| Profession | அறிஞர் |
|---|
விருதுநகர் திருத்தங்கல் சு.குருவம்மாள் – பெ.சுப்பையா நாடார் தம்பதியருக்கு 15.06.
1936 அன்று பிறந்தார். இவர் பிறந்த இரு வருடங்களில் தாயார் இறந்தார். நான்கு
சகோதரர்களுடனும் ஒரு சகோதரியுடனும் தந்தையின் அரவணைப்பில் வளர்ந்தார். எளிய விவசாய
குடும்பம்.
திருத்தங்கல், மாவட்ட கழக உயர்நிலைப் பள்ளியில் பள்ளிக் கல்வியைப் பயின்றார். தீந்தமிழ்
தியாகராசர் கல்லூரியில் தமிழில் இளங்கலைப் பட்டமும், சென்னை மாநிலக் கல்லூரியில்
முதுகலைப் பட்டமும் (1965) பெற்றார். 1966-இல் மதுரைப் பல்கலைக் கழகத்தின் ‘முதல்
ஆராய்ச்சி மாணவன்’ என்ற பெருமையைப் பெற்றார். ‘தமிழில் கவிதையியலும் இலக்கியக்
கொள்கைகளும்’ என்ற தலைப்பில் முனைவர் மொ.அ. துரையரங்கனார் வழிகாட்டுதலில் முனைவர் பட்டம்
(1971) பெற்றார்.
1971-76-இல் ம.தி.தா. இந்து கல்லூரியில் முதுகலை துணைப் பேராசிரியராகவும்,
1976-2000 இல் மதுரைப் பல்கலைக் கழகத்தில் தமிழியல் துறை புலமாக மாற்றப்பட்டு
துறைகளாக மாற்றம் செய்யப்பட்டபோது திறனாய்வுத் துறை தலைவராகவும் பணியாற்றினார்.
1987-90 இல் போலந்து வார்சா இந்தியவியல் துறை சார்பாக சிறப்பு அழைப்புப்
பேராசிரியராக நியமிக்கப்பட்டார். 1996-இல் திருநெல் வேலி மனோன்மணியம் சுந்தரனார்
பல்கலைக் கழகத்தில் தமிழ்த்துறை தொடங்கிய போது அழைப்புப் பேராசிரியராக ஓராண்டு
பணியாற்றினார். இவரின் வழிகாட்டுதலில் 21 பேர் முனைவர் பட்டமும், 50-க்கும் மேற்பட்டோர்
இளமுனைவர் பட்டமும் பெற்றுள்ளனர்.
1986-இல் தனது வாழ்க்கைத் துணையாக பா. ரமோலாவைத் திருமணம் செய்து கொண்டார். மூன்று
மகள்கள், ஒரு மகன்.
இவரது ஆய்வு நூல்கள்-9, மொழிபெயர்ப்பு நூல்கள்- 4, தொகுப்பு நூல்கள்- 2 ஆகியவை
வெளிவந்துள்ளன. 100-க்கும் மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகளை எழுதியுள்ளார். அமைப்பியல்,
பின்னை அமைப்பியல், பின்னை நவீனத்துவம் குறித்து ஆராய்ச்சி செய்வதில் வல்லவர்.
1967-70இல் மதுரையிலிருந்து இயங்கிய ‘தமிழ் நாடு வாசகர் பேரவை’யின் துணைச் செயலாள
ராகவும், 1970-இல் ‘நெல்லை ஆய்வுக் குழு’ ஆலோசகராகவும் பணியாற்றினார். ‘தமிழ்நாடு
கலை இலக்கியப் பெருமன்ற’த்தின் மாநிலத் தலைமைக்குழு உறுப்பினராகவும், 1977-78இல் தென்
தமிழக முற்போக்கு எழுத்தாளர்கள் பேரவையில் ஓர் அங்கத்தினராகவும் செயற்பட்டுக்
கொண்டிருக்கிறார்.
1985 முதல் ‘சாகித்ய அகாதெமி’, ‘ஞானபீடம்’ ஆகியவற்றில் ஆலோசனைக்குழு உறுப்பினராக
செயலாற்றுகிறார். ‘மகாநதி’, ‘காந்தள்’ ஆகிய இதழ்களில் பணியாற்றியுள்ளார்.
அரசு பணியிலிருந்து ஓய்வு பெற்றாலும், தமிழ்ப்பற்றும், தமிழ்ப் பணியும் மாறாமல் தொடர்ந்து
கொண்டிருக்கிறது.