ந.மகேஸ்வரி

ந.மகேஸ்வரி

Profession எழுத்தாளர்

Biography

மலேசிய பெண் படைப்பாளிகளில் குறிப்பிடும்படியானவரான ந.மகேஸ்வரி, கோலாலம்பூர்
தலைநகரத்தில் நடேசன்- பாஞ்சாலைத் தம்பதியருக்கு மூன்றாவது குழந்தையாகப் பிறந்தார்.

கோலாலம்பூரிலேயே பள்ளிக் கல்வியைப் பயின்றவர், ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் ஆசிரியர்
பயிற்சியினை முடித்து, முதன் முதலில் கேலாக் கிள்ளான் வாட்சன் தமிழ்ப் பள்ளியில்
ஆசிரியராகப் பணியில் சேர்ந்தார். அதே பள்ளியில் பணிநிறைவு பெறும்வரை பணியாற்றினார்.

இவரது கணவர் வீ.நடேசன். இவர்களுக்குக் கணேசன் என் றொரு மகன். இவர் பொறி யியல்
வல்லுநராகப் பணிபுரி கிறார்.

ந.மகேஸ்வரி, தனது எழுத் துலக வாழ்க்கையை 1957-இல் ‘ஜனோபகாரி’ இதழில் தொடங்கினார்.
அவ்விதழில் இவரது முதல் சிறுகதை ‘திருப்பம்’ வெளிவந்தது. அக்கதைக்கு கிடைத்த வரவேற்பே
அவரைத் தொடர்ந்து எழுதத் தூண்டியது.

தொடர்ந்து தமிழ்நேசன், மலை நாடு மற்றும் சில இதழ்கள் இவரது படைப்பு களை வெளியிட்டு
வந்தன. தமிழகத்திலிருந்து வெளிவரும் கணையாழி, மஞ்சரி, கலைமகள் போன்ற இதழ்களிலும்
இவரது படைப்புகள் வெளிவந்தன.

தொடக்க காலங்களில் குடும்பப் பிரச்சனை களுக்கும், குடும்பப் பாசத்திற்கும் முக்கியத்துவம்
கொடுத்து எழுதியவர், காலப்போக்கில் பரவலான விசயங்களை எழுதத் தொடங்கினார். இன்று
மலேசியத் தமிழர்களிடையே தோன்றியுள்ள சில குறிப்பிட்ட மாறிவரும் போக்கு களையும்
துல்லியமாக அறிந்து தனது கதைகளில் சிறப்பாகப் பதிவு செய்கிறார்.

பெண்ணிய நோக்கில் சில கதைகளையும், பள்ளிகளில் நிகழும் பிரச்சனைகளை மையமாக வைத்து சில
கதைகளையும், தனது சொந்த அனுபவங்களில் சில கதைகளையும் எழுதியுள்ளார். இவரது கதைகள்
‘மகேஸ்வரியின் கதைகள்’ எனும் தொகுப்பாக வெளிவந்துள்ளது.

‘தமிழ்நேசன்’ இதழ் இவருக்கு 1963-இல் தங்கப் பதக்கத்துடன் ‘நேசன் எழுத்தாளர்’ என சிறப்பு
விருதை வழங்கியது. 1964-இல் மலேசிய எழுத் தாளர் சங்கம் நடத்திய முதலாவது இலக்கியப்
போட்டியில் சிறுகதைக்குரிய தங்கப் பதக்கத் தினைப் பெற்றார். தமிழ்நேசன் நடத்திய பவுன்
பரிசுத் திட்டத்தில் மூன்று முறை தங்கப் பரிசு களைப் பெற்றுள்ளார். 1983-இல் சிலாங்கூர்
மாநில இளைஞர் மணிமன்றம் இவரது 25 ஆண்டு கால இலக்கிய வாழ்க்கையை பாராட்டி
சிறப்பித்தது. 1989-இல் ஆதிநாகப்பன் இலக்கிய விருது, பாரதிதாசன் நினைவுப் பரிசு,
1990-இல் தமிழ் இலக்கியக் கழகம் வழங்கிய ‘நறுங்கதை செல்வி’ விருது போன்றவற்றைப்
பெற்றுள்ளார்.

தமிழகத்திலிருந்து வெளிவரும் ‘மஞ்சரி’ இதழ் 2003-இல் நடத்திய அமரர் தேவன் நினைவுப்
பயணக் கட்டுரைப் போட்டியில் முதல் பரிசு பெற்றார். அண்மையில் சங்கிலி முத்து அங்கம்மா
இலக்கிய விருதையும் பெற்றுள்ளார்.