தமிழறிஞர் வேம்பத்தூர் கிருஷ்ணன்

தமிழறிஞர் வேம்பத்தூர் கிருஷ்ணன்

Profession அறிஞர்

Biography

சிவகங்கை வேம்பத்தூரில் அ.முத்தையா பிள்ளை- மீனாட்சியம் மாள் தம்பதியருக்கு 28.09.1934
அன்று பிறந்தார். இவருடைய தந்தை பர்மாவில் உள்ள மியான்மர் நகரில் வசித்த தனால் இவரும்
6-ம் அகவையிலேயே அங்கு சென்றார். அங்கு இவரால் பள்ளிக் கூடம் சென்று படிக்க முடியவில்லை
என்றாலும், நகரத்தார் விடுதி நூலகத்தில் பாதுகாத்து வைக் கப்பட் டிருந்த நூல்களைப்
படித்து கல்வியறிவு பெற்றார்.

இவரது பெரியப்பா நேதாஜி யின் ‘இந்திய தேசிய இரா ணுவ’த்தில் பணியாற்றியதால் இவரும்
‘பாலசேனா’ எனும் இளைஞர் பயிற்சிப் பாசறை யில் பங்கேற்றுப் பயிற்சிப் பெற்றார். இரண்டாம்
உலகப் போரில் நேரடி அனுபவம் பெற்ற கிருஷ்ணன் 1946-இல் இந்தியா திரும்பினார்.

மதுரையில் ‘நியூ பர்மா ஸ்டோர்’-இல் எடுபிடி வேலை செய்தார். அங்குள்ள ‘சித்திரகலா
ஸ்டுடியோவில் படப்பிடிப்பை நேரில் பார்க்கும் வாய்ப்பு இவருக்குக் கிடைத்தது. அதனால்,
சினிமா மீது விருப்பம் ஏற்பட்டது. 1952-இல் சென்னைக்குச் சென்றார். 1953-இல் ஜெமினி
ஸ்டுடியோவில் துணை நடிகரானார். உதவி இயக்குநர், விளம்பரப் பாடலாசிரியர், திரைக் கதை,
வசனம், பாடலாசிரியர் என்று படிப்படி யாக வளர்ந்து 90 திரைப்படங்களில் பல்வேறு பணிகளைப்
புரிந்து மூன்று தலைமுறை திரைக் கலைஞர்களுடன் பணியாற்றும் வாய்ப்பு பெற்றிருந்தார்.

32-ஆம் அகவையில் கிருஷ்ணம்மாள் என்கிற பாப்பாவைத் திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு
இரு மகன்கள், இரு மகள்கள்.

1970-இல் ‘சுடர்மணி பதிப்பகம்’ தொடங்கி 25 ஆண்டுகளாகத் தொடர்ந்து நூல்களை வெளி யிட்டு
இலவசமாக வழங்கினார்.

‘குபேரத்தீவு’ திரைப்படத்திற்கு எழுதிய ‘விதி யெனும் குழந்தை விளையாடுது…’
என்பதே இவரது முதல் திரைப்படப் பாடல். 1991-இல் இவருடைய திரைக்கதை, வசனம், பாடல்களில்
‘காவிரியின் கதை’ முதலான பல 13 வாரத் தொடர்கள் ஒளிபரப்பாகின. தொலைக்காட்சிக்காக சில
கதைகளையும் எழுதியுள்ளார். பக்தி பாடல்கள் அடங்கிய பல ஒலிநாடாக்களையும்
குறுந்தகடுகளையும் வெளியிட்டுள்ளார்.

‘சனாதன தர்மபீடம்’ (1994), ‘ஹிந்துமித்திரன்’ (1995) ஆகிய இதழ்களின் ஆசிரியராகப் பணி
யாற்றியுள்ள இவர், ஏறத்தாழ தமிழின் முக்கிய மான எல்லா பத்திரிகைகளிலும் இதழ்களிலும்
கதைகள், கவிதைகள், கட்டுரைகள் எழுதினார்.

தேசியம், தெய்வீகம், திரையுலகம், ஔவைத் தமிழ் ஆகிய நான்கு துறைகள் சார்ந்த 80க்கும்
மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார். தாகூரின் ‘சியாமா’ இசைநாடகத்தை தமிழாக்கம் செய்தார்.
சில நூல்களைப் பதிப்பித்தார். தமிழக அரசின் ‘தமிழறிஞர் விருது’ உட்பட பல
விருதுகளையும் பரிசுகளையும் பெற்றுள்ளார். இவர்தம் 84ஆவது வயதில் முதுமையின் காரணமாக
26.12.2018 அன்று சென்னை சூளைமேட்டில் உள்ள தனது இல்லத்தில் காலமானார்.