தமிழறிஞர் மு.வெங்கடேசபாரதி

தமிழறிஞர் மு.வெங்கடேசபாரதி

Profession அறிஞர்

Biography

சீர்காழி மருதங்குடியில் முத்தையா-தங்காயாள் தம்பதியருக்கு 26.05.1936 அன்று பிறந்தார்.

இவரது தந்தையார் ஐந்து வயதில் அரிச்சுவடி, எண்சுவடி, ஆத்திசூடி, நிகண்டு,
திருக்குறள், நல்வழி, கொன்றை வேந்தன், வெற்றிவேற்கை, மூதுரை, விவேக சிந்தாமணி போன்ற
பாடல்களை அவ்வப்போது கற்பித்தார். அதன்பின் சீர்காழி சபாநாயக முதலியார் இந்து நடுநிலைப்
பள்ளியில் மூன்றாம் வகுப்பில் சேர்ந்தார். ஒன்பதாம் வகுப்பு படிக்கும்போதே கவிதைகள் எழுதத்
தொடங்கினார். 1952-இல் எம்.எல்.சி. பள்ளி நிர்வாகத்தைப் புகழ்ந்து இவர் எழுதிய வெண்பா
சட்டமிடப்பட்டு 2010 வரை தலைமை ஆசிரியர் அறையில் 58 ஆண்டுகள் வைக்கப்பட்டிருந்தன.

அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் சேர்ந்து புலவர் பட்டம் பெற்றார். சீர்காழி திருமுல்லைவாயில்
அரசினர் ஆசிரியர் பயிற்சிப் பள்ளியில் ஆசிரியர் பயிற்சியை முடித்தார்.

ஒரத்தநாடு அருகிலுள்ள உறந்தைராயன் குடிகாடு எனும் சிற்றூரில் இடைநிலை ஆசிரியாக
அரசால் பணியமர்த்தப்பட்டு பணியாற்றிக் கொண்டிருந்தார். அப்பொழுது அண்ணாமலைப் பல்கலைக் கழக
தொலைதூரக் கல்வித் துறையில் முதுகலை தமிழ்ப் படித்துக் கொண்டிருந்தார். தஞ்சையில்
இடைநிலை ஆசிரியராகப் பணியாற்றியதோடு சீர்காழித் தாலுக்கா மாகாணம் சிவானந்தா
நடுநிலைப் பள்ளியில் தமிழாசிரியராகப் பணிபேற்றுச் சிறப்பாக பணி யாற்றினார். பின்பு
சீர்காழி சபாநாயக முதலியார் இந்து மேனிலைப் பள்ளியில் தமிழாசிரியராகப் பதவியேற்று
தொடர்ந்து 25 ஆண்டுகள் பணியாற்றி பணி நிறைவு பெற்றார்.

இவரின் வாழ்க்கைத்துணை அமுதம். இவர்களுக்கு அங்கயற்கண்ணி, தேன்மொழி, இசைவாணி,
செந்தமிழ்ப்பாவை, வளர்மதி என ஐந்து மகள்கள்.

சிறு வயது முதலே எழுதி சிறந்த படைப்பாளி யாக விளங்கும் இவர் இதுவரை 18 நூல்களை
எழுதியுள்ளார்.இளவயதிலேயே நாடகத்தின் மீது ஈடுபாடு கொண்ட இவர், ‘வள்ளி திருமணம்’
நாடகத்தில் நாரதர் வேடத்திலும், ‘பவளக்கொடி’ நாடகத்தில் ‘கிருஷ்ணன்’ வேடத்திலும் நடித்
துள்ளார். மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வ நாதன் இசையில் பாடல் எழுதியுள்ளார். ‘என்ன
வெல்லாம் சொன்னாய் தோழி’ திரைப்படத் திற்கு இரண்டு பாடல்கள் எழுதியுள்ளார்.

‘காமராசர் கதை’ எனும் வில்லுப்பாட்டைத் தயாரித்து சீர்காழியில் அங்கேற்றி, பல்வேறு
இடங்களில் நடத்தி பாராட்டைப் பெற்றார். ‘இதயப்புனல்’, ‘பனி விழும் மலர்வனம்’ இரண்டும்
இவரது இசை நாடகங்கள். திருக் குறளை இசை வடிவத்தில் கொண்டு வரும் முயற்சியில்
ஈடுபட்டுள்ளார்.

‘இசைக்கவிக்கோ’, ‘கவித்தென்றல்’, ‘முத்தமிழ் வித்தகர்’, ‘நாடகச் செம்மல்’ ‘கவிதை உறவு’
, ‘தமிழ்க் கலைமாமணி’, ‘முத்தமிழ்வாணர்’, கண்ணியச் செம்மல்’ போன்ற விருதுகளைப்
பெற்றுள்ளார்.