| Profession | எழுத்தாளர் |
|---|
வேலூர் கோவிந்தன் – பட்டம்மாள் தம்பதியருக்கு 02.05.1927 அன்று பிறந்தார்.
சிந்தாதிரிப்பேட்டை நகராண்மைக் கழகப் பள்ளியில் 4-ஆம் வகுப்பு வரை படித்தார். பிறகு
சகோதரியுடன் புதுச்சேரியிலுள்ள பாக்கஉடையான் பட்டு கிராமத்திற்குச் சென்று அங்கே தமிழ்
பயின்றார்.
இசையில் நாட்டங்கொண்டு 1947-இல் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் இசை பயின்றார். இசைமாமன்னர்
சித்தூர் சுப்பிரமணிய பிள்ளையிடம் குருகுலவாசம் இருந்து தங்கப்பதக்கம் பரிசு பெற்றார்.
மகாவித்வான் வெள்ளை வாரணர், அ.சிதம்பரநாதன் செட்டியார் போன்றோரிடம் முறையாகத் தமிழ்
பயின்றார்.
‘கலை மன்றம்’, ‘கலை அரங்கம்’ இதழ்களின் துணை யாசிரியராகவும் ‘முருகு’, ‘மங்களம்’
ஆகிய இதழ்களின் நிர்வாக ஆசிரியராகவும் பணியாற்றினார்.
1955-இல் இவருக்கும் சுப. சரஸ்வதிக்கும் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு அம்பிகாபதி,
மாமல்லன், செல்வக்கண்ணன் என மூன்று மகன்கள்; பீலிவளை, அம்மங்கை, ஸ்ரீ, சமயபுரி, வானதி என
ஐந்து மகள்கள்.
கோவி.மணிசேகரன் 1954-இல் எழுதிய ‘பரம் பொருள்’ எனும் முதல்கவிதை ‘தமிழ்நிலம்’ மாத
இதழில் வெளிவந்தது. தொடர்ந்து 400 சமூகச் சிறுகதைகள், 400 வரலாற்றுச் சிறுகதைகள்
எழுதியுள்ளார். அக்கதைகள் 29 தொகுதிகளாக வெளிவந்துள்ளன. 25 சமூகப் புதினங்கள், 60
வரலாற்றுப் புதினங்கள், 8 நாடகங்கள், 8 கட்டுரை நூல்கள் ஆகியவற்றை எழுதியுள்ளார்.
‘நல்ல காலம்’ திரைப்படத்திற்கு வசனம், ‘பூலோகரம்பை’க்குப் பாடல்கள் எழுதியுள்ளார்.
இயக்குநர் கே.பாலச்சந்தரிடம் ‘அரங்கேற்றம்’ முதல் ‘அவள் ஒரு தொடர்கதை’ வரை உதவி
இயக்குநராக மூன்று ஆண்டுகள் பணியாற்றி யுள்ளார்.
தனது ‘தென்னங்கீற்று’ புதினத்தை திரைப் படமாக்கினார். இத்திரைப்படம் ரசிகர் சங்க விருது
பெற்றது. இது கன்னடத்தில் ‘நீரிசேஷ’ என்ற பெயரில் வெளிவந்தது. அதற்கு கர்நாடக அரசின்
விருது கிடைத்தது. தொடர்ந்து ‘அகிலா’, ‘யாகசாலை’ ஆகிய புதினங்களும் திரைப்படங்
களாக வெளிவந்தன. மூன்று தொலைக்காட்சித் தொடர்களை எழுதி இயக்கியுள்ளார்.
1992இல் ‘குற்றாலக் குறிஞ்சி’ புதினத்திற்காக ‘சாகித்ய அகாதெமி விருது’ பெற்றார்.
மேலும், ‘மாமன்னன் இராசராசன் விருது’, தமிழக அரசின் ‘திரு.வி.க. விருது’, ‘காஞ்சி
காமகோடி பீடம் ஸ்ரீ சங்கராச் சாரியார் பொன் விழா விருது’, ‘கலைஞர் விருது’, புத்தகக்
கண்காட்சியின் சிறந்த எழுத்தாளர் விருது’ , ‘மனோன்மணியம் சுந்தர னார் விருது’,
‘சங்கரதாஸ் சுவாமிகள் விருது’, ‘ஆதித்தனார் விருது’ உட்பட ஏராளமான விருது களைப்
பெற்றுள்ளார்.
அமெரிக்கப் பல்கலைக்கழகம் இவருக்கு ‘டாக்டர்’ பட்டம் வழங்கிச் சிறப்பித்துள்ளது.