| Profession | அறிஞர் |
|---|
இராஜபாளையம் புத்தூர் கிராமத்தில் கனியப்பன்- முத்தம்மாள் தம்பதியருக்கு 11ஆவது மகனாக
பஞ்சாங்கம் பிறந்தார். இளமையிலேயே தந்தையை இழந்த 11 குழந்தைகளையும் தாய் தான்
காப்பாற்றினார்.
குடும்ப வறுமைகாரணமாக அண்ணன்கள் எல்லோரும் விவசாய வேலையில் ஈடு பட, இவர் மட்டும்
படிக்கச் சென்றார். விருதுநகர், செந்திக் குமார நாடார் கல்லூரியில் பி.யூ.சி. படித்து
முடித்தார். மதுரை தியாகராசர் கல்லூரியில் 1970-இல் இளங்கலை பட்டமும், சென்னை மாநிலக்
கல்லூரியில் தமிழில் முதுகலைப் பட்டமும் பெற்றார்.
திருமணமான ஓராண்டில் மனைவி இறந்தார்.
1973-இல் காரைக்காலில் உள்ள அரசு அறிஞர் அண்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில்
‘டியூட்டர்’ பணியில் சேர்ந்தார். விரிவுரையாளராக பதவி உயர்வு பெற்று, 1977-இல்
புதுச்சேரியிலுள்ள தாகூர் கலைக் கல்லூரியில் பணியாற்றினார். இக் காலகட்டத்தில்
‘சிலப்பதிகாரத் திறனாய்வுகள் ஓர் ஆய்வு’ என்ற தலைப்பில் ஆய்வு செய்து முனைவர் பட்டம்
பெற்றார். 1988-இல் மீண்டும் அறிஞர் அண்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மூன்றாண்டுகள்
பணியாற்றினார். 1991-இல் புதுச்சேரி பாரதிதாசன் மகளிர் கல்லூரியில் பணியாற்றி, பின்னர்
காஞ்சி மாமுனிவர் பட்ட மேற்படிப்பு மையத்திற்கு பணி மாற்றலாகி 2011-இல் பணிநிறைவு
பெற்றார்.
‘ஒட்டுப்புல்’ (1982) இவரது முதல் கவிதை நூல். கவிதைகள், நாவல்கள், மொழிபெயர்ப்புகள்,
திறனாய்வுகள் என 36 நூல்களை இதுவரை எழுதியுள்ளார். இவரது ‘பெண் மொழி புனைவு’ என்ற
நூலுக்கு திருப்பூர் தமிழ்ச் சங்க விருதும் (1999), ‘இலக்கியத்தின் இருப்பியலும் திறனாய்
வின் இயங்கியலும்’ என்ற நூலுக்கு புதுச்சேரி அரசின் ‘கம்பன்’ விருதும், ‘பயணம்’ கவிதை
நூலுக்கு காசியூர் ரெங்கம்மா இலக்கிய விருதும் (2001), கணையாழியில் வெளிவந்த ஒரு
கட்டு ரைக்காக ‘கணையாழி’ பரிசையும் (2012) பெற்றுள்ளார்.
புதுதில்லியில் உள்ள சாகித்ய அகாதமியின் பொதுக்குழு உறுப்பினராக (2002-2007) ஐந்து
ஆண்டுகள் பணியாற்றினார். அப்போது புதுவையில் சாகித்ய அகாதமி நூலகமும், விற்பனை
மையமும் தொடங்கப்பப்டடன.
டாக்டர் அம்பேத்கர் பிறந்தநாள் விழா, பாரதி 125-வது பிறந்த நாள் விழா ஆகியவற்றில்
உறுப்பினராக செயலாற்றியுள்ளார்.
‘கதைசொல்லி’ இதழைப் பொறுப்பேற்று நடத்தினார். ‘பாரதி அன்பர்கள் அறக்கட்டளை’ தொடங்கி,
அதன் தலைவராகவும், புதுச்சேரி இலக்கியப் பன்னாட்டுக் கழகத் தலைவராகவும் பணியாற்றிக்
கொண்டிருக்கிறார்.
இவரது நெறியாள்கையில் 65 ஆய்வாளர்கள் இளமுனைவர் (எம்.ஃபில்.), 11 ஆய்வாளர்கள் முனைவர்
(பிஎச்.டி.) பட்டம் பெற்றுள்ளனர்.