| Profession | அறிஞர் |
|---|
கன்னியாகுமரி கேசவன்புதூர் கிராமத்தில் நா.நல்லபெருமாள் பிள்ளை -கோமதி தம்பதியருக்கு
05.03. 1949-இல் பிறந்தார்.
நாகர்கோவில் தென் திருவிவாங்கூர் இந்துக் கல்லூரியில் பி.யூ.சி., வேதியியலில் பி.எஸ்சி
பட்டம் பெற்றார். கல்லூரியில் ‘தேசிய மாணவர் படை’யில் இணைந்து, 1968-இல் குஜராத்
மாநிலம், ஜாம் நகர் எனும் ஊரில் இராணுவத்துடன் இணைந்து பயிற்சி பெறும் வாய்ப்பைப்
பெற்றார். அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் முதுகலைப் பட்டம் (1970-72) பெற்று,
அதேநேரத்தில் மொழியியல் துறையிலும் முதுகலைப் பட்டம் பெற்றார்.
இவரது துணைவியார் ச.விமலா, மதுரை டோக் பெரு மாட்டி கல்லூரியின் விரிவுரை யாளர்.
ந.நவின், ந.விசயன் என இரண்டு மகன்கள்.
1973-இல் மைசூரிலுள்ள இந்திய மொழிகளின் நடுவண் நிறுவனத்தில் பணியில் இணைந்த இவர்,
2009 வரை தமிழ்மொழிக்கும், மொழி கற்றல் கற்பித்தல், தொழில்நுட்பம் போன்ற துறை களுக்கும்
தன் அயராத பங்களிப்பை வழங்கிப் புகழ் பெற்றார். இந்திய மொழிகளின் நடுவண் நிறுவனத்தின்
தென்னிந்திய மொழிகள் பயிற்று மையத்தில் ஆராய்ச்சியாளராகப் பணியில் அமர்ந்து தமிழை
இரண்டாம் மொழியாகக் கொண்டு இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலிருந்து வரும் ஆயிரத்திற்கும்
மேற்பட்ட பள்ளி ஆசிரியர் மாணவர்களுக்குக் கற்பித்தார்.
ந.நடராசனார் தமிழ் இலக்கணம் தொடர்பாக ஏராளமான ஆய்வுக் கட்டுரைகளை ஆங்கிலத்திலும்
தமிழிலும் எழுதினார். சிங்கப்பூர், மலேயா, இலங்கை, மொரிஷியஸ், இந்தோனே சியா,
ரியூனியன் ஆகிய நாடுகளுக்குச் சென்று தமிழ்த் தொண்டாற்றியுள்ளார்.
1980-இல் ஒலி ஊடகம் முக்கியத்துவம் பெற்ற போது, அது பள்ளிக் கல்வியில் இடம்பெற வேண்டும்
என்ற குறிக்கோளை நிறைவேற்றும் வகையில் நடுவணரசு ஒவ்வொரு மாநிலத்தின் பள்ளிகளுக்கும்
விலையில்லாப் பொருளாக வழங்கியது. அதற்கான தமிழ், கன்னடம், தெலுங்கு. மலையாளம் ஆகிய
மொழிக் கல்விக் கான ஒரு திட்டத்தை உருவாக்கி அதன் இயக்குநராக ந.நடராசனாரை
நியமித்தது. அப்பணியை சிறப்பாக நிறைவேற்றினார்.
கணினி, ஒலிஒளி ஊடகங்கள் காலூன்றத் தொடங்கிய காலத்தில் ந.நடராசனார் பெங் களூரில் உள்ள
‘ஆப்பிள் சாஃப்ட்’ நிறுவனத்தின் பொறுப்பாளர் ந.அன்பரசன் துணையுடன், சிங்கப்பூர்த் தமிழ்
மாணவர்களுக்கென ‘செந்தமிழ் வரிசை’யில் 6 குறுந்தகடுகள் தயாரித்து வெளியிடப்பட்டன.
உலகத் தமிழாராய்ச்சி நிறு வனத்திற்காக ‘தமிழ் உலகம்’ என்ற பல்லூடகப் பாடப்பொருள்,
‘விஸ்டம் சாஃப்ட்’ நிறுவனத் துடன் 6ஆம் வகுப்பு ஆங்கிலப் பாடத்துக்கான இரு குறுந்தகடுகள்
வெளியிடப்பட்டன. இந்தி, சமஸ்கிருதம் தவிர்த்த 20 மொழிகளை இந்திய மொழிகளின் நடுவண்
நிறுவனத்தின் கிளை நிறுவனங்களில் பணியாற்றும் 40 மொழி விரிவுரையாளர்களுக்குப் பயிற்சி
அளித்துப் பாடங்களையும் தயாரித்து அளித்தார். பணிநிறைவுக்குப் பிறகும் பல்வேறு
பயிற்சிகளை வழங்கி வருகிறார்.