பேராசிரியர் சுபாஷ் சந்திரபோஸ்

பேராசிரியர் சுபாஷ் சந்திரபோஸ்

Profession அறிஞர்

Biography

தஞ்சை ஒரத்த நாடு ஒக்கநாடு கீழையூர் சி.சண்முகம் (நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின்
மெய்க்காப்பாளர்களுள் ஒருவராகப் பணியாற்றியவர்) – பாக்கியத் தம்மாள் தம்பதியருக்கு 13.03.
1949 அன்று பிறந்தார்.

அவர் பிறந்த அடுத்த ஆண்டே (1950 -1969) பொருளீட்ட தந்தை சிங்கப்பூர் சென்று இருபது
ஆண்டுகள் அங்கேயே தங்கிவிட, தாயார் தன் மகனை தாயாய், தந்தையாய், ஆசானுமாய் வளர்த்தார்.

பூண்டி புட்பம் கல்லூரியில் புகுமுகக் கல்வியை முடித்து, பழநி பழனியாண்டவர் இந்தியப்
பண்பாட்டுக் கல்லூரியில் இளங்கலை (தமிழ்), மதுரை காமராசர் பல்கலைக் கழகத்தில் முதுகலை
(தமிழ்), அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் முதுகலை (மொழியியல்), மதுரை காமராசர்
பல்கலைக்கழகத்தில் ஆய்வியல் நிறைஞர் (எம்.ஃபில்), மற்றும் முனைவர் ஆகிய பட்டங்களைப்
பெற்றார்.

1982-இல் முனைவர் பட்டம் பெற்றது முதல் 1985 வரை தமிழ்ப் பல்கலைக் கழகத்தில் முதுநிலை
ஆய்வாளராகவும், அகராதித் துறை யில் சொல்திரட்டுநராகவும் பணியாற்றினார்.

1985-இல் திருவையாறு அரசர் கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராகச் சேர்ந்து 2008 வரை 23
ஆண்டுகள் பணியாற்றி பணி நிறைவு பெற்றார்.

பல மாணவர்கள் எம்.ஃபில், பிஎச்.டி பட்டங்களைப் பெறுவதற்கு நெறியாளராக
செயலாற்றியுள்ளார்.

தேச விடுதலைக்காகவும், சமூக விடுதலைக் காகவும் தஞ்சைப் பகுதியில் போராடி களப்பலி
யான வாட்டாக்குடி இரணியன், சாம்பவான் ஓடை சிவராமன்’ ஆகிய இருவரைப் பற்றிய இரண்டு
புதினங்களையும், தஞ்சை வேளாண் சமூக வாழ்க்கையைப் பற்றிய ‘பயிர் முகங்கள்’, ‘மலைப் பாம்பு
மனிதர்கள்’ உட்பட எட்டு புதினங்கள், இரண்டு கவிதைத் தொகுதிகள், ஆறு சிறுகதைத்
தொகுதிகள், ஒரு சிறுவர் நூல், மூன்று நாட்டுப்புற இலக்கிய நூல்கள், ஒரு சமுதாயவியல்
நூல் ஆகியவற்றை எழுதியுள்ளார்.

சுபாஷ் சந்திரபோஸ் முனைவர் பட்ட ஆய்வு மாணவராக இருக்கும்போதே 10.06.1979-இல் திருமணம்
நடைபெற்றது. மனைவி: விமலா. இவர்களுக்கு மாயக்கண்ணன், அழகுசிவம், மதன், இளமுருகன் என
நான்கு மகன்கள். பெற்றோர்களின் ஊக்கத்தினால் திருமணத் திற்குப் பிறகும் பயின்றார்.

பணி நிறைவுக்குப் பிறகு பல்கலைக் கழக நிதி நல்கைக் குழுவின் உதவியுடன் ‘தமிழ் இலக்
கணங்களில் வடமொழி இலக்கணத்தின் செல் வாக்கு’ எனும் ஆய்வேட்டினை முடித்துள்ளார். செம்மொழி
தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் நிதி உதவியுடன் ‘செம்மொழித் தமிழ் நூல்களில் வினைவழிப்
பெயர்கள்’ என்னும் தலைப்பில் குறுந்திட்ட ஆய்வுப் பணியை முடித்துள்ளார்.