| Profession | எழுத்தாளர் |
|---|
அ.முத்துலிங்கம், இலங்கை, கொக்குவில் கிராமத்தில் அப்பாதுரை-ராசம்மா தம்பதியர்க்கு
11.1.1937 அன்று பிறந்தார்.
1959-இல் இளங்கலை விஞ்ஞானப் படிப்பை கொழும்பு பல்கலைக் கழகத்தில் படித்தார். வாழ்க்கைத்
துணையாக கமல ரஞ்சனியைத் திருமணம் செய்து கொண்ட இவருக்கு சஞ்சயன், வைதேகி என இரண்டு
குழந்தைகள்.
1960-களில் கதை எழுதத் தொடங்கிய இவர், 1961-இல் ஓர் இலங்கை தமிழ் இதழ் நடத்திய
சிறுகதைப் போட் டியில் ‘அக்கா’ என்ற கதையை எழுதிபரிசு பெற்றார். இவரது முதல் கதைத்
தொகுதி ‘அக்கா’ 1964-இல் வெளியானது.
1965-இல் ‘சார்ட்டட் அக் கவுண்டன்ட்’ தேர்வில் தேர்ச்சி பெற்றார். பின்னர் இங்கிலாந்தில்
‘சார்ட்டர்ட் மேனேஜ் மென்ட் அக்கவுண்ட்’ படித்தார். 1972-இல் இலங்கையை விட்டு வெளியேறி உலக
வங்கி மற்றும் ஐ.நா.வுக் கான பணிகளில் ஆப்ரிக்கா, ஆசியா உள்ளிட்ட உலகின் பல்வேறு
நாடுகளில் பணியாற்றினார். இக்காலங்களில் சுமார் இருபது ஆண்டுகள் இவரின் கதைத் தொகுதிகள்
ஒன்று கூட வெளி வரவில்லை. நீண்ட இடைவெளிக்குப் பின்பு 1995-களில் எழுத்துலகில் தம்மை
முழுமையாக இணைத்துக் கொண்ட இவர் ‘திகடச்சக்கரம்’ (1995), ‘வம்சவிருத்தி’ (1996),
‘வடக்கு வீதி’ (1998) என்னும் மூன்று தொகுப்பினை அடுத்த மூன்றாண்டுகளில் வெளிக் கொண்டு
வந்தார். ‘திகடச்சக்கரம்’ தமிழ் நாட்டில் லில்லி தேவ சிகாமணி விருதைப் பெற்றது.
‘வம்சவிருத்தி’ தமிழக அரசின் பரிசைப் பெற்றது. ‘வடக்கு வீதி’ இலங்கை அரசின் பண்பாட்டுத்
துறைக்கான பரிசினைப் பெற்றது. ‘குதிரைக்காரன்’ ஆனந்த விகடன், எஸ்.ஆர்.எம். பல்கலைக்
கழகத்தால் வழங்கப்படுகிற விபுலானந்தா படைப்பிலக்கிய விருதையும், திருப்பூர் தமிழ்ச் சங்க
விருதையும் பெற்றது.
சுமார் 120 சிறுகதைகள், சுயசரிதை நடையி லான ஒரு புதினம், நூற்றுக்கணக்கான கட்டு
ரைகள், ஒரு நேர்காணல் நூலினையும் தமிழ் உலகுக்குத் தந்துள்ளார்.
அ.மு. தன் புனைவெழுத்துகளால் உலக அரங்கில் தனக்கான வாசகர்களை நிலைப்படுத்திக்
கொண்டுள்ளார். ‘மகாராஜாவின் ரயில் வண்டி’ (சிறுகதை 2001), ‘அ.முத்துலிங்கம் கதைகள்’
(தொகுப்பு 2004), ‘அங்கே இப்ப என்ன நேரம்’ (கட்டுரை 2005), ‘வியத்தலும் இலமே’
(நேர்காணல் 2006), ‘கடிகாரம் அமைதியாக எண்ணிக் கொண்டிருக்கிறது’ (கட்டுரை 2006),
பூமியின் பாதி வயது (கட்டுரை 2007), உண்மை கலந்த நாட்குறிப்புகள் (புதினம் 2008),
அ.முத்து லிங்கம் சிறுகதைகள் (ஒலிப் புத்தகம் 2008), ‘அமெரிக்கக்காரி’ (சிறுகதை
2009), ‘அமெரிக்க உளவாளி (கட்டுரை 2010), ‘ஒன்றுக்கும் உதவா தவன்'(கட்டுரை2011),
‘குதிரைக்காரன்’ (சிறுகதை 2012), ‘தமிழ் மொழிக்கு நாடில்லை’ (நேர்கண் டவை 2013),
‘மூன்று உலகங்கள்'(அ.மு. படைப் புகள் பற்றிய விமர்சனங்கள் 2014) ஆகியவை இவரது நூல்கள்.
தற்போது கனடாவில் வசிக்கிறார்.