| Profession | அறிஞர் |
|---|
தென்காசி கணக்கப்பிள்ளை வலசை எனும் ஊரில் இல.பிச்சமுத்து – சுப்பம்மாள் மகனாகப்
08.03.1941 அன்று பிறந்தார்.
1946-இல் பாலர் வகுப்பில் சேர்க்கப்பட்டார். தென்காசி இ.சி.ஈ. கழக உயர்நிலைப் பள்ளியில்
கல்வியைப் படித்தார்.1958- இல் சென்னைப் பல்கலைக்கழகத்தில் எம்.ஏ. (தமிழ்) பட்டம் பெற்றார்.
1966-இல் ஆசிரியர் பயிற்சி கல்லூரியில் ஆசிரியர் பயிற்சிப் பட்டம் பெற்றார். 1989- இல்
முனைவர் பட்டம் பெற்றார்.
1972- இல் தஞ்சை சரபோஜி கல்லூரியில் தமிழ்ப் பயிற்று நராகப் பணியேற்று, வேலூர்
முத்துலிங்கம் கல்லூரி, கலைஞர் கருணாநிதி அரசு கல்லூரி திருவண்ணாமலை கல்லூரி, சென்னை
நந்தனம் கலைக் கல்லூரி, சென்னை சைதாப்பேட்டை ஆசிரியர் கல்லூரி ஆகியவற்றில் கணித
ஆசிரியர், பள்ளித் துணை ஆய்வாளர், மாவட்டக் கல்வி பொறுப்பு அலுவலர், தமிழ்ப் பயிற்றுநர்,
தமிழ்ப் பேராசிரியர், தமிழ்க் கல்விப் பேராசிரியர், கணினிக் கல்விப் பேராசிரியர் எனப் பல
நிலைகளில் பணியாற்றி 1999-இல் பணி நிறைவு பெற்றார்.
கோபிச்செட்டிப்பாளையத்தில் பள்ளி துணை ஆய்வாளராகப் பணியாற்றியபோது 1969-இல் கௌரிபாயைக்
காதல் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு நவநீதமுத்து என்றொரு மகன், ரேணுபத்மா
என்றொரு மகள்.
பணி நிறைவுக்குப் பின் மைசூர், இந்திய மொழிகளின் நடுவண் நிறுவத்தினத்தில்
செயல்திட்டங்களில் பணியாற்றினார்.
தமிழ் இலக்கியம், மருத்துவம், கல்வியியல், கணினிக் கல்வி ஆகிய துறை சார்ந்த 27 தமிழ்
நூல்களையும், 2 ஆங்கில நூல்களையும் எழுதியுள்ளார். 9 நூல்களை பதிப்பித்துள்ளார்.
1989-இல் 9-ஆம் வகுப்பு தமிழ்ப் பாடநூல், 2005-இல் 11-ஆம் வகுப்பு தமிழ்ச் சிறப்புப் பாட
நூல், 2006-இல் 12-ஆம் வகுப்பு தமிழ்ச் சிறப்புப் பாடநூல் ஆகியவற்றை தலைமையேற்று
உருவாக்கியுள்ளார்.
1995-இல் சுவீடன் தலைநகர் ஸ்டாக் ஹோம் நகரில் நடைபெற்ற பன்னாட்டு நீர்வளப் பாதுகாப்பு
நிறுவனம் நடத்திய கருத்தரங்கு ‘, 2000-இல் ஸ்டாக்ஹோம் நகர் கருத்தரங்கில்
‘நீர்ப்பாதுகாப்புப் பள்ளி மாணவர்கள் கொண்டிருந்த விழிப்புணர்வு’ எனும் தலைப்பிலும்,
2006-இல் மலேசியா கோலாலம்பூரில் ஓர் ஆய்வுக் கட்டுரையும், 2008-இல் சென்னையில்
‘தமிழாசிரியர் எட்டாவது மாநாட்டில் ‘வலைத்தள அமைப்பில் இலக்கியம் கற்பித்தல்’ எனும்
தலைப்பிலும், 2009-இல் சென்னை, தொடக்கப்பள்ளி ஆசிரியர் மாநாட்டில் சமச்சீர்க்கல்வியின்
இலக்கியப் பாடம்’ என்ற தலைப்பிலும், 2015-இல் மலேசியாவில் நடை பெற்ற 9-ஆவது உலகத்
தமிழ் மாநாட்டில் ஆய்வுக் கட்டுரைகள் வழங்கியுள்ளார்.