| Profession | அறிஞர் |
|---|
இராமநாதபுரம் வாழவந்தான்புரத்தில் வாழ வந்தம்மை – இராமு இணை யர்க்கு 30.01.1930 அன்று
பிறந்தார்.
ஆங்கிலேயர் நடத்திய பள்ளியில் எட்டாம் வகுப்பு வரை படித்து, கோவில்பட்டியில் 1944-இல் ஓர்
ஆசிரியர் பயிற்சிப் பள்ளியில் சேர்ந்து 1946-இல் நிறைவு செய்தார். 1946-இல் தாம்
ஆசிரியராகப் பயின்ற பள்ளியிலேயே பணியில் சேர்ந்தார். 11.09.1946-இல், தம் 16ஆம்
வயதில், செல்வம் அம்மையாரை வாழ்க்கைத் துணையாக ஏற்றார். இன்று வரை 4500-த்துக்கும்
மேற்பட்ட தமிழ் முறைத் திருமணங்களை நடத்தி வைத்திருக்கும் இளங்குமரனார் திருமணத்தை இரவு
9 மணிக்கு மகளிர் நடத்தி வைத்தனர்.
பள்ளி நிர்வாகம் முறையாக இயங்காததால் அம்பாசமுத்திரம் வட்டம், பிரம்ம தேசம்,
மன்னார்கோயிலில் 1947-இல் தலை மையாசிரியருக்குரிய விடுமுறை பணியிடத்தில் சேர்ந்தார்.
உள்ளூர் பள்ளியை இவரது அண்ணன் சுப்பையா பெயரில் வாங்கி 13.06.1947-இல் பள்ளியைத்
திறந்து அப்பள்ளிக்குத் தலைமை ஆசிரியரானார். 1951-இல் வாழ வந்தாள்புரம் பள்ளிப் பணியை
முடித்து, கரிவலம் வந்த நல்லூர் உயர்நிலைப் பள்ளியில் தமிழாசிரியராகப் பணியில்
சேர்ந்தார்.
இல்வாழ்வின் பயனாக 1948-இல் மகள் கலைமணியும், 1949-இல் மகன் இளங்கோவும் தோன்றினர்.
திருநெல்வேலியிலிருந்து வெளிவரும் ‘நெல்லைச் செய்தி’ கிழமை இதழின் இலக்கியச் சோலை
பகுதியில் இவரது கட்டுரைகள் தொடர்ந்து வரத் தொடங்கின. அதனைப் பொறுக்காத தலைமை
ஆசிரியர் விதிமுறைகள் பற்றிப் பேச, அப்பள்ளியிலிருந்து விலகி 1952-இல் தளவாய்புரம்
பு.மு.மா. உயர் நிலைப் பள்ளியில் தமிழாசிரியராகப் பணியில் சேர்ந்தார். இக்காலகட்டத்தில்
ஐந்து திங்கள் ஊதியமில்லா விடுப்பில் சென்னை சைதாப்பேட்டை ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில்
1954 முதல் 1955 வரை பண்டிதப் பயிற்சி பெற்றார்.
1953-இல் பாரதி, 1956-இல் திலகவதி என இரு மகள்கள் தோன்றினர்.
பள்ளி நிர்வாகம் ஓர் ஆசிரியர் மீது மேற்கொண்ட தவறான நடவடிக்கையினால் இளங்குமரனார் உட்பட
8 ஆசிரியர்கள் அப்பள்ளியிலிருந்து 1958-இல் விலகினர். மதுரை உயர் நிலைப் பள்ளியில்
தலைமை ஆசிரியரானார்.
1963-இல் காந்தி கிராமத்தில் நடைபெற்ற குழந்தைகள் விழாவில் சவகர்லால் நேரு, திருக்
குமரனாரின் திருக்குறள் கட்டுரைகள் பத்து தொகுதிகளை வெளியிட்டார்.
மதுரை திருநகரில் 1961-இல் ஓர் இடம் வாங்கி புதுவீடு கட்டிக் குடியேறினார். 1966-இல்
90 வயதைக் கடந்த தாயார் இறந்தார். 1971-இல் துணைவியார் செல்வம் மறைந்தார்.
400-க்கும் மேற்பட்ட நூல்களை எழுதி யுள்ளார். ‘திருவள்ளுவர் வாழ்நாள் சாதனை யாளர்
விருது’ உட்பட மதிப்புமிக்க பல்வேறு விருதுகளைப் பெற்றுள்ளார்.
இவர் 25.7.2021-இல் தனது 84-ஆவது அகவையில் மதுரை திருநகரில் அவரது இல்லத்தில்
காலமானார்.