| Profession | அறிஞர் |
|---|
விழுப்புரம் கல்பட்டு கிராமத்தில் விசுவநாத அய்யர் – வாலாம்பாள் தம்பதியருக்கு
25.02.1942 அன்று பிறந்தார்.
1957-இல் மயிலம் சிவஞான பாலய சுவாமிகள் செந்தமிழ்க் கல்லூரியில் வித்துவான் பட்ட
வகுப்பில் சேர்ந்து, 1959-இல் சென்னைப் பல்கலைக் கழகத்தின் வித்துவான் புகுமுக வகுப்புத்
தேர்வில் முதலிடம் பெற்றார். 1961-இல் வித்துவான் நிறைநிலைத் தேர்வில் முதல் வகுப்பில்
தேர்ச்சி பெற்றார்.
1960-இல் அண்ணாமலைப் பல்கலைக் கழகம் நடத்திய சிவ ஞான சித்தியார் தேர்வில் திருப்பனந்தாள்
ஸ்ரீ காசி மடத்தின் முதல் பரிசு பெற்றார்.
வித்துவான் பட்டம் பெற்றவுடன் 1961-இல் விழுப்புரம் பள்ளியில் இடைநிலைத் தமிழாசிரியராகப்
பணியேற்றார். ஓராண்டு காலம் பணியாற்றி, பின்னர் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் சேர்ந்து
பி.ஓ.எல்., பி.எட்., பட்டங்களைப் பெற்றார்.
திருச்சி தேசிய கல்லூரியில் 1965- இல் பயிற்று நகராகப் பணியில் சேர்ந்தார்.
விரிவுரையாளர், தமிழ்த்துறைத் தலைவர், இணைப் பேராசிரியர், கல்லூரியின் துணை முதல்வர்
எனப் பணியுயர்வு பெற்று 1998- இல் கல்லூரியின் முதல்வரானார். இடையில் 1995-96 இல்
மாலை நேரக் கல்லூரி யில் பேராசிரியராகவும் பணியாற்றியுள்ளார். இவரது நெறியாள்கையில்
நால்வர் முனைவர் பட்டம் பெற்றுள்ளனர்.
கல்லூரி ஆண்டு மலர் பதிப்பாசிரியராக ஐந்து ஆண்டுகள், கல்லூரியிலுள்ள அருள்மிகு
ஜெயவிநாயகர் ஆலயத் தக்காராக இருபத் தைந்து ஆண்டுகள் பணியாற்றியுள்ளார்.
பூண்டி புஷ்பம் கல்லூரி, குடந்தை ஆடவர் கல்லூரி, சென்னைப் பல்கலைக் கழகம், மதுரை
காமராசர் பல்கலைக் கழகம் ஆகியவற்றில் இளங்கலை, முதுகலைப் பிரிவுகளுக்குப் பாடத் திட்டக்
குழு உறுப்பினராகவும், தலைவராகவும் பணியாற்றினார்.
தமிழகத்தின் பல பல்கலைக் கழகங்களிலும், தன்னாட்சிக் கல்லூரிகளிலும் வினாத்தாள் தயாரிப்புக்
குழுவின் தலைவராகவும், பல பல்கலைக் கழகங்களில் ஆய்வியல் நிறைஞர், முனைவர் பட்டத்
தேர்வாளராகவும், புறத் தேர்வாளராகவும், கேரள கோழிக்கோடு பல்கலைக் கழகத் தமிழ்த்
தேர்வாளராகவும், தமிழக அரசின் அரசுப் பணியாளர் தேர்வா ணையம் நடத்திய தேர்வுகளுக்கு
வினாத்தாள் தயாரிப்பாளராகவும், விடைத்தாள் மதிப்பீட்டாளராகவும், எஸ்.ஆர்.எம். அறிவியல்
மற்றும் தொழில்நுட்ப நிகர்நிலைப் பல்கலைக் கழகத்தின் ஆய்வு மற்றும் இணைய வழிக் கல்வி
இயக்ககம் நடத்தும் முதுகலை இடைக்கால இலக்கியம் பாடநூல் தயாரிப்பாளராகவும், தமிழ்
இலக்கியம் கற்பித்ததலின் தேர்வாளராகவும் பணி யாற்றியுள்ளார்.
இவரது துணைவியார் மதுரம். இவர், இந்திய வனப் பணியில் ஐ.ஆர்.எஸ். தகுதி பெற்றவர்.
இடைநிலை ஆசிரியையாகப் பணியாற்றி பணியைத் துறந்தார். இவர்களுக்கு கணேஷ், ஸ்ரீராம் என
இரு புதல்வர்கள்.