பேராசிரியர் ச.அகத்தியலிங்கம்

பேராசிரியர் ச.அகத்தியலிங்கம்

Profession அறிஞர்

Biography

கன்னியாகுமரி கேசவன்புதூத்தில் 19.8.1929 அன்று பிறந்தார். தந்தையார் சண்முகம் பிள்ளை.
தாயார் அருணாசலத்தம்மாள்.

கேரளப் பல்கலைக்கழகத்தில் கணிதத்தில் இளநிலைப் பட்டம், அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் தமிழில்
முதுகலைப் பட்டம்பெற்று, கேரள பல்கலைக்கழகத்தில் பேரா.வ.ஐ.சுப்பிரமணியம் வழி
காட்டுதலில் ‘பதிற்றுப் பத்து மொழிக்கு ஒரு விளக்கமுறை இலக்கணம்’ எழுதி முனைவர் பட்டம்
பெற்றார்.

பின்னர், அமெரிக்கா இந்தியானா பல்கலைக்கழகம் சென்று அங்கு புதிதாக வளர்ந்த மாற்றிலக்கண
மொழியியலில் இன்னொரு முனைவர் பட்டம் பெற்றார்.

1957-இல் நாகர்கோவில் தென்திருவிதாங்கூர் இந்து கல்லூரியில் தமிழ் விரிவுரையாளராக
பணியில் ¢சேர்ந்த இவர், அண்ணாமலைப் பல்கலைக் கழகம், தில்லி பல்கலைக்கழகம் ஆகியவற்றில்
மொழியியல் மற்றும் தமிழ்த் துறைகளில் பல்வேறு பொறுப்புகளை ஏற்றுப் பணியாற்றினார்.

மேலும், சிக்காக்கோ பல்கலைக் கழகம், மிக்சிகன் பல்கலைக் கழகம் ஆகியவற்றில் வருகைதரு
பேராசிரியராகவும் பணியாற்றினார். இறுதியாக, 1986- 89 இல் தஞ்சாவூர் தமிழ்ப்
பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராகப் பணியாற்றினார்.

கல்வி தொடர்பாகவும் மொழி, இலக்கியம் தொடர்பாகவும், நடுவண் அரசும், மாநில அரசும்
அமைத்திருந்த 70க்கும் மேற்பட்ட குழுக்களில் தலைவராகவும், உறுப்பினராகவும், வல்லுநராக
வும் செயலாற்றினார்.

அகத்தியலிங்கம் துணைவியார் பொன்னம்மாள். இவர்களுக்கு இரண்டு மகள்கள்.

பேராசிரியர் ச.அகத்தியலிங்கம் 88 தமிழ்க் கட்டுரைகள், 78 ஆங்கில கட்டுரைகள் ஆகிய வற்றை
எழுதியுள்ளார். சங்கத்தமிழ் குறித்த ஆய்வுத் திட்டம் மூலமாக ‘சங்கத்தமிழ்’ 1, 2, 3, 4, 5
ஆகிய தொகுதிகளாக வெளியிட்டுள்ளார். பல்கலைக் கழக மான்யக் குழுவின் கீழ் பெரிய
ஆய்வுத்திட்டத்தை மேற்கொண்டார். மேலும் என்ற ஆய்வினை மிசிஷிஷிஸி திட்டத்தின் கீழ் அவர்
மேற்கொண்டார்.

தமிழில் 28 நூல்களையும், ஆங்கிலத்தில் 6 நூல்களையும் பொதுநூல், பாடநூல், ஆய்வுநூல் ஆகிய
மூன்று நிலைகளில் படைத்துள்ளார். மேலும், தமிழில் 29 நூல்களையும், ஆங்கிலத்தில் 7
நூல்களையும் பிற பேராசிரியர்களுடன் இணைந்து பதிப்பித்துள்ளார்.

இவரது வழிகாட்டுதலில் 50-க்கும் மேற்பட்ட மாணவர்கள் முனைவர் பட்டம் பெற்றுள்ளனர்.

இவர்தம் ‘கவிதை உருவாக்கம்’ நூலுக்காகத் தமிழ் வளர்ச்சித் துறையின் விருதையும், திருவை
யாறு ஔவை தமிழர் அருளாளர் விருது, கழகத்தின் ‘தொல்காப்பியச் செம்மல்’, நாகர்கோவில்
கலைக் கல்லூரியின் ‘நல்லாசிரியர்’, 2004-இல் தமிழக அரசின் சிறந்த தமிழ்
எழுத்தாளருக்கான விருது ஆகியவற்றைப் பெற்றுள்ளார்.

.