பேராசிரியர் சா.வளவன்

பேராசிரியர் சா.வளவன்

Profession அறிஞர்

Biography

காஞ்சிபுரம் ஆற்பாக்கம் கிராமத்தில் தமிழாசிரியர் சாம்பசிவம் – ஜெயலட்சுமி தம்பதியருக்கு
15.09.1949 அன்று பிறந்தார்.

பள்ளிக் கல்வியைத் திருமழிசையிலும், திருப்பெரும்பூதூரிலும் பயின்றார். பள்ளிப்
பருவத்தில் கால்பந்து, மட்டைப்பந்து, ஏ.சி.சி., என்.சி.சி. போன்றவற்றில் பயிற்சிப்
பெற்றார். சென்னை பச்சையப்பன் கல்லூரியில் புகுமுக வகுப்பு, இளங்கலை, முதுகலைப்
பயின்றார். சென்னைப் பல்கலைக்கழகத்தில் மானிடவியல் (1974), மலையாளம் (1976) மற்றும்
1977-இல் உயர்கல்வி முதலானவற்றில் பட்டயங்கள் பெற்றார். 1979-இல் பச்சையப்பன் கல்லூரியில்
‘பிள்ளைத் தமிழின் தோற்றமும் வளர்ச்சியும்’ என்ற தலைப்பில் எம்.லிட் ஆய்வுப் பட்டம் பெற்றார்.
சென்னைப்பல்கலைக் கழகத்தில் ‘பெண் படைப்பாளர் தம் படைப்புகள்’ என்ற தலைப்பில் ஆய்வு செய்து
1992-இல் முனைவர் பட்டம் பெற்றார். ஆங்கிலம், பிரெஞ்சு, மலையாளம், கன்னடம் ஆகிய
மொழிகளிலும் புலமை பெற்று பன்மொழி அறிஞராக விளங்கினார்.

1975-இல் திருமணம். துணைவியார் பெயர் மைதிலி. இவர் தமிழ் மற்றும் வரலாற்றுப் பாடங்களில்
முதுகலைப் பட்டம் பெற்றவர். பல்வேறு பல்கலைக்கழகங்களில் பணியாற்றியவர்.

சா.வளவன், தன்னுடைய 21ஆம் வயதில் 1977-இல் பச்சையப்பன் கல்லூரியில் பேராசிரி யராகப்
பணியில் சேர்ந்து 36 ஆண்டுகள் பணி யாற்றினார். இலக்கணம், மொழியியல், இலக் கியம்,
ஆராய்ச்சி, வரலாறு என அனைத்துக் களங்களிலும் பயிற்றுவித்தார். 1984 முதல் ஆய்வியல்
நிறைஞராகவும், 1994 முதல் முனைவர் பட்ட நெறியாளராகவும் விளங்கினார்.

1970 முதல் பெண்ணியம், நாட்டுப்புறவியல், மொழியியல் எனப் பல்வேறு துறைகளில் 150-க்கும்
மேற்பட்ட ஆய்வுக் கருத்தரங்குகளில் தலைமை வகித்தும், பங்கேற்றும் வருகிறார். சென்னைப்
பல்கலைக் கழக முதுகலை மதிப் பீட்டுக்குழுத் தலைவராவும், தமிழ்நாடு பொதுத் தேர்வு
தேர்வாணைக்குழுவிற்கு வினாத்தாள் குறிக்கும் பணியையும் மேற்கொண்டிருந்தார்.

1987-இல் மலேசியாவில் நடைபெற்ற இரண் டாம் உலகத்தமிழ் மாநாட்டில் ‘உணர்வும் செயற் பாடும்
தேவை’ என்ற தலைப்பில் கட்டுரை வழங் கினார். 2014-இல் கோலாலம்பூரில் நடைபெற்ற ஒன்பதாவது
உலகத்தமிழ் மாநாட்டில் துணைத் தலைவராகப் பங்கேற்றார்.

‘விடியல்’ (சிறுகதைத் தொகுதி), பிள்ளைத் தமிழின் தோற்றமும் வளர்ச்சியும்’ (சிற்றிலக்கிய
ஆய்வு), ‘மாணிக்கவாசகர்’ (நாடக இலக்கியம்) ஆகிய நூல்களை தமிழுலகுக்கு வழங்கியுள்ளார்.

உலகத் திருக்குறள் உயராய்வு மையத்தின் ‘திருக்குறள் விருது’ (1997), சென்னை கம்பன்
கழகத்தின் ‘தமிழ்நிதி’ விருது (2013), சென்னைப் பல்கலைக் கழக மேனாள் துணைவேந்தர்
சுந்தரவடிவேலு 102ஆவது பிறந்த நாளில் ‘சாதனையாளர் விருது’ (2014) போன்ற
விருதுகளைப் பெற்றுள்ளார்.