புலவர் நா.தியாகராஜன்

புலவர் நா.தியாகராஜன்

Profession அறிஞர்

Biography

பூம்புகார், மேலப்பெரும் பள்ளம் சி. நாகமுத்து — உதயம் தம்பதியருக்கு 16.12.1928
அன்று பிறந்தார்.

பள்ளிப் பருவத்திலேயே நாடகம்,விளையாட்டு, கட்டுரை போன்ற போட்டிகளில் பங் கேற்று
பரிசுகள் பெற்றுள்ளார்.

படம் எடுப்பதில் ஆர்வம் மிகுந்திருக்கிறது. பின்னாளில் இவர் எடுத்த இயற்கைக் காட்சிகள்,
இறைவனின் பல்வேறு செப்புத் திரு மேனிகள், கோயில்களின் கலை அழகுமிக்க புகைப்படங்கள்
‘ஆனந்த விகடன்’, ‘கல்கி’, ‘கலைக்கதிர்’ போன்ற இதழ்களி லும், தீபாவளி மலர், பொங்கல் மலர்
போன்றவற்றிலும் வெளி வந்துள்ளன.

மாணவப் பருவத்திலேயே 04.02.1946-ல் மயிலாடுதுறை ரயில் நிலையத்தில் மகாத்மா
காந்தியும், ராஜாஜியும் வந்து இறங்கும் காட்சியை நேரில் காணும் வாய்ப்பைப் பெற்றவர்.

பள்ளிப் பருவத்திலேயே புத்தகங்களை வாசிப் பதிலும், சேகரித்து வைப்பதிலும் முனைப்பாக
இருந்தார். எஸ்.எஸ்.எல்.சி. படிப்பதற்குள் ளாகவே இவரிடம் ஒரு நூலகம் இருந்தது.

சென்னைப் பல்கலைக் கழகத்தில் 1968-இல் புலவர் பட்டம் பெற்றார்.

1953-இல் இவருக்கும் மயிலாடுதுறை ஜெய பாரதிக்கும் திருமணம் நடைபெற்றது. இவர் களுக்கு
எழில், பாரி, பார்த்திபன், ராமன் என நான்கு மகன்கள், வாசுகி என்றொரு மகள்.

இப்போது ‘பூம்புகார் கல்லூரி’ என்ற பெயரி லுள்ள ‘கீழ்த்திசை பண்பாட்டுக் கல்லூரி’யைத்
தொடங்குவதற்கு முன்முயற்சி மேற்கொண்டார்.

1957-இல் ‘மாதவி மன்றம்’ தொடங்கி, அதன் செயலாளராகப் பணியாற்றினார்.

இவரது தமிழ்ப் பணியைப் பாராட்டி பூம்புகார் தமிழ்ச் சங்க நட்பு வட்டம் இவருக்கு ‘சிலம்புத்
தென்றல்’ எனும் பட்டம் அளித்தது. இலக்கிய ஆர்வலர்கள் இப்பட்டத்தையே பெரு மளவில்
பயன்படுத்துகிறார்கள். மேலும், பல்வேறு அமைப்புகள் ‘புத்தகத் தேனீ’, ‘சிலம்பு மணி’ உட்பட
பல்வேறு விருதுகளையும் பட்டங் களையும் வழங்கி சிறப்பித்துள்ளன.

பல்வேறு இதழ்களில் விமர்சனக் கட்டுரைகள் எழுதியுள்ளார். 1964-இல் வெளியான ‘பூம்புகார்’
திரைப்படம் குறித்து கல்கி இதழில் இவர் எழுதிய விமர்சனம் (01.10.1964) அக்கால
கட்டத்தில் பெருமளவில் பேசப்பட்டது.

பூம்புகார் அகழாய்வு பற்றி ‘டிஸ்கவரி’ தொலைக்காட்சியில் ஒரு பேட்டி அளித் துள்ளார்.
‘பூம்புகாரில் வரலாற்றுச் செய்திகள்’ எனும் தலைப்பில் பொதிகை தொலைக்காட்சி யில்நடைபெற்ற
கலந்துரையாடலில் பங்கேற்றார். தந்தி தொலைக்காட்சிக்கு இவர் அளித்த பேட்டி ‘கண்ணகி
அடிச்சுவட்டில்’ எனும் தலைப்பில் 07.09.2014 தொடங்கி 15 வாரங்களுக்கு ஒளிபரப்பானது.
இவ்வாறு இதழ்கள், வானொலி, தொலைக்காட்சி மூலமாக பூம்புகாரின் சிறப்பி னையும்,
புகழையும் உலகோர் அறியும் வண்ணம் வெளிப்படுத்தியுள்ளார்.