அப்துல்காதர்

அப்துல்காதர்

Profession அறிஞர்

Biography

தேனி சின்னமனூரில் திவான் மைதீன்-பாத்திமுத்து தம்பதியருக்கு 18.06.1948 அன்று
பிறந்தார்.

சின்னமனூரில் கிருஷ்ண அய்யர் உயர்நிலைப் பள்ளியில் உயர்நிலைக் கல்வி வரை பயின்ற அப்துல்
காதர், பள்ளி இலக்கிய மன்றக் கவிதைப் போட்டியில் கவிஞர் மீரா கரங்களால் பரிசுப் பெற்றார்.

மதுரை காமராசர் கல்லூரியில் பிஎஸ்.சி., திருச்சி தேசியக் கல்லூரியில் எம்.ஏ., சென்னைப்
பல்லைக் கழகத்தில் எம்.ஃபில், மலேயா பல்கலைக் கழகத்திலும் (1998), சென்னைப் பல்கலைக்
கழகத்திலும் (2004) இரு டாக்டர் பட்டங்கள் ஆகியவற்றைப் பெற்றுள்ளார்.

1970-இல் பேராசிரியராக மதுரை வக்ஃப் வாரியக் கல்லூரியில் சேர்ந்தார். வாணியம்பாடி
இசுலாமியக் கல்லூரியில் 1971- 2000 இல் பேராசிரியராகவும், 2000-06 இல் தமிழ்த்
துறைத் தலைவராகவும் பணியாற்றினார்.

இவரது கவிதைகள் அன்னம் விடு தூது, சோதனை, கண்ணதாசன், கடிதம், காதரை, வானம்பாடிகள்,
தீபம், ஆனந்த விகடன், குமுதம், சங்கொலி, இனி, நந்தன் ஆகிய இதழ்களில் வெளிவந்துள்ளன.

1974-இல் திருமணம். மனைவி: சல்மாபேகம். ஒரே மகன்: அ.முகமது தாரிக் ஹூசைன்.

கவிமாமணி அப்துல் காதர் பதினோரு கவிதை நூல்களையும், ஏழு உரைநடை நூல் களையும்
எழுதியுள்ளார்.

1989-இல் உலகத் தமிழ்க் கவிஞர் மன்றத்தின் ‘கவிமாமணி விருது’, 1990-இல் தமிழக அரசின்
‘பாரதிதாசன் விருது’, 1992-இல் குடியேற்றம் முத் தமிழ்ச் சுவைச் சுற்றத்தின்
‘கவிமுரசு’, 1999-இல் வேலூர் பாரதி நற்பணி மன்றத்தின் ‘கவியருவி’, 2001-இல் வெட்டு
வானம், அறுபத்து மூவர் சமரச சன்மார்க்கச் சங்கத்தின் ‘சிலம்புச் சொற்கோ’, 2004-இல்
இசுலாமியத் தமிழ் இலக்கியக் கழகத்தின் ‘தமிழ் மாமணி’ ஆகிய விருதுகளைப் பெற்றுள்ளார்.

சென்னைப் பல்கலைக் கழகத்தின் கல்விக்குழு உறுப்பினர், ஆட்சி மன்ற உறுப்பினர், திருவள்ளுவர்
பல்கலைக் கழகத்தின் பாடத்திட்டக்குழுத் தலைவர், செனட் உறுப்பினர், வி.ஐ.டி. பல் கலைக்
கழகத்தின் போஸ்ட் டாக்டர் ரிசர்ச் சென்டர் மேல் ஆய்வுக்குழு உறுப்பினர், சிகரம் மேல்நிலைப்
பள்ளி மற்றும் சிகரம் ஆசிரியர் பயிற்சிப் பள்ளியின் நிறுவனர் ஆகிய பொறுப்புகளை வகித்து
வருகிறார்.

இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், புருனை, அரபு
நாடுகள், தாய்லாந்து ஆகிய நாடுகளுக்கு இலக்கிய அமைப்பின் வாயிலாக சொற்பொழிவும் ஆய்வுக்
கட்டுரைகளும் சமர்ப்பித்துள்ளார்.

1965-இல் இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் கலந்து கொண்டு மதுரை, மத்திய சிறையில்
இருந்ததையும், தமிழ் ஈழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் தம்பி பிரபாகரன் அவர்களுடன்
இணைந்து களப்பணி ஆற்றியதையும் பெருமிதமாகக் கருதுகிறார்.

தனது 21-வது வயதில் சிவகாமியைக் காதல் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இரு
ஆண், இரு பெண் என நான்கு குழந்தைகள்.

15-வது வயதில் வானொலிக்காக எழுதத் தொடங்கினார். 16ஆவது வயதில் இவர் எழுதிய கவிதை
‘ஒரு பிருந்தா வனத்தின் இரட்சிப்பு’. எனினும், 1977இல் ‘வானம்பாடி’ இதழில் எழுதத்
தொடங்கிய பிறகுதான் இவரது இலக்கிய வாழ்க்கை தொடங்குகிறது எனலாம்.

1979-இல் நடைபெற்ற மலேசியாவின் முதலாவது புதுக்கவிதைக் கருத்தரங்கு புதுக்கவிதை
போட்டியில் ‘நித்திய கதாநாயகர்கள்’ எனும் இவரது கவிதை முதல் பரிசைப் பெற்றது.
இக்கருத்தரங்கில் வெளியிடப்பட்ட ‘புள்ளி களைப் புறக்கணிக்கும் புதுக்கோலங்கள்’ எனும்
கவிதைத் தொகுதியில் இவரது ‘ஆடும் படகு களின் வாடும் புள்ளிகள்’ எனும் கவிதையும்
இடம்பெற்றிருந்தது.