| Profession | அறிஞர் |
|---|
ஈரோடு பெருந்துறை வெள்ளமுத்துக் கவுண்டன் வலசு கிராமத்தில் சென்னியப்ப கவுண்டர் –
நல்லம்மாள் தம்பதியருக்கு 02.01. 1938-இல் பிறந்தார்.
கருவம்பாளையம், தண்ணீர்ப்பந்தல், ஞானிபாளையம், ஈரோடு ஆகிய ஊர்களிலுள்ள பள்ளிகளில் பள்ளிக்
கல்வியைப் பயின்றார். தஞ்சை மாவட்டம், திருப்பனந்தாள் காசிமடம் செந்தமிழ்க் கல்லூரியில்
1959-இல் வித்துவான் பட்டம் பெற்றார்.
1959-இல் ஈரோடு செங்குந்தர் உயர்நிலைப் பள்ளியில் தமிழாசிரியராகப் பணியில் சேர்ந்தார்.
1963- இல் சி.எஸ்.ஐ. உயர்நிலைப் பள்ளியில் பணியாற்றும் போது பி.லிட்., தமிழ் எம்.ஏ.
பட்டங்களைப் பெற்றார். ஆசிரியர் சங்கச் செயலாளராகவும், தமிழக அரசின் தொல்லியல் துறையில்
ஆய்வாளராகவும் பணியாற்றினார். தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக் கழகத்தில் 1982- இல் விரிவுரையாள
ராகப் பணியில் சேர்ந்தார். மதுரை காமராசர் பல்கலைக் கழகம் மூலம் முனைவர் பட்டம் பெற்றார்.
1983-இல் இணைப் பேராசிரியர், 1986-இல் பேராசியர், 1995-இல் துறைத் தலைவராகப்
பணியேற்று 1998-இல் பணிநிறைவு பெற்றார். அதன்பின், 2002-04 களில் தமிழ்ப் பல்கலைக் கழக
ஆட்சிக்குழு உறுப்பினராகப் பணியாற்றினார்.
சங்க காலக் கொடுமணம் என்பது இன்று பெருந்துறை வட்டத்தில், நொய்யல் ஆற்றங்கரையிலுள்ள
கொடுமணல்தான் என்பதை இராசு கண்டறிந்தார். ஈரோடு அறச்சலூர் மலையிலுள்ள ஆண்டிபாறை
குகையில் சமண முனிவர்களின் கற்படுகைகளையும், தமிழ்பிராமி எழுத்துகளில் இசை அடைவு
எழுத்துகள் பொறிக்கப்பட்டிருப்ப தையும் (1960-இல்), ஈரோடு மாவட்டம், பழமங்கலத்தில் ஒரு
நடுகல்லில் வெண்பாவே கல்வெட்டாகப் பொறிக்கப்பட் டிருப்பதையும், சித்தோடு அருகிலுள்ள
கருங்கரடு பகுதியிலுள்ள ஒரு பாறையில் ‘சேரன் மகன்’ என்று பொருள் தரக்கூடிய ‘குட்டுவன்
சேய்’ என்ற தமிழ் பிராமிக் கல்வெட்டையும், சேலம் அருகில் மல்லூரை அடுத்துள்ள பொன்செர்ரி
மலைக்குகையின் மேல்தளத்தில் 14-ஆம் நூற்றாண்டுத் தமிழ் எழுத்துகளில்”தன்னூன் பெருக்கற்குத்
தான்பிறிது ஊனுண்பான் எங்ஙனம் ஆளும் அருள்” என்ற திருக்குறள் கல்வெட்டாக
எழுதப்பட்டுள்ளதையும், கட்டபொம்மன் செப்பேடு, 1798 இல் எழுதப் பட்ட திருக்குறள் காகிதப்
பிரதி, சோதிடப் பலன் கூறும் திருக்குறள் சுவடி, இந்து – முஸ்லிம் ஒருமைப்பாட்டைக்
காட்டும் பதக்கம் போன்ற பல அரிய தொல்பொருள்களையும் செ.இராசு கண்டறிந்தார்.
இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளுக்குப் பயணம் மேற்கொண்டுள்ளார்.
செ.இராசு தமிழக அரசின் உ.வே.சா. விருது, ஈரோட்டின் சிறந்த குடிமகன் விருது,
டாப்லைன் விருது, பி.சி.ராய் விருது, போன்ற பல்வேறு விருதுகளையும், பட்டங்களையும்,
பரிசுகளையும் வழங்கப் பெற்றுள்ளார்.