| Profession | அறிஞர் |
|---|
திருவாரூர் குடவாசலில் ஒரு பழம்பெருமை வாய்ந்த குடும்பத்தில் 22.9.1948 அன்று
பிறந்தார்.
இவரது துணைவியார் கண்ணம்மா. இத்தம்பதியருக்கு ஸ்ரீவித்யா, அஞ்சனா என இரு மகள்கள்.
குடந்தை அரசு கல்லூரியில் விலங்கியலில் பட்டம் பெற்ற பாலசுப்பிரமணியன், அரசு வேலைக்குச்
செல்லாமல் பள்ளி, கல்லூரிகளுக்கான அறிவியல் உபகரணங்கள் விற்கும் ஒரு நிறுவனத்தை
உருவாக்கி சில ஆண்டுகாலம் நடத்தினார்.
பின்னர், அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் எம்.ஏ. (வரலாறு) பட்டமும், மதுரை காமராஜர்
பல்கலைக் கழகத்தில் எம்.ஃபில் பட்டமும், தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டமும்
பெற்றார்.
1970-இல் ‘கல்லெல்லாம் கதை சொல்லும் தாராசுரம்’ எனும் இவரது முதல் ஆய்வுக் கட்டுரை
‘தினமணிச் சுடரில் வெளியானது. ‘குடவாயிற் கோட்டம்’, ‘கருணாகரத் தொண்டை மான்’,
‘திருவாரூர் திருக்கோயில்’, ‘சோழ மண்ட லத்து வரலாற்று நாயகர்களின் சிற்பங்களும்
ஓவியங்களும்’ , ‘ஆரூர்ஆழித்தேர்’, ‘நந்திபுரம்’ , ‘தமிழ் மன்னன் கோனேரிராயன்’, ‘தமிழக
கோயிற்கலை மரபு’, ‘தஞ்சாவூர்: கி.பி.600 – 1850’, ‘தஞ்சை பெரிய கோவில்’, ‘தஞ்சை
நாயக்கர் வரலாறு கி.பி. 1535- 1675’, ‘குடமுழா’ ‘தமிழக கோபுரக் கலை மரபு’,
‘இராஜராஜேச்சரம்’, ‘தாரா சுரம் ஐராவதீஸ்வரர் திருக்கோயில்’, ‘கலையியல் இரசனைக்
கோட்பாடுகள்’, ‘கபிலக்கல்’ ஆகிய 18 நூல்களை எழுதியுள்ளார்.
உலகப் புகழ் பெற்ற தஞ்சாவூர் அரண்மனை நூலகமான ‘சரஸ்வதி மகால்’ நூலகத்தில் 1979 இல்
காப்பாட்சியராகவும், நுண்படத் துறை வல்லுநராகவும் பணியில் சேர்ந்தார். பின்னர்
அந்நூலகத்தின் வெளியீட்டு மேலாளராகப் பதவி உயர்வு பெற்று 2006-ஆம் ஆண்டு பணி நிறைவு
பெற்றார். இவர்தம் பணிக் காலத்தில் பல அரிய சுவடிகளை இந்நூலகத்திற்குக் கொண்டு சேர்ப்
பித்ததோடு, பல அரிய நூல்களை அச்சிட்டு வெளியிட்டார்.
பணி நிறைவுக்குப் பின் முழுநேர வரலாற்று ஆய்வாளராக, கோயிற்கலையியல் வல்லுநராக,
சிறந்த தமிழ்ப் பற்றாளராக இயங்கி வருகிறார். 5-வது உலகத் தமிழ் மாநாடு, உலகத் தமிழ்ச்
செம் மொழி மாநாடு ஆகியவற்றில் கட்டுரைகள் வாசித்துள்ளார். உலகின் பல்வேறு நாடுகளுக்குச்
சென்று ஆய்வுக் கட்டுரைகள் வாசித்ததுடன், சொற்பொழிவுகளும் நிகழ்த்தியுள்ளார்.
‘திருக்கோயில் ஆய்வுப் பேரொளி’, ‘திருவருட் செம்மணி’, ‘இராஜராஜன் விருது’ ,
‘கரிகாற் சோழன் விருது’, வரலாற்று நாயகர், ‘குறள்நெறிச் செம்மல்’, வாழ்நாள்
சாதனையாளர்’, ‘திருக் கோயில் கலைச்செல்வர்’ ‘ஆனந்தகுமாரசாமி கவின் கலை விருது’,
‘மண்ணின் சிறந்த படைப்பாளி’ போன்ற பல உயரிய விருதுகளையும் பட்டங் களையும்
பரிசுகளையும் பெற்றுள்ளார்.
மேலும், ‘தஞ்சை பெரிய கோயில் குடமுழுக்கு விழா மலர்’ (1997), அரசு சார்பில்
‘மகாமகப் பெருவிழா சிறப்பு மலர்’கள் (1992, 2004) ஆகிய வற்றைப் பதிப்பித்துள்ளார்.