| Profession | எழுத்தாளர் |
|---|
தஞ்சை ஒரத்த நாடு கண்ணன் நன்குடியில் க.து.அய்யாசாமி மண்கொண்டார் – முத்தம்பாள்
தம்பதியருக்கு 08.07.1932 அன்று பிறந்தார்.
ஒரத்தநாடு உயர்நிலைப் பள்ளியில் பள்ளிப்படிப்பினை படித்தார். சரபோஜி மன்னர் மாலைக்
கல்லூரியில் பி.ஏ. (வரலாறு) பயின்றார்.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் தேர்வு எழுதி வெற்றி பெற்று மாநில
அரசின் வருவாய்த் துறையில் எழுத்தர் பணியில் 1952-இல் சேர்ந்தார். 1953-இல் அஞ்சல்
துறையில் எழுத்தர் ஆனார்.
வள்ளலாரின் அருட் பாவும், டால்ஸ்டாயின் என்னும் கதையும் தன்னை எழுதத் தூண்டியதாகக்
குறிப்பிடுகிறார். 1953 முதல் பல்வேறு இதழ்களில் எழுதத் தொடங்கினார். கலைமகள் இதழில்
‘நட்சத்திரப் பூ’ என்னும் தலைப்பில் 10 கதைகளும், ‘யாருக்காக வாழ்கிறாள்’ என்னும் தொடர்
புதினமும் அப்போது வெளியானது.
சிறுகதை, புதினம், வானொலி நாடகம், கவிதை, வாழ்க்கை வரலாறு, பயணம், ஒப்பாய்வு ஆகியன
சார்ந்த 60-க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார்.
எட்டாம் உலகத் தமிழ் மாநாட்டிதழின் இரண்டாம் பதிப்பின் பொறுப்பாசிரியராகப் பணியாற்றினார்.
கலைமகள், ஆனந்தவிகடன் ஆகிய இதழ்கள் நடத்திய சிறுகதைப் போட்டிகளில் பரிசு, அகில இந்திய
வானொலியின் வானொலி நாடகப் போட்டியில் முதல் பரிசு, ‘ஒரு தமிழ்ப்பூ தவிக்கிறது’
காவியத்திற்காக தமிழக அரசின் முதல் பரிசு, பேரறிஞர் அண்ணாவின் வாழ்க்கை வரலாறு
நூலுக்கு பேரறிஞர் அண்ணா விருது, தென்றல் இதழின் வெண்பா போட்டியில் பரிசு, ஜிக்ஷீமீமீs
ணீக்ஷீமீ னீஹ் ஜிமீணீநீலீமீக்ஷீs’ கவிதைக்கு தாய்லாந்து அரசின் பரிசு, மற்றும் பாரதிதாசன்
விருது, கலைமாமணி விருது ஆகிய பரிசுகளையும், விருதுகளையும் வழங்கப் பெற்றுள்ளார்.
இவரது பல படைப்புகள் பள்ளி, கல்லூரி மாணவர் களுக்கு பாடநூல்களாக இடம் பெற்றன.
‘போர்வாள்’, ‘போல்டு இந்தியா’ நாளிதழ் களின் ஆசிரியராகவும், ‘நவமணி’ நாளிதழின்
தலையங்க ஆசிரியராகவும், ‘மக்கள் பாதை மலர் கிறது’, ‘ஆங்கில மாத இதழ்களின்
ஆசிரியராகவும் பணியாற்றியுள்ளார்.
பணி நிறைவு பெறுவதற்கு பத்தாண்டுகளுக்கு முன் விருப்ப ஓய்வு பெற்று எழுத்துப் பணியை
மேற்கொண்டார். தமிழறிஞர் மறை மலையடிகளார், முன்னாள் அமைச்சர் எஸ்.டி. சோமசுந்தரம்
ஆகியோரின் வாழ்க்கை வரலாறு மற்றும் ‘தூயதமிழ் வாசமும் துப்பாக்கி வீரங் கனையும்’ ஆகிய
நூல்களை எழுதியுள்ளார்.
இவருக்கு அமெரிக்காவிலுள்ள கலிபோர் னியா பல்கலைக் கழகம் டி.லிட். பட்டம் வழங்கி
சிறப்பித்துள்ளது.