| Profession | எழுத்தாளர் |
|---|
கோவை, சலிவன் வீதி வெங்கடசுப்பு சாஸ்திரி – நாகலட்சுமி தம்பதியருக்கு 25.05. 1937
அன்று பிறந்தார். தெலுங்கைத் தாய் மொழியாகக் கொண்ட இவர் தமிழ், ஆங்கிலம், இந்தி, வட
மொழி, கன்னடம் ஆகிய மொழியறிவு கொண்டவர்.
வடமொழி, இந்தி ஆகியவற்றை தம் இளமைப் பருவத்திலேயே பயின்றார். எஸ்.எஸ்.எல்.சி.யைத்
தொடர்ந்து வானொலித் தொழில்நுட்பப் பயிற்சியும் பெற்றிருந்தார்.
1956-இல் 19-ம் வயதில் கோவை நகராட்சி வானொலி நுட்ப இயக்குநர் பணியில் சேர்ந்து 13
ஆண்டுகள் பணியாற்றினார். வானொலி மூடப் பட்டபின், 1977-இல் பி.லிட். பட்டம் பெற்றார்.
1957-இல் தனது 21-ஆவது வயதில் மைசூரைச் சேர்ந்த இந்திராணியை மணந்தார்.
1982-இல் தமிழ்ப் பல்கலைக் கழக ஓலைச் சுவடித் துறையில் முதுநிலைத் தொழில்நுட்ப
உதவியாளராகப் பணியில் சேர்ந்து 1995-இல் பணி நிறைவு பெற்றார். அதன்பின்
திருவனந்தபுரம், பன்னாட்டுத் திராவிட மொழியியல் நிறுவனத்தில் முதுநிலை ஆய்வாளராகப்
பொறுப் பேற்றார். பின்னர் குடும்பச்சூழல் காரணமாக அங்கிருந்து விலகினார். 2003-இல்
சென்னைப் பல்கலைக் கழகத்தின் தமிழ்ப் பேரகராதி விரிவாக்கத் திட்டத்திற்கு துணைப்
பதிப்பாசிரியராகச் சேர்ந்தார்; 2005-இல் பதிப்பாசிரியராக பணியுயர்வு பெற்றார். இவரால்
உருவாக்கப் பட்ட தொல்காப்பிய அகராதியை சென்னை பல்கலைக் கழகம் வெளியிட்டது. தாயாரின்
உடல் நிலையைக் கருதி 2007-இல் பணியிலிருந்து விலகினார். தற்போது சின்ன வேடம்பட்டியில்
வசித்து வருகிறார்.
இதுவரை உரை நூல்கள்-9, உரையும் பதிப்புமாக- 27, மூலப் பதிப்புகள்- 11, தொகுப்பும்
பதிப்புமாக-19, கவிதைத் தொகுதி-3, வாழ்க்கை வரலாறு- 3, கோயில் வரலாறு- 2, ஆதீன
வரலாறு- 1, பதிப்பு- 1, அகராதிகள்- 3, யாப் பியல்-1. மெய்யியல்-1, கட்டுரைத்
தொகுப்பு-1, ஆங்கில அட்டவணை- 6 என 88 நூல்களை வழங்கியுள்ளார்.
இதற்கிடையில், ‘கௌமார அமுதம்’ திங்கள் இதழ் ஆசிரியராக 60-க்கும் மேற்பட்ட ஆய்வுக்
கட்டுரைகளை வழங்கியுள்ளார். சுவடி யியல் பட்டறைகள், பயிற்சி வகுப்புகளில் பயிற்று
வித்திருக்கிறார். கோவை,சின்னவேடம்பட்டி, தவத்திரு கஜபூசைச் சுந்தர சுவாமிகள்
தமிழாய்வு மையத்தின் செயலராகவும் மாநில முருக பக்தர் பேரவையின் சிறப்பு ஆலோசகராகவும்
செய லாற்றுகிறார். ‘சிரவை ஆதினக் கவிஞர்’ (1976), ‘திரிபு மடக்குத் தெளிவுரை
வல்லார்’ (1985), ‘தேவார மணி’ (1987), ‘சுவடியியற் கலைமணி’ (2003),
‘பெரும்புலவர்’ (2005), ‘சைவத் தமிழ்ச் செல்வர்’ (2011), ‘சித்திரக் கவி வித்தகர்’
(2013) ஆகிய பட்டங்களையும், ‘பொன் மனச்செம்மல் கே.ஆர்.பாண்டுரங்கனார் விருது’,
‘கவிராட்சஸ கச்சியப்ப முனிவர் விருது’, ‘உ.வே.சா. விருது’ ஆகிய விருதுகளையும்
பெற்றுள்ளார்.