மலையமானார்

மலையமானார்

Profession எழுத்தாளர்

Biography

திருவண்ணாமலையில் ஆசிரியர் இரா.நாராயணன் – பால குசாம்பாள் இணையருக்கு 15.07.1932
அன்று பிறந்தார். இயற்பெயர் நா.இராசகோபாலன்.

திருப்பதியிலுள்ள திருவேங்கடன் கீழ்த்திசைக் கல்லூரியிலும், பின்னர் கரந்தை தமிழ்க்
கல்லூரியிலும் பயின்று புலவர் பட்டம் பெற்றார். கரந்தை தமிழ்க் கல்லூரியில் பயின்ற போது
புரட்சிக்கவிஞர் பாரதிதாசனுடன் ஒரு நாள் முழுவதும் இருப்பதற்கான வாய்ப்பைப் பெற்றார்.
இளங்கலை (பி.ஏ.), இளம் இலக்கியம் (பி.லிட்.), முதுகலை (எம்.ஏ.) ஆகிய பட்டங்களைப்
பெற்றார். தனிப் பட, பேராசிரியர் இளவரசர் வழிகாட்டலில் முனைவர் பட்டம் பெற்றார். சென்னைப்
பல்கலைக் கழகத்தில் சேர்ந்து இளம் நூலக அறிவியல் பட்ட மும், பிரெஞ்சு மொழிப் பட்ட யமும்
பெற்றார்.

பள்ளிப்படிப்பு முடிந்தவுடனே செங்கம் வட்டாட்சியர் அலுவலகத்தில் எழுத்தர் பணியில்
சேர்ந்தார். சில மாதங்களில் அங்கிருந்து விலகினார். பின்னர் சென்னை குருசாமி பள்ளியில்
தமிழாசிரியர் ஆனார். அதன்பின், சென்னைப் பல்கலைக் கழக நூலகத்தில் தொழில்நுட்ப
உதவியாளராகப் பணியாற்றிய இவர், கன்னிமாரா நூலகத்திலும், தொடர்ந்து நெடுஞ்சாலைத்
துறையிலும் நூலகராகப் பணியாற்றினார்.

சென்னைப் பல்கலைக் கழக நூலகராகப் பணியாற்றிய மலையமானாருக்கும் இராணி மேரி கல்லூரியில்
பணியாற்றிய சரளாவுக்கும், சென்னை பல்கலைக்கழகத்தின் தமிழ்த் துறை தலைவர் ந.சஞ்சீவியும்,
சிறுவை மோகனசுந்தரனாரும் பேசி திருமணத்தை 19.11.1969 அன்று நடத்தி வைத்தனர். மயிலை
சீனி வேங்கடசாமி போன்ற வந்து வாழ்த்தினர். மலையமானாரின் துணைவியார் எழுத்தாளரும்
பேராசிரியருமான முனைவர் சரளா இராஜ கோபாலன் ஆவார். இவர்களுக்கு தமிழ்ஒளி என்றொரு
மகள். அன்புஒளி என்றொரு மகன்.

மலையனார் கதை, கவிதை, நாடகம், சிறுவர் இலக்கியம், அறிவியல், வரலாறு ஆகிய துறைகள்
சார்ந்த 78 நூல்களை எழுதியுள்ளார்.

குழந்தை எழுத்தாளர் சங்கம், உலகக் கவிஞர் பூங்கா, தலைநகர் தமிழ்ச் சங்கம், தமிழ் எழுத்
தாளர் சங்கம், இந்திய நூலாசிரியர் பெருமன்றம், இந்தியப் பண்பாட்டு அறிவியல் மன்றம், தமிழ்
நாடு பண்பாட்டு அறிவியல் நூற்றொகைத் தொகுப்பு திட்டக் குழு, உலகத் திருக்குறள் பேரவை,
தமிழ்க் கவிஞர் மன்றம், பதிப்பாளர் மையம் ஆகிய அமைப்புகளில் முக்கிய பொறுப் புகளை ஏற்று
பணியாற்றியுள்ளார். தலைநகர் தமிழ்ச் சங்கம் தமிழின் நலனுக்காக நிகழ்த்திய போராட்டங்களில்
பங்கேற்று எட்டு முறை கைதாகி உள்ளார்.

‘இளம் விஞ்ஞானி’, ‘இயற்கை’, ‘ஐந்திணை’, ‘திருவள்ளுவர் அணி’, ‘மக்கள் செங்கோல்’ ஆகிய
இதழ்களில் பணியாற்றியுள்ளார்.

தமிழக அரசின் ‘முத்தமிழ்க் காவலர் கி.ஆ .பெ.விசுவநாதனார் விருது’ (2013), இந்திய
அரசின் ‘தேசிய அறிவியல் விருது’ (2014) உள் ளிட்ட 30-க்கும் மேற்பட்ட விருதுகளைப்
பெற்றுள்ளார்.