| Profession | அறிஞர் |
|---|
திருநெல்வேலி தென்காசி வீ.கே.புதூரில் (வீரகேரளம் புதூர்) சு.சண்முக வேலாயுதம்
-ச.இராமலட்சுமி தம்பதியருக்கு 31.12.1929-இல் பிறந்தார்.
1950-53இல் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் தமிழ்ச் சிறப்பு வகுப்புப் (பி.ஏ. ஹானர்ஸ்)
பயின்று, வ.அய்.சுப்பிரமணியன் நெறியாள்கையில் முனைவர் பட்டம் பெற்றார்.
1954-இல் பார்வதியைத் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இரு மகள்கள்.
1956-இல் திருவனந்தபுரம் பல்கலைக்கழகக் கல்லூரியில் விரிவுரையாகப் பணியேற்றார்.
1961-இல் ‘சிலப்பதிகாரம் விளக்க வியல் இலக்கணம்’ எனும் தலைப்பில் ஆய்வு செய்து முது
முனைவர் பட்டம் பெற்றார்.
1966-இல் கேரளப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறைத் தலைவரானார். இப் பல்கலைக்கழகத்தில் முதன்
முதலாக டாக்டர் பட்டம் பெற்றார். பின்னர் சென்னையிலுள்ள உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின்
இயக்குநர் பொறுப்பை ஏற்றார்.
பணியிலிருந்து ஓய்வு பெற்ற பிறகு ஒரு நூலகமும், ‘உலகத் தமிழ்க் கல்வி இயக்கம்’ என்
றொரு அமைப்பையும் உருவாக்கினார்.
ஒப்பியல், நாட்டுப்புறவியல், தத்துவமும் உளவியலும், உரைகள், வாழ்வியல் சார்ந்த 170-க்கும்
மேற்பட்ட தமிழ் நூல்களையும், 10-க்கும் மேற்பட்ட ஆங்கில நூல்களையும் எழுதினார்.
சிலப்பதிகார வஞ்சிக் காண்டத்தை மலை யாளத்தில் மொழியாக்கம் செய்தார்.
‘கம்பன் இலக்கிய உத்திகள்’ நூலுக்காக 1984-இல் தமிழக அரசின் முதல் பரிசும், குன்றக்குடி
ஆதீனத்தின் ‘தமிழாகரர்’ பட்டம், 1996-இல் தமிழகப் புலவர் குழுவின் ‘செந்தமிழ்ச் செம்மல்’
விருது, 1999-இல் சாகித்ய அகாதமியின் ‘பாஷா சம்மான்’ விருது, 2003-இல் இராஜா சர்.
அண்ணாமலைச் செட்டியார் பரிசு.
2004-இல் தமிழக அரசின் கி.ஆ.பெ. விசுவநாதம் விருது, மற்றும் ‘தொல்காப்பியச் செம்மல்’,
சிதம்பரம் மெய்யப்பன் தமிழாய்வகத்தின் ‘தமிழ் இயக்கச் செம்மல்’ விருது, 2008-இல் அறவாணன்
ஆராய்ச்சி அறக்கட்டளையின் ‘அனைத்துலக அறவாணன் சாதனையாளர் விருது’,
2009-இல் ‘கலைஞர் பொற்கிழி விருது’, 2010-இல் தமிழ் நிகண்டுகள் நூலுக்காக தமிழக
அரசின் சிறந்த நூலுக்கான முதல் பரிசு, கோவை இளங்கோ வடிகள் இலக்கிய மன்றத்தின்
‘உ.வே.சா. விருது’, சேக்கிழார் ஆய்வு மையத்தின் ‘சேக்கிழார் விருது’,
2011-இல் தருமபுரி ஆதீனத்தின் ‘செந் தமிழ்க் கலாநிதி’ விருது, 2011-இல் திருக்கோவி
லூர்ப் பண்பாட்டுக் கழகத்தின் ‘கபிலர் விருது’ மற்றும் ‘கபிலவாணர்’ பட்டம், 2013-இல் திரு
நெல்வேலி ம.தி.தா. இந்துக் கல்லூரியின் ‘தமிழ்க் காவலர்’ விருது, ‘சி.பா.ஆதித்தனார்
மூத்த தமிழ றிஞர் விருது’ ஆகியவற்றை வழங்கப் பெற்றார்.
12.1.2017 அன்று உடல்நலக் குறைவு காரணமாக காலமானார்