| Profession | அறிஞர் |
|---|
தஞ்சை கும்பகோணம் திருப்பனந்தாள் எனும் ஊரில் ச.தெ.துரை சாமி – மங்களம்மாள்
தம்பதியருக்கு 31.12.1948 அன்று பிறந்தார்.
திருப்பனந்தாள் செந்தமிழ்க் கல்லூரியில் 1965 முதல் 1969 வரை வித்துவானுக்குப் பயின்றார்.
இக்காலகட்டத்தில் திரு நெல்வேலி தென்னிந்திய தமிழ்ச் சங்கம் நடத்திய புலவர் தேர்வில் இரு
முறை முதனிலையில் தேர்ச்சி பெற்றார். புலவர் பயின்றவர்கள் முதுகலைத் தமிழில்
சேருவதற்குப் பாலமாக அமைந்த பி.ஓ.எல்., பட்டப் படிப்பில் 1969-70இல் பயின்றார்.
1970-72 காலகட்டத்தில் திருப்பனந்தாள் செந்தமிழ்க் கல்லூரி ஓராண்டிற்கு மட்டும் இவரைப்
பேராசிரியராகப் பணியிலமர்த்தியது.
அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் 1972-74 கல்வியாண்டில் முதுகலை தமிழில் பயின்று முதல்
வகுப்பில் முதல் தகுதியில் தேர்ச்சியடைந்ததற்காக தங்கப் பதக்கம் பெற்றார்.
தமிழ்த்துறைத் தலைவர் வ.சுப.மாணிக்கனார் இவரை 1974-இல் தமிழ்த் துறையில்
விரிவுரையாளராகப் பணியில் அமர்த்தினார். பல்கலைக் கழக ஆணையின்படி கிராமங்களுக்குச்
சென்று சொற்பொழிவாற்றுதல் என்ற நிலை நடை முறைப் படுத்தப்பட்டது. அதன்படி தனிப்பாடல்
திறன் பற்றி கிராமங்களில் சொற்பொழிவு ஆற்றினார்.
‘புறப்பொருள் வெண்பா மாலை’ எனும் தலைப்பில் ஆய்வு செய்து எம்ஃபில் பட்டமும், ‘தமிழ்க்
கல்வெட்டுகளில் புறத்திணைக் கூறுகள்’ என்ற தலைப்பில் ஆய்வு செய்து 1982இல் முனைவர்
பட்டமும் பெற்றார். இவ்வாய்வு பல்கலைக்கழகப் பதிப்புத் துறையின் வாயிலாக நூலாக
வெளிவந்துள்ளது. இடையில் பி.எட். பட்டமும் பெற்றார்.
செட்டி நாட்டரசர் அண்ணாமலை வள்ளல், முத்தையா வள்ளல், எம்.ஏ.எம். இராமசாமி ஆகிய மூவரின்
கல்வி சார்ந்த பல்கலைப் பணி களைத் தொகுத்து உரைநடை இலக்கியமாக ‘இணைவேந்தர் மூவர்’ எனும்
நூலாகவும், ‘தமிழ் வளர்த்த சான்றோர்கள்’, ‘கனவுப் பல்லக்கு’ (கவிதைத் தொகுதி),
‘முத்தமிழறிஞர் கலைஞர் பிள்ளைத் தமிழ்’, ‘இணைவேந்தர் டாக்டர் எம்.ஏ.எம். இராமசாமி
தமிழ்விடு தூது’, ‘தில்லைச் சிவகாமியம்மை பிள்ளைத் தமிழ்’ , ‘கல்விக்காவலர்
பேராசிரியர் டாக்டர் சை.வே. சிட்டிபாபு’ ஆகிய நூல்களையும் எழுதியுள்ளார்.
பேராசிரியரின் துணைவியார் பி.நாகரத் தினம். இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள். மகன் 27
வயதில் காலமானார். மகள் லட்சுமிப்ரியா மருத்துவராகப் பணியாற்றுகிறார்.
2009-இல் பேரா. துரை.பட்டாபிராமன் பணி நிறைவு பெற்றார். இவரது படைப்புகளை எம்ஃபில்,
பிஎச்.டி. மாணவர்கள் ஆய்வு செய்துள்ளனர். பல்கலைக் கழக மாணவர்களுக்கு இவரது படைப்புகள்
பாடநூல்களாக உள்ளன.