.ச. தேனி கிளைச் செயலாளர் பொன். விஜயன் நடத்திய ‘புதிய நம்பிக்கை’ இதழில்
இவரது முதல் சிறுகதை ‘மௌனத்தின் விழிப்பு’ ‘சீருடையான்’ என்று பெயர் மாற்றத்துடன்
வெளிவந்தது. அன்றிலிருந்து இவர் ‘தேனி சீருடையான்’ என்ற பெயரில் எழுதி வருகிறார்.
1990-ல் த.மு.எ.ச. நடத்திய நாவல் போட்டியில் இவரது ‘கடை’ நாவல் மூன்றாம் பரிசு பெற்ற
துடன் ‘செம்மலர்’ இதழில் தொடராகவும் வெளி வந்தது. ‘அன்னம்’ பதிப்பகம் நூலாக வெளியிட்
டது. இந்நாவல் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் தமிழ் இலக்கியத் துறையில்
பாடநூலாக உள்ளது.
2008-ல் ‘நிறங்களின் உலகம்’, 2013-ல் ‘சிறகுகள் முறியவில்லை’ ஆகிய இரு நாவல்களை
எழுதியுள்ளார். இவரது சிறுகதைகள் ‘ஆகவே’ (1988), ‘ஒரே வாசல்’ (1993), ‘விழுது’
(2000), ‘பயணம்’ (2002), ‘மான் மேயும் காடு’ (2011) எனும் ஐந்து தொகுதிகளாக
வெளிவந்துள்ளன. ‘சிறுகதைகள் பாதையும் பயணமும்’ (2005) எனும் கட்டுரை நூலையும்
எழுதியுள்ளார்.
‘இளைஞர் முழக்க’த்தின் சிறந்த சிறு கதைக் கான முதல் பரிசு, ‘இலக்கிய வீதி’ சிறுகதைப்
போட்டியின் முதல் பரிசு, ‘தமுஎச’ சிறுகதைப் போட்டியின் இரண்டாம் பரிசு மற்றும்
விருது, ஜோதிவிநாயகம் நினைவுப் பரிசு, ஆதித்தனார் இலக்கியவிருது, நிழல்கள் திரை
இலக்கிய விருது, கலை இலக்கியப் பெருமன்ற விருது, சாகித்ய அகாதமி விருது, மதுரை
தமிழ்ச் சங்க விருது, தமுஎகச. திரை இயக்க விருது உட்பட 25-க்கும் மேற்பட்ட
விருதுகளைப் பெற்றுள்ளார்.
தற்போது தேனி பேருந்து நிலையத்தில் வருமானத்திற்காக பழக்கடை வைத்துக் கொண்டு இலக்கியப்
படைப்புகளைப் படைத்து வருகிறார்.