| Profession | அறிஞர் |
|---|
கோவை ஆத்துப் பொள்ளாச்சி விவசாயக் குடும்பத்தில் கி.பொன்னுசாமி கவுண்டர் -கண்டி அம்மாள்
தம்பதியருக்கு 29.07.1936 அன்று பிறந்தார். இயற் பெயர்: நடராஜ பாலசுப்பிரமணிய சேது
ராமசாமி.
1956- இல் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் பி.ஏ. ஆனர்ஸ், 1987- இல் சென்னைப் பல்கலைக்
கழகத்தில் முனைவர் பட்டங்களைப் பெற்றார். 1960- இல் அரங்கநாயகியை மணந்தார். செந்தில்வேல்,
சக்தி வேல் என இரு மகன்கள்.
தனது 23-ஆவது வயதில், பொள்ளாச்சி நல்லமுத்துக் கவுண்டர் மகாலிங்கம் கல்லூரியில்
விரிவுரையாளராகப் பணியைத் தொடங்கி. பின்னர் தமிழ்த் துறைத் தலைவர் ஆனார். 1989-இல்
கோயம்புத்தூர் பாரதியார் பல்கலைக்கழகத்தில் எட்டு ஆண்டுகள் தமிழியல் துறைத் தலைவராகப்
பணியாற்றினார். இவரது நற்பணியைப் பாராட்டி, பொள்ளாச்சி சங்கம் 2007-இல் ‘நல்லாசிரியர்
விருது’ வழங்கி சிறப் பித்தது.
‘வானம்பாடி’, ‘அன்னம் விடு தூது’ ஆகிய இதழ்களின் வளர்ச்சிக்கு முக்கிய பங்காற்றினார்.
‘வள்ளுவம்’, ‘கணையாழி’ ஆகிய இதழ்களின் ஆசிரியர் குழுவில் இடம்பெற்றிருந்தார். 2009-இல்
ஓர் ஆங்கில மாத இதழுக்கும் முதன்மை ஆசிரியராக பணியாற்றினார்.
சிற்பியின் எழுத்துகள் 1963 தொடங்கி 2012 வரை 18 கவிதை நூல்களாகவும், 13 உரைநடைத்
தொகுப்புகளாகவும் வெளிவந்துள்ளன. இவரைப் பற்றி மூன்று ஆங்கில நூல்கள் வெளிவந்துள்ளன.
இவரது கவிதைகள் ஆங்கிலம், கன்னடம், இந்தி, மலையாளம், மராத்தி ஆகிய மொழிகளில்
வெளிவந்துள்ளன.
தகவல்களைத் திரட்டுவதற்காகவும் உரைகளை நிகழ்த்துவதற்காகவும் பல்கேரியா, சோவியத்
யூனியன், அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்சு, மலேசியா, சிங்கப்பூர், ரஷ்யா ஆகிய
நாடுகளுக்குப் பயணித்துள்ளார்.
‘நல்லாசிரியர்’ விருது பெற்றுள்ள இவர், ‘பாவேந்தர் விருது’, ‘சாகித்ய அகாதெமி’,
‘கலை மாமணி’, ‘தமிழறிஞர்’, ‘தமிழ் மாமணி’ உள்ளிட்ட 40க்கும் மேற்பட்ட பெருமைமிகு
விருதுகளை பெற்றுள்ளார்.
இவர் காந்திகிராம் பல்கலைக் கழகம், மதுரைக் காமராஜர் பல்கலைக் கழகம், தஞ்சைத் தமிழ்ப்
பல்கலைக் கழகம் ஆகியவற்றில் துணை வேந்தர் தேர்வுக்குழு உறுப்பினராகப் செயலாற்றியுள்ளார்.
சாகித்ய அகாதெமியின் புது தில்லி செயற்குழு உறுப்பினராகவும், தமிழ் ஆலோ சனைக் குழு
உறுப்பினராகவும் செயலாற்றியுள்ளார்.
1996-இல் சிற்பியின் மணிவிழாவில் ‘சிற்பி அறக்கட்டளை’ தொடங்கப்பட்டு ஆண்டு தோறும்
‘சிற்பி இலக்கிய விருது’, ‘சிற்பி இலக்கியப் பரிசு’ வழங்கப்படுகின்றன.