| Profession | அறிஞர் |
|---|
தஞ்சாவூர், இராவுசாப்பட்டி க.இராசு – இரா.துளசியம்மாள் தம்பதியருக்கு 01.07.1938
அன்று பிறந்தார்.
தனது பள்ளிக் கல்வியை இராவுசாப்பட்டி, வல்லம் ஆகிய ஊர்களிலுள்ள பள்ளிகளில் பயின்றார்.
கரந்தை புலவர் கல்லூரியில் வித்துவான் படிப்பில் சென்னைப் பல்கலைக்கழக அளவில் முதல்
மாணவராகத் தேர்ச்சி பெற்றார். அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் தமிழாசிரியர் பயிற்சியில்
சேர்ந்து 1958-இல் தேர்ச்சி அடைந்தார்.
1959-இல் வடுவூர் உயர்நிலைப் பள்ளியில் தமிழாசிரியராக தம் ஆசிரியப்பணியைத்
தொடங்கினார். 1963-80 இல் அரசு உயர்நிலைப் பள்ளியிலும், 1981 தொடங்கி 1997 -இல் பணி
நிறைவு பெறும் வரை அரசு மேல் நிலைப்பள்ளியிலும் தமிழாசிரியராகப் பணியாற்றினார்.
தொலைதூக் கல்வியின் மூலமாக பி.லிட்., எம்.ஏ., பி.எட்., எம்.எட்., ஆகியப் பட்டங்களைப்
பெற்றார்.
‘தொட்டனைத் தூறும் தொல்காப்பியம்’ எனும் தலைப்பில் ஆய்வு செய்து எம்ஃபில் பட்டம் பெற்றார்.
இவ்வாய்வேடு இதே பெயரில் நூலாக வெளிவந்துள்ளது. ‘தொல்காப்பியப் பொருளதிகார உரை
வேறுபாடு அகத்திணையில் புறத்திணையியல்’ என்ற தலைப்பில் ஆய்வு செய்து முனைவர் பட்டம்
பெற்றார்.
1964- இல் இரா. கலியபெருமாள் தனது அக்கா மகளான க. இராசேசுவரியைத் திருமணம் செய்து
கொண்டார். இவர்களுக்கு குழந்தை இல்லை.
தஞ்சைக் கம்பன் கழகம் சார்பாக கம்ப ராமாயண வகுப்புகளை தொடர்ந்து பத்து ஆண்டுகள்
நடத்தினார். பெரியபுராணம், கலித் தொகை வகுப்புகளை நடத்தினார். தற்போது தஞ்சை உலகத்
திருக்குறள் பேரவை சார்பில் புறநானூறு வகுப்புகள் நடத்துகிறார். பல்வேறு
கல்லூரிகளுக்குச் சென்று ஆய்வு உரைகளை நிகழ்த்துகிறார். சென்னைப் பல்கலைக் கழகம், தமிழ்ப்
பல்கலைக் கழகம், பாரதிதாசன் பல்கலைக் கழகம் ஆகியவற்றில் பல்வேறு சொற்பொழிவு களை
நிகழ்த்தியுள்ளார்.
கோவையில் நடைபெற்ற செம்மொழி மாநாட்டில் ‘தொல்காப்பிய(ர்) உவமைகள்’ எனும் தலைப்பில்
ஆய்வுக் கட்டுரை வாசித்தார்.
இவர் பெற்றுள்ள விருதுகள்: தஞ்சை ரோட்டரி சங்கத்தின் ‘தமிழ்ப் பேராசான்’, திருவையாறு
ஔவைக் கோட்டத்தின் ‘ஔவை’, தஞ்சை சதய விழாக்குழுவின் ‘மாமன்னன் இராசராசன் விருது’,
தஞ்சாவூர் உலகத் திருக்குறள் பேரவையின் ‘குறள்நெறிச் செம்மல்’, தஞ்சாவூர் திருவருள்
பேரவையின் ‘கம்பர் சீர் பரவுவர்’, வெற்றித் தமிழர் பேரவையின் ‘கவிஞர் திருநாள் விருது’,
திமுக இலக்கிய அணியின் ‘தமிழவேள் கலைஞர் இலக்கியப் பொற்கிழி விருது’, தமிழகப் புலவர்
குழுவின் ‘தொல்காப் பியர் விருது’,. ‘இரகுநாதராசாளியார் விருது’, தஞ்சை சுழற்
சங்கத்தின் ‘மண்ணின் சிறந்த தமிழறிஞர்’ விருது ஆகிய விருதுகளைப் பெற்றுள்ளார்.