அனுராதா ரமணன்

அனுராதா ரமணன்

Profession எழுத்தாளர்

Biography

தஞ்சாவூரில், 29.06.1947 அன்று பிறந்தார். இளங்கலை பட்டம் பெற்ற இவர், தமிழ், ஆங்கிலம்
இரண்டிலும் புலமை பெற்றார்.

18-ஆம் வயதில் இவருக்குத் திருமணமானது. ஆனால், இவரது 28-ஆம் வயதில் கணவர் ரமணன்
இறந்துவிட்டார். சுயவாழ்க்கையில் தனக்கு ஏற்பட்ட கசப்பான பல்வேறு அனுபவங்களைப் பின்னர் தான்
பணியாற்றிய இதழ்களில் எழுதி வாசகர்களின் கண்களில் கண்ணீரை வரவழைத்துள்ளார். இவருக்கு
சுபா, சுதா என இரு மகள்கள்.

சிறு வயதிலிருந்தே ஓவியம் வரைவதில் திறமையும் ஆர் வமும் கொண்ட இவர், சென்னை
எழும்பூரில் உள்ள ஓவியக் கல்லூரியில் சேர்ந்து முறையாக ஓவியம் பயின்றார். தேர்வு
சமயத்தில் வலது கையில் எலும்பு முறிவு ஏற்பட்டதால் இடது கையாலும் ஓவியம் வரைந்து
தேர்ச்சியடைந்தார்.

‘இண்டியன் ஹவுஸ் ஒஃப்’, ‘மங்கையர் மலர்’, அதன் இந்திப் பதிப்பு போன்ற இதழ்களில் லேஅவுட்
ஓவியராகப் பணியாற்றினார். பின்னர், அனுராதா ரமணனின் படைப்பாற்றலை அறிந்த ‘மங்கை’
இதழாசிரியர், அவ்விதழில் பணியாற்றும் வாய்ப்பை வழங்கினார்.

1977-இல் தொடங்கிய அனுராதா ரமணனின் இலக்கியப் பயணத்தில் கடந்த 30 ஆண்டுகளில் 800
புதினங்களையும், 1,236 சிறுகதைகளையும் எழுதியுள்ளார். இவரது பெரும்பான்மை படைப்
புகள் குடும்பத்தின் அன்றாட நிகழ்வுகளை மையமிட்டிருக்கும். பெண்ணியம், சாதியம், ஆன்மீகம்,
சமூகம் உள்ளிட்ட பலவற்றை தனக்கே உரிய பாணியில் எழுதியிருக்கிறார்.

தினமலர் ‘வாரமலர்’ இதழில் ‘அன்புடன் அந்தரங்கம்’ பகுதிக்கு பதினைந்து ஆண்டுகள்
வாசகர்களின் பிரச்சனைகளுக்குச் சரியான தீர்வுகளை வழங்கியுள்ளார்.

இவரது ‘சிறை’ சிறந்த சிறுகதைக்கான தங்கப் பதக்கத்தை வென்றது; அதே பெயரில் திரைப்
படமாகவும் வெளியானது. ‘கூட்டுப்புழுக்கள்’, ‘மலரின் பயணம்’, ‘ஒரு வீடு இரு வாசல்’
ஆகிய புதினங்கள் தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய வற்றில் திரைப்படங்களாக்கப்பட்டன. இவற்றுள்
கே.பாலசந்தர் வெளியிட்ட ‘ஒரு வீடு இரு வாசல்’ 1991-ஆம் ஆண்டுக்கான சிறந்த திரைப்படமாக
தேர்வு செய்யப்பட்டது. மேலும், இவர் எழுதிய ஒரு கதையை அடிப்படையாகக் கொண்டு தெலுங்கில்
தயாரிக்கப்பட் ‘ஒக பார்ய கதா’ திரைப்படம் ஐந்து ‘நந்தி விருது’களைப் பெற்றது.
‘அர்ச்சனைப் பூக்கள்’, ‘பாசம்’, ‘கனாக் கண்டேன் தோழி’ ஆகிய சிறுகதைகள், தொலைக்காட்சித்
தொடர்களாக ஒளிபரப்பாகின.

அன்றைய முதல்வர் எம்.ஜி.இராமச்சந்திரன் இவருக்கு ‘தங்கப்பதக்கம்’ வழங்கி கௌரவித்தார்.
‘இராஜீவ் காந்தி விருது’ பெற்ற இவருக்கு ‘நாவல் களின் ராணி’ எனும் பட்டம் தரப்பட்டது.
வாழ்விலும், தோற்றத்திலும், எழுத்திலும் கம்பீர மாக வலம் வந்த அனுராதா ரமணன், இதய நோய்
காரணமாக 16.05.2010 அன்று காலமானார்.