| Profession | எழுத்தாளர் |
|---|
நாகை மயிலாடுதுறையில் வே.நாயினா நாயுடு – தனலட்சுமி தம்பதியருக்கு
10.02.1927அன்று பிறந்தார். தந்தையார் இரயில்வேயில் சிறப்புநிலை ஓட்டுநராகப்
பணியாற்றியவர்.
நா.எத்திராஜ் தமது பள்ளிக் கல்வியை விழுப்புரம, மயிலாடு துறை பள்ளிகளில் முடித்தார்.
திருச்சி புனித சூசையப்பர் கல்லூரியில் இண்டர் வகுப்பில் தேர்ச்சி பெற்றார்.
1949-இல்தஞ்சையில் பொதுப் பணித் துறையில் இளநிலை எழுத்தர் பணியில் சேர்ந்து, 1985-இல்
நிறைவு பெற்றார்.
இவரது திருமணம் 06.04. 1954-இல் நடைபெற்றது. துணைவியார் அம்சவள்ளி. இத்தம்பதியருக்கு
‘மல்லிகா’ என்றொரு மகள்; ‘நைனாராஜ்’ என்றொரு மகள்.
1948இல் ‘சேகர் பி.ஏ.’ என்றொரு வானொலி நாடகத்தை எழுதி அரங்கேற்றினார். ‘கிண்ணம்
கவிழ்ந்தது’ எனும் நாடகம் ‘சுதேசமித்திரன்’ இதழில் வெளி வந்தது. தொடர்ந்து இவரது
சிறுகதைகளும், நாடகங்களும் கல்கி, சௌராஷ்டிரமணி, தீபாவளி மலர், பொங்கல் மலர், கிராம
ஊழியன் ஆகிய இதழ்களில் இவரது நாடகங்கள் வெளியாயின. சுகி சுப்பிரமணியம்,
எம்.வி.வெங்கட்ராம் வலியுறுத்தலினால் வரலாற்று நாடகங்கள் எழுதுவதில் அதிகக் கவனம்
செலுத்தினார்.
எத்திராஜின் முதன் நூல் ‘இளையபாரதம்’. பணியில் இருந்த காலத்தில் 7 நூல்கள், 13 வானொலி
நாடங்கள், 4 மேடை நாடகங்கள் ஆகியவற்றை எழுதினார். பணிநிறைவுக்குப் பிறகு 45 நூல்களை
எழுதினார். இவற்றில் மொழிபெயர்ப்புகள் உள்ளிட்ட நான்கு நூல்களை இந்திய அரசின் நூல்
வெளியீட்டுத் துறை வெளி யிட்டது. திருச்சி வானொலி நிலையம் இவரு டைய 13 நாடகங்களை
ஒலிபரப்பியது.
தஞ்சை மூத்த குடிமக்கள் சங்கம், ஓய்வு ஊதியம் பெறுவோர் சங்கம், அகத்தியர் சன்மார்க்க சங்கம்,
முத்தமிழ் மன்றம், உலகத் திருக்குறள் பேரவை, கம்பன் கழகம், வள்ளலார் அருட்பணி மன்றம்,
மணல்மேடு இராமகிருஷ்ணா பேரவை, மனிதவள மேம்பாட்டுச் சங்கம், நகைச்சுவை மன்றம்
போன்றவற்றில் ஆயுட்கால உறுப்பினராகவும், அருட்பணி மன்றத்தின் செயலாளராகவும்,
மானம்புச்சாவடி கிளை நூலகத்தின் வாசகர் வட்ட அமைப்பின் தலைவராகவும் பணியாற்றி யுள்ளார்.
புரோபஸ் கிளப் செயலாளர் மற்றும் தலைவராகவும், தஞ்சை மாவட்ட மைய நூலக வாசகர் வட்ட
அமைப்பின் முன்னாள் துணைத் தலைவராகவும் பணியாற்றியுள்ளார்.
தஞ்சையில் நடைபெற்ற எட்டாது உலகத் தமிழ் மாநாட்டின்போது ‘நெஞ்சையள்ளும் தஞ்சை’ என்றொரு
நூலை எழுதினார். இவரது ‘கப்பலின் வரலாறு’ (1990), ‘வரலாற்று நாட கங்கள்’ (1992)
ஆகிய இரு நூல்களும் தமிழக அரசின் சிறந்த நூலுக்கான பரிசுகளைப் பெற்றன.
தஞ்சை எழுத்தாளர் விருது, குறள் நெறிச் செல்வர் விருது, சிறந்த மூத்த குடிமகன்
விருது, அண்ணல் காந்தியடிகள் விருது ஆகியவற் றையும், லண்டன் தமிழ்ச் சங்கத்தின் பாராட்டை
25 பவுண்டு அன்பளிப்புடன் பெற்றுள்ளார்.