| Profession | பேராசிரியர் |
|---|
தமிழ் நாடக ஆய்வறிஞர் பேராசிரியர் இரா. குமரவேல், திருவண்ணாமலை மாவட்டம், தன்ம
திமங்கலம் அ.இராசபூபதி- பாலகுசலாம்பாள் இணையருக்கு 19.10.1938 அன்று பிறந்தார்.
திருநெல்வேலி இந்து உயர் நிலைப் பள்ளியில் பள்ளிக் கல்வியும், விவேகானந்தா கல்லூரியில்
இண்டர்மீடியட் படிப்பும் முடித்து, சென்னை பச்சையப்பன் கல்லூரியில் பி.ஏ. (ஆனர்சு) பட்டம்
பெற் றார். சென்னைப் பல்கலைக் கழகத்தில் ‘கம்ப ராமாயணத் தில் பரதனின் பாத்திரப் படைப்பு’
என்ற தலைப்பில் ஆய்வு செய்து எம்.லிட்., பட்டமும், தமிழ் நாடக ஆய்வு குறித்து முனைவர்
பட்ட ஆய்வும் மேற்கொண்டார். பிரெஞ்சு, ஜெர்மன் மொழி களைப் பயின்று பட்டயங்கள் பெற்றுப்
பன்மொழி வித்தகராக விளங்கினார்.
சென்னை, மதுரைப் பல்கலைக் கழகங்களின் மான்யக் குழுவின் ஆதரவில் மொழியியல், சைவ
சித்தாந்தம் குறித்த கல்வி பயின்று பட்ட மேற் படிப்பு பட்டயச் சான்றும், ‘தமிழ் நாடக
வரலாறு’ என்னும் பொருளில் ஆராய்ச்சி செய்து 1973-இல் முனைவர் பட்டமும் பெற்றார்.
தாம் பயின்ற பச்சையப்பன் கல்லூரியிலேயே 1962-இல் விரிவுரையாளராகப் பணியாற்றத்
தொடங்கினார். மூன்றாண்டுகள் பிரெஞ்சு மொழி விரிவுரையாளராகவும், அதன்பின் தமிழ்
விரிவுரையாளராகவும் பணியாற்றினார். 1997-இல் பணி நிறைவு பெறும்வரை
அக்கல்லூரியிலேயே பணியாற்றினார். பணி நிறைவுக்குப் பிறகு திருவள்ளூரில் அமைந்துள்ள
திருமுருகன் கலை அறிவியல் கல்லூரியில் முதல்வராக மூன்றாண்டுகள் பணியாற்றினார்.
20-க்கும் மேற்பட்டோரின் முனைவர் பட்ட ஆய்வுக்கும், ஏராளமானோரின் எம்.ஃபில் பட்ட ஆய்வுக்கும்
நெறியாளராகப் பணியாற்றினார்.
25.04.1966 அன்று ஔவை சு. துரைசாமிப் பிள்ளையின் மகள் தமிழரசியைத் திருமணம் செய்து
கொண்டார். இவர்களுக்கு இரு மகள்கள், ஒரு மகன்.
‘பூங்குன்றன்’ எனும் புனைபெயரில் இவர் வழங்கிய கவியரங்கக் கவிதைகளைத் தொகுத்து
‘பூங்குன்றன் கவிதைகள்’ எனும் நூலை வெளி யிட்டார். மேலும், ‘கவிதை நாடகம்: ஒரு கண்
ணோட்டம்’, ‘தமிழ் நாடக ஆய்வு’, ‘பொன்னி’, ‘சலோமி’, ‘தமிழ் நாடக வளர்ச்சி : விடுதலை
இயக்கமும் திராவிட இயக்கமும்’, ‘நீதிநெறி விளக்கம்’, ‘இலக்கிய நுட்பம்’, ‘சொற் செல்வம்’,
‘உரைமாண்புகள்’, ‘கலில் ஜிப்ரான் கவிதைகள்’, ‘ஜடா’ , ‘திருக்குறள்: வ.உ.சிதம் பரனார்
உரை’, ‘கனவுகள்’ ஆகியவை இரா. குமரவேலனார் இயற்றிய, மொழிபெயர்த்த நூல்கள் ஆகும்.
தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்தின் ‘கலைமாமணி’ (1985) விருது உட்பட பல விருதுகளை
வழங்கப்பெற்றார்.
உடல் நலமின்மை காரணமாக 30.12.2012-இல் மீளாத்துயில் கொண்டார்.