பேராசிரியர் இலெனின் தங்கப்பா

பேராசிரியர் இலெனின் தங்கப்பா

Profession அறிஞர்

Biography

திருநெல்வேலி தென்காசி குறும் பலாப்பேரில் புலவர் ஆ.மதனபாண்டியன் -இரத்னமணி
தம்பதியருக்கு 08.03.1934 அன்று பிறந்தார்.

5-வது வயதிலேயே பழந்தமிழ் நூல்களை தனது தந்தையினால் புகட்டப் பெற்றார்.

1950-இல் தூய யோவான் கல்லூரியில் இடைநிலை வகுப்பையும், 1952-இல் சென்னை பல்கலைக்
கழகத்தில் பொருளாதாரத்தில் இளங்கலை (பி.ஏ.) பட்டத்தையும் பெற்றார். இடைநிலை பொதுத்
தேர்வில் பல்கலைக் கழகத்திலேயே தமிழ்ப் பாடத்தில் முதல் மதிப் பெண் பெற்ற இவர், 1954-இல்
இளங்கலைப் பல்கலைக் கழகப் பொதுத் தேர்வில் தமிழில் பல்கலைக் கழகத்திலேயே முதல் மதிப்பெண்
பெற்றார்.

1954-இல் பாளையங்கோட்டையிலுள்ள தூய யோவான் உயர்நிலைப் பள்ளியில் பயிற்சி பெறாத
ஆசிரியராகத் தனது ஆசிரியப் பணியைத் தொடங்கினார். 1955-இல் பரமக் குடியில் ஆறு மாத
காலம் ஆசிரியராகப் பணியாற்றிய பின், 1956-இல் சைதாப்பேட்டையில் ஆசிரியர் பயிற்சியினைப்
(பி.டி.)முடித்து, 1957-இல் சென்னை அருகிலுள்ள திருநின்றவூர் தாசர் உயர்நிலைப்
பள்ளியில் மீண்டும் ஆசிரியர் ஆனார். 26.5.1959-இல் இவருடன் பணியாற்றிய ஆசிரியை
விசாலாட்சியைக் காதலித்து சாதி மறுப்புத் திருமணம் செய்துகொண்டார்.

திருமணத்துக்குப் பின், 1959 இல் புதுவையிலுள்ள உயர்நிலைப் பள்ளியில் ஆசிரியராகப்
பணியாற்றிய தங்கப்பா, 1968 முதல் புதுவையிலுள்ள தாகூர் கலைக் கல்லூரியில் இருபது
ஆண்டுகளும், காரைக்கால் அறிஞர் அண்ணா கலைக் கல்லூரியில் நான்கு ஆண்டுகளும், புதுவை
பாரதிதாசன் மகளிர் கல்லூரியில் மூன்று ஆண்டுகளும் விரிவுரையாளராகப் பணியாற்றி
1994-இல் பணி நிறைவு பெற்றார்.

இவர் 14 பாட்டு நூல்கள், 7 கட்டுரை நூல்கள், 5 மொழிபெயர்ப்பு நூல்கள், 3 குழந்தை நூல்கள்,
1 தொகுப்பு நூல், 3 கையடக்க நூல்கள் ஆகிய வற்றை எழுதினார். இவரது படைப்புகளில்
எளிமை, சுருக்கம், தெளிவு, தூயதமிழ், குற்றம் கடிதல், அங்கதச் சுவை, அன்பின்
வெளிப்பாடு, குழந்தை இன்பம், இயற்கையைப் போற்றுதல், மொழிப்பற்று போன்ற பல்வேறு தன்மைகளைக்
காணலாம்.

இவரது படைப்புப் பணிகளுக்காக அரவிந்தர் ஆசிரமப் பரிசு (1972), பாவேந்தர் விருது
(1991), பாரதிதாசன் விருது (1991), பெரியார் விருது (1998), கலைமாமணி விருது
(2001), தமிழ் தேசியச் செம்மல் விருது (2002), சிற்பி இலக்கிய விருது (2007),
இலக்கிய மாமணி (2007), இன மானக் குரிசில் (2009), திருப்பூர் தமிழ்ச் சங்கம் (2010),
சாகித்ய அகாடமி மொழி பெயர்ப்பு விருது (2012), புதுவை அரசின் நேரு விருது
(2012) ஆகிய விருதுகளை வழங்கப் பெற்றுள் ளார். இவர் 31.5.2018-இல் புதுச்சேரியில்
காலமானார்.