| Profession | அறிஞர் |
|---|
தஞ்சை ஒரத்த நாடு காசளநாட்டு நடுவூரில் குருசாமி கீருடையார் – சின்னப்பிள்ளை
தம்பதிக்கு 14.07.1933-இல் பிறந்தார்.
கும்பகோணம் அரசு ஆடவர் கலைக் கல்லூரியில் புகுமுக வகுப்பு பயின்றார். அண்ணாமலைப்
பல்கலைக்கழகத்தில் பி.ஏ. ஆனர்ஸ், பட்டம் பெற்றார். எம்.லிட்., பட்டத்திற்காக தெ. பொ.மீ.யின்
நெறியாள்கையில் ‘கம்பராமாயணத்தில் உவமைகள்’ என்ற தலைப்பில் இவர் மேற்கொண்ட ஆய்வு முடிவு
பெறவில்லை. மொழியியலில் சான்றிதழ் பெற்றார்.
இவரது துணைவியர் பக்கிரியம்மாள். இவர்களுக்கு திருமாவளவன் என்றொரு மகன், கலைமகள்,
திருமகள் என இரு மகள்கள்.
1953-இல் கும்பகோணம் அரசு ஆடவர் கலைக் கல்லூரியில் விரிவுரையாளராகப் பணியில்
சேர்ந்தார். 1995-இல் தஞ்சை சரபோஜி கல்லூரியில் தமிழ்ப் பயிற்றுநராகப் பணியேற்று 14
ஆண்டுகள் தமிழ் உதவிப் பேராசிரியராகப் பணியாற்றினர். 1969-70இல் சென்னை ஆவணக்
காப்பகத்தில் தமிழ் உதவிப் பேராசிரியராகப் பணியாற்றியபின், 1970-இல் தமிழ் வளர்ச்சித்
துறையில் தனி அலுவலர், உதவி இயக்குநர், துணை இயக்குநர் என்று படிப்படியாக பணி உயர்வு
பெற்று 1990-இல் அத்துறையின் இயக்குநர் ஆனார்.
‘தமிழ்ப் புலவர் குழு’-வின் தலைவராகவும், ‘ஓங்கு தமிழ்’ இதழின் ஆசிரியராகவும்
பணியாற்றினார். தன்னைக் கவிஞர் என்று அழைப் பதையே சிவஞானம் விரும்பினார். பாரதிதாசனின்
‘குயில்’ இதழிலும், கண்ணதாசனின் ‘கவிதை’ இதழிலும் கவிஞர் மேகநாதன், நடுவூர் நல்லகவி
என்ற புனைபெயர்களில் எழுதினார். ‘வளவன் பதிப்பகம்’, ‘பக்கிரியம்மாள் பதிப்பகம்’ என இரு
பதிப்பகங்களைத் தொடங்கி மலைபடுகடாம், அகநானூற்றில் பாலைத்திணைப் பாடல்கள், இலக்கியக்
கட்டுரைகள், கம்பனின் தத்துவங்கள் ஆகிய நூல்களைப் பதிப்பித்தார். மாணவர்கள், ஆய்வாளர்களின்
நூல்களையும் பதிப்பித்தார். உருதுக் கவிஞர் காலிப் கவிதைகளை ‘உருதுப் பாவேந்தர் காலிப்
கவிதைகள்’ எனத் தமிழாக்கம் செய்து வெளியிட்டார்.
திருக்குறளில் மிகுந்த ஆழமாக சில கருத்து களை ஆராய்ந்து மயிலாப்பூர், திருவள்ளுவர்
கோயில், வள்ளுவர் கோட்டம், இராஜராஜன் பண்பாட்டுக் கழகம் போன்ற இடங்களில் வாரந் தோறும்
சொந்தச் செலவில் சென்று சொற்பொழிவாற்றினார்.
பின்தங்கிய சமூகத்தில் பிறந்த இவர் பின் தங்கிய, தாழ்த்தப்பட்ட மக்களின் உயர்வுக்காகப்
பாடுபட்டார்.
இளமையிலேயே தந்தை பெரியாரின் சுய மரியாதை இயக்கத்திலும், திராவிட முன்னேற்றக்
கழகத்திலும் தீவிர ஈடுபாடு கொண்டு பலரை உருவாக்கிய இவர், இறப்பதற்கு இரண்டு ஆண்டு
களுக்கு முன் சுப்பிரமணிய சாமியின் ஜனதா கட்சியில் இலக்கிய அணித் தலைவரானார்.
தஞ்சையில் பாரதிதாசனின் ‘கவிஞர் பெரு மன்றம்’ தொடங்கினார். அம்மன்றம் 19.07.1997 அன்று
இவருக்குப் புகழஞ்சலி செலுத்தியது.