ந.க.மங்களமுருகேசன்

ந.க.மங்களமுருகேசன்

Profession அறிஞர்

Biography

மதுரை திருமங்கலத்தில் ந.கந்தசாமி – கவுந்தரி தம்பதியருக்கு 15.06.1943-இல்
பிறந்தார். பாண்டிய குலசத்திரிய நாடார் தொடக்கப் பள்ளியில் கல்வியைப் பயின்றார்.

மதுரைக் கல்லூரியில் இளங்கலை (பொருளாதாரம்) பட்டமும், சென்னை பச்சையப்பன் கல்லூரியில்
முதுகலை (வரலாறு) பட்டமும் பெற்றார்.

1970-இல் அத்தை சுப்பம்மாள் (என்கிற) வேலம்மாள் -பொன்னையா தம்பதியரின் மகள் ராஜம் இவரது
வாழ்க்கைத் துணையானார். இத்தம்பதியருக்கு ‘ராஜேசுக் கந்தன்’ என்றொரு மகன்; ‘தென்றல்’
என்றொரு மகள்.

எம்.ஏ., எம்.லிட்., எம்.எட்., பிஎச்.டி., (வரலாறு), பி.எச்.டி., (கல்வியியல்)
பட்டங்களையும், வடமொழியில் பட்டயமும், ஆங்கிலத் தட்டச்சில் உயர் நிலையும், ஆங்கிலச்
சுருக்கெழுத்தில் முதல் நிலையும் தேர்ச்சி பெற்றிருந்தார். ஆகவே, மதுரை மாவட்ட
காவல்துறை கண் காணிப்பாளர் அலுவலகத்தில் தட்டச்சர் பணி கிடைத்தது.

பின்னர், சேலம் அரசுக் கல்லூரியில் துணைப் பேராசிரியராக அயற் பணியில் நியமனம் பெற்றார்.
1969-இல் மாநிலக் கல்லூரி யில் துணைப் பேராசிரியராக பணியாற்றினார். சென்னைப் பல்கலைக்
கழகத்தில் 1.7.1984 முதல் 30.6.2003 வரை நிலையான பணியில் அமர்ந்து பணியாற்றி
1.7.2003இல் பணிநிறைவு பெற்றார்.

பணிநிறைவுக்குப் பின்பு பல்கலைக் கழக எம்.ஃபில் திட்ட ஒருங்கிணைப்பாளராக அஞ்சல் வழிக்
கல்வி இயக்குநரால் நியமனம் பெற்று 23.7. 2003 முதல் 7.1.2004 வரை பணியாற்றினார்.
சேலம் விநாயகா மிஷன் பல்கலைக் கழகத்தில் பதவியில் ஓராண்டு பணியாற்றினார். ஐ.ஏ.எஸ்.,
ஐ.பி.எஸ். தேர்வு எழுதும் மாணவர்களுக்குப் பயிற்சி அளித்து வருகிறார்.

15-ஆம் வயதில் இவர் எழுதிய ‘நடிகை பெற்ற பிள்ளை’ எனும் சிறுகதை ‘கலைப்பொன்னி’ இதழில்
வெளியானது. பின்னர் விடுதலை, கழககுரல், குமுதம், ஆனந்தவிகடன், ஜூனியர் விகடன்,
வாசுகி, விண்நாயகன் தேவி, பெண் மணி, ஆகியவற்றில் தொடர்ந்து எழுதி வந்துள் ளார்.
150க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள் ளார்.

1987-இல் ‘சோழர் ஆட்சிமுறை’, 1996-இல் ‘காவிரி நிலா’, 2000-இல் ‘சுற்றுச்சூழல் பாது
காப்பு’, 2009-இல் ‘தொண்டில் உயர்ந்த தூயவர் அன்னை ஈ.வெ.ரா. மணியம்மை’ ஆகிய
நூல்களுக்குத் தமிழக அரசின் சிறந்த நூலுக்கான பரிசைப் பெற்றார். ஸ்ரீராம் – அமுதசுரபி
இணைந்து வழங்கிய ‘பாரதி இலக்கியச் செல்வர்’ விருது, சென்னைப் பல்கலைக் கழகத் தமிழ்
மன்றத்தின் தங்கப்பதக்கத்துடன் கூடிய ‘தமிழ்க் கலைச் செம்மல்’ விருது, திராவிடர் கழகத்தின்
பெரியார் விருது (2010) ஆகியவற்றையும் பெற்றுள்ளார்.

ந.க.மங்களமுருகேசனின் நூல்களை ஆய்வு செய்து மூவர் எம்.ஃபில் பட்டம் பெற்றுள்ளனர்.