| Profession | அறிஞர் |
|---|
புதுச்சேரியில் 1942-இல் பிறந்தார். பெற்றோர்: பொ.இரத்தினவேலு -ஜெயலட்சுமி.
இர.இரவீந்திரநாத் இவரது இயற்பெயர்.
புதுச்சேரியிலுள்ள கலவைக் கல்லூரியில் கல்லூரிப் படிப்பை முடித்து, மின் துறை வரி
வசூலாளர் பணியில் சேர்ந் தார். அக்கால கட்டத்திலேயே கலை, இலக்கியம், நாடகம், திரைப்படப்
பணி ஆகிய வற்றில் ஈடுபட்டார். பின்னர் 1999-இல் அறுவை சிகிச்சை காரணமாக, விருப்ப
ஓய்வு பெற்று, தன்னை முழுமையாக கலை, இலக்கியத் துறையில் ஈடுபடுத்திக் கொண்டார்.
இவரது துணைவியார் சந்திரா இரவீந்திரநாத். ஒரு மகன், இரு மகள்கள்.
1960-இல், 18-ம் வயதில் ‘குற்றவாளி யார்?’ எனும் இவரது முதல் நாடகம் அரங் கேறியது.
1968- இல் ‘இப்படியும் ஓர் இதயமா?’ எனும் நாடகம் புதுவை கம்பன் கலையரங்கில் தொழில்
முறை நாடகமாக நிகழ்த்தப்பட்டது. இதுவரை 40 மேடை நாடங்களையும், 1 ஒலி ஒளி
நாடகத்தையும், 2 வானொலி நாடகங்களையும் நிகழ்த்தியுள்ளார்.
1971-இல் ‘புகுந்த வீடு’ எனும் திரைப்படத்தில் இவர் எழுதிய புகழ்பெற்ற “செந்தாமரையே
செந்தேனிதழே பெண்ணோவியமே கண்ணே வருக” பாடலுக்கு, சிறந்த பாடலாசிரியருக்கான
விருது வழங்கப் பெற்றார். மேலும், ‘தென்றல் சுடுவ தில்லை’ திரைப்படத்திற்கு திரைக்கதை,
வசனத் துடன் பாடல்களையும் எழுதினார். பல்வேறு திரைப்படங்களுக்கு கதை விவாதத்தில்
பங்கேற்றிருக்கிறார்.
189 சிறுகதைகள், 1 நெடுங்கதை, 5 நூல்கள், 78 மேடைப் பாடல்கள், 63 பக்திப் பாடல்கள்
ஆகியவற்றை இயற்றியுள்ளார்.
இவரது ‘தடுப்புச்சுவர்கள்’ சிறுகதைத் தொகுதி பேரா.சோமசுந்தரி லதாவின் மொழி
பெயர்ப்பில் ‘ஷிஸீணீரீ கீணீறீறீs’ எனும் நூலாக வெளி வந்துள்ளது. இதே நூல் தேசியமணி இராம
சாமியின் மொழிபெயர்ப்பில் இந்தியிலும் வெளிவந்துள்ளது.
இவருடைய படைப்புகள் சென்னை இலக்கிய பீடம் பரிசு, புதுவை அரசின் ‘கலை பண்பாட்டு
துறை’ப் பரிசு, பாரிசு அறிஞர் அண்ணா நூற்றாண்டு விழா பரிசு, புதுவை அரசின் கம்பர்
இலக்கிய விருது, புதுச்சேரி மூவொரு கடவுள் அறக்கட்டளையின் ஞானராஜா மகிமை செல்வியின்
இலக்கிய முதற் பரிசு, தியாகதுருகம் பாரதியார் தமிழ்ச் சங்கத்தின் முதற் பரிசு ஆகிய
வற்றைப் பெற்றுள்ளன.
இவர் ‘சிறுகதைச் சிற்பி’, ‘மனிதநேய முரசு’, ‘இலக்கியச் செம்மல்’, ‘தமிழ்ச் செம்மல்’,
‘சீர்மிகு சிற்றிதழ் எழுத்தாளர்’, ‘பாவலர்’ போன்ற பல பட்டங்களால் சிறப்பிக்கப்படுகிறார்.
கவியரசு கண்ணதாசன் வாழ்நாள் சாதனையாளர் விருதையும் பெற்றுள்ளார்.
இன்றைக்கும் இவர் தமது கலை இலக்கியப் பணியைத் தொய்வின்றி தொடர்ந்து கொண்டிருக்கிறார்.