பேராசிரியர் கு.மோகனராசு

பேராசிரியர் கு.மோகனராசு

Profession அறிஞர்

Biography

சென்னை, ஆதம்பாக்கத்தில் மா.குப்புசாமி – தேசம்மாள் தம்பதியருக்கு 12.08.1947 அன்று
பிறந்தார்.

பள்ளிப்பருவத்தில் வகுப்புத் தலைவராகவும், ஆசிரியர் இல்லாத போது பாடம் நடத்தும் மாணவ
ஆசானாகவும் விளங்கினார். வீட்டுக்கு வந்த பிறகும் திண்ணையில் பாடம் நடத்தினார். இவரது
ஆர்வத்தை அறிந்த காவல் துறை அதிகாரி காவல் நிலையத்தி லேயே மாணவர்களுக்கு பயிற்றுவிக்க
ஏற்பாடு செய்து கொடுத்தார். தண்டையார் பேட்டை கொ.சி.சங்கரலிங்க நாடார்
மேல்நிலைப்பள்ளியில் படிக்கும் போது (1965) இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் பங்கேற்றார்.

சென்னை, பழைய வண்ணாரப்பேட்டையிலுள்ள தியாகராயர் கல்லூரியில் புகுமுக வகுப்பும்,
கணிதத்தில் இளம் அறிவியல் பட்டமும் பெற்றார். இக்காலகட்டத்தில் தம் பெயரை எழிலரசு என
சூட்டிக்கொண்டு கவிதைகள் எழுதத் தொடங்கினார். இவரது முதல் கவிதை ‘சிந்தனையாளன்’ இதழில்
வெளியானது. ‘நெய்தல்’ எனும் கையெழுத்து ஏட்டை நடத்தியதுடன், சில புத்தகங்களைக் கொண்டு
‘எழிலன் நூலகம்’ உருவாக்கி பிறரை இலவசமாகப் படிக்கச் செய்தார்.

பட்டப் படிப்பு முடிந்தவுடன் தீப்பெட்டித் தொழிற்சாலை ஒன்றில் செக்கராகப் பணியாற்றி னார்.
பின்னர் படிப்பில் மீதான ஆர்வத்தில் வீட்டின் மாடியில் சிறு குடில் அமைத்து பி.யூ.சி
வரையிலான மாணவர்களுக்கு பாடம் சொல்லிக் கொடுத்து, சிறிதளவு வருமானம் கிடைக்கப்
பெற்றார்.

இராயபுரம், தண்டையார்பேட்டை, வண் ணாரப்பேட்டை பகுதிகளிலுள்ள இளைஞர் களைத் திரட்டி
‘அன்னை கலை இலக்கிய நற்பணி மன்றம்’ தொடங்கி திறம்பட நடத்தினார்.

மாநிலக் கல்லூரியில் தமிழில் முதுகலைப் பட்டம் பெற்றார். மானிடவியல் பட்டயம், மொழியியல்
சான்றிதழ், புவியியல் பட்டயம், உயர்கல்வியில் பட்டயம், சமசுகிருதம் பட்டயம், அகராதியியல்
சான்றிதழ் பெற்றார். ‘தொல்காப் பியமும் திருக்குறளும் ஓர் ஒப்பாய்வு’ எனும் தலைப்பில் ஆய்வு
செய்து முனைவர் பட்டம் பெற்றார்.

சென்னைப் பல்கலைக் கழகத் திருக்குறள் ஆய்வுப் பகுதியில 1973-இல் ஆராய்ச்சி துணைவராகச்
சேர்ந்தார். 1974-இல் விரிவுரையாளர் ஆனார். 1980-இல் தமிழ் இலக்கியத் துறையின்
விரிவுரையாளர் பணிகளோடு திருக்குறள் பணியையும் ஏற்றார். 1990-இல் 43 நாள்கள் துறைத்
தலைவர் (பொறுப்பு) ஆனார். 2002-0 8இல் கிறித்தவத் தமிழ் இலக்கியத் துறையின்
பேராசிரியர் (பொறுப்பு) பணியை ஏற்றார். இவரது வழிகாட்டுதலில் 15 பேராசிரியர்கள்
மற்றும் மாணவர்கள் முனைவர் பட்டம் பெற்றனர்.

150 நூல்களை எழுதியுள்ளார். சிங்கப்பூர், மலேசியா ஆகிய நாடுகளுக்குச் சென்று
திருக்குறள் தொண்டாற்றியுள்ளார்.