| Profession | அறிஞர் |
|---|
இடைகழிநாட்டு நல்லூரில் பெ.சாரங்கபாணி -நீலாவதி தம்பதியருக்குப் பிறந்து, பள்ளிப்
படிப்பைத் தம் சொந்த மண்ணில் தொடங்கி, தொடர்ந்து கடப்பாக்கம் ஸ்ரீ பெ.கிருஷ்ணா ரெட்டியார்
அரசினர் மேல்நிலைப் பள்ளியில் கல்வியை முடித்து, மயிலம் ஸ்ரீமத் சிவஞானபாலய சுவாமிகள்
தமிழ்க் கல்லூரியில் இளங்கலைப் பட்டம் முடித்து,சென்னைப் பல்கலைக் கழகத்தில் சைவ சித்தாந்தத்
துறையில் முதுகலை, முனைவர் பட்டங்களைப் பெற்றவர். கூடுதலாக தமிழ் முதுகலையை மதுரை
காமராசர் பல்கலைக் கழகத்தில் முடித்து, பண்டைத் தமிழ் ஆய்வில் கோவைப் பாரதியார் பல்கலைக்
கழகத் தில் மேலும் ஒரு முனைவர் பட்டம் பெற இருப்பவர்.
வடமொழி, இந்தி என பிற மொழிகளும் கற்றவர். ஓலைச் சுவடி, வைணவம் சான்றிதழ் எனக் கல்வி
உலகில் பாடம் பயின்றவர்.
சென்னைப் பல்கலைக் கழக சைவ சித்தாந்தத் துறையில் எட்டாண்டுகள் வருகைதரு பேராசிரியராகப்
பணியாற்றி, காசி இந்துப் பல்கலைக்கழகத்தின் இந்திய மொழிகள் துறையில் பாரதி யார்
இருக்கையில் விரிவுரையாளராகப் பணியாற்றியவர். தற்போது இராமகிருஷ்ணா மிஷன்
விவேகானந்தா கல்லூரியில் பணியாற்றுகிறார்.
பைந்தமிழ்க் கலாபாரதி, சிவஞான வித்தகர், செம்மொழி ஞாயிறு, சித்தாந்தச் செம்மணி, சைவத்
தமிழ்ச்செல்வர் முனைவர் நல்லூர் சா.சரவணன், தூத்துக்குடி மாவட்டம், பெருங்குளம்
‘திருக்கயிலாயப் பரம்பரை செங்கோல் ஆதீனத்தால் ‘சிவஞானபோதம் வாழ்வியல் ஆய்வு விளக்கம்’
நூலுக்காக ‘சிவஞான வித்தக’ விருதளிக்கப் பெற்றவர்.
இவரது கட்டுரைகள் ஐம்பதுக்கு மேல் வெளி வந்துள்ளன. 1991 தொடங்கி சித்தாந்த செம்மணி,
பாரதியார் ஆளுமை உருவாக்கம், சங்க இலக்கியச் செம்மை நலம், பாரதி பார்வைகள், சைவ
சித்தாந்த வரைவு, நால்வகை சமயங்கள், தமிழில் மெய்யுணர்வு, வாழ்வியல் ஆய்வு விளக்கம்,
சோமசுந்தர நாயகர் நூல்கள், மாதவச் சிவஞான முனிவர், வள்ளலாரின் தெய்வ மணி மாலை,
மரணமிலாப் பெருவாழ்வு, ஔவையார் நல்வழி, பன்னிரு உபநிடதங்கள் உட்பட இருபதுக்கும்
மேற்பட்டவை இவரது நூல்கள்.
இலக்கிய, சாத்திர, தோத்திர சொற்பொழிவுகளை 1989 தொடங்கி தொடர்ந்து நடத்தி வருகிறார்.
திருவான்மியூர் மருந்தீசுவரர் திருக் கோயிலில் வாரந்தோறும் இரண்டு சொற்பொழிவுகளை 2002
தொடங்கி நிகழ்த்தி வருகிறார். இலங்கைக்கு மூன்று முறை சென்று விரிவாகச் சொற்பொழிவு
ஆற்றியுள்ளார்.
தமிழக அரசு நூலகத் துறையின் சார்பில் திருநெல்வேலி மாவட்ட மைய நூலக வாசகர் வட்டம்
ஆசிரியரின் ‘சங்க இலக்கியச் செம்மல் நலம்’ நூலுக்காக ‘செம்மொழி ஞாயிறு’ விருது
அளித்தது (2008). இன்னும் ‘திருநெல்வேலி மாவட்ட அரிமா சங்கம்’ இளைஞர் நலம் மற்றும்
தமிழ் வளர்ச்சிப் பணிகளைப் பாராட்டி, பாராட்டுச் சான்றிதழ் அளித்தது.