| Profession | அறிஞர் |
|---|
தமிழ்நாட்டைப் பூர்வீகமாகக் கொண்ட மலேசியாவாழ் தமிழர். இவரது தந்தை வெங்கடாசலம் மலேசியா
சென்று தோட்டக் கணக்குப் பிள்ளை வேலை செய்தார். தாயார் சுப்பமாள். இத்தம்பதியருக்கு கோலா
சிலாங்கூர், இராஜா மூசா தோட்டத்தில் 4.10.1926 அன்று மாணிக்கவாசகம் பிறந்தார்.
ஆரம்பக் கல்வியை இராஜா மூசா தமிழ்ப் பள்ளியிலும், உயர்நிலைக் கல்வியை சிரம் பான் செயிண்ட்
பால் பள்ளியிலும் பயின்றார். கிள்ளான் மேல்நிலைப் பள்ளியில் கல்வியைத் தொடர்ந்து ஆங்கிலம்
கற்றார். 1941-இல் ஜப்பானியர் இந்நாட்டிற்கு வந்ததும் டான்ஸ்ரீ ஆங்கிலத்தை நிறுத்திவிட்டு
ஜப்பானிய மொழியைக் கற்றார். ஜப்பானியர் சென்ற வுடன் 1945-இல் தனது 19-வது வயதில்
படிப்பைத் தொடர முடியாமல் கடையை நடத்தி னார்.
1948-இல் கமலாவைத் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இரமணி, இராஜேந் திரன்,
சுசிலா, கஸ்தூரி, இந்திரா என ஆறு குழந் தைகள்.
இவரது அரசியல் பணி கிள்ளானுக்கு வந்ததுமே தொடங்கிவிட்டது. ஜப்பானியர் ஆட்சிக் காலத்தில்
ஒரு வட்டாரத்துக்குப் பிரதிநிதியாக இருந்தார். அப்போது இரயில்வேக்கு ஆட்களை அனுப்பிக்
கொண்டிருந்தார். மலேசியாவில் காங்கிரஸைத் தொடங்கியவர்களில் இவரும் ஒருவர். அப்போது
இவரின் வயது 20.
தனது அரசியல் செல்வாக்கினால் 1959- இல் தொழிலாளர் துறை உதவி அமைச்சராகவும், 1964-
இல் தொழிலாளர் துறை அமைச்சராகவும் பதவி வகித்தார். 1973-இல் தேசியத் தலைவரா னார்.
இவரது பதவிக் காலத்தில் ஏராளமான சமுதாயப் பணிகளைச் செய்தார்.
டான்ஸ்ரீ, கல்வி ஒன்றே ஒருவரின் வாழ்க்கையை மேம்படுத்தும் என்ற நம்பிக்கையுள்ளவர். ஒருவர்
கல்வி கற்றால் அச்சமுதாயமே சிறந்து விளங்கும் என்று பல்வேறு நிகழ்ச்சிகளில் வலியுறுத்தி
பேசியுள்ளார். இவர் உருவாக்கிய ‘மலேசிய இந்தியர் உபகாரச் சம்பள நிதி’ மலேசியா வாழ்
இந்திய மாணவர்கள் உயர் கல்வியைப் பெற்று வாழ்க்கையை சிறப்புடன் வாழ்வதற்கு பெரிதும் துணை
புரிந்தது. டான்ஸ்ரீ அவர்களின் மறைவுக்குப் பின் அதன் பெயர் ‘டான்ஸ்ரீ மாணிக்கவாசகம் கல்வி
நிதி’ என மாற்றப்பட்டுள்ளது.
டான்ஸ்ரீ மத நல்லிணக்கத்தையும், மத சகோதரத்துவத்தையும் விரும்பினார். அதற்கான பணிகளில்
ஈடுபட்டார். இந்தியர்கள் தங்களின் கலை, கலாச்சாரத்தைக் காப்பதற்காக ‘கலாச்சார துணைக்
குழு’ ஒன்றை அமைத்தார்.
டான்ஸ்ரீ பி.ஜே.கே., எஸ்.பி.எம்.எஸ்., பி.எம்.என். ஆகிய விருதுகளைப் பெற்றார். மேலும்
ம.இ.கா. சார்பில் இரு விருதுகளையும் பெற்றார். பேராக் மாநில ம.இ.கா. 1967-இல் கங்கை
சிப்புட் நகர மண்டபத்தில் இவருக்கு ‘தொழிலாளர் நண்பர்’ எனும் விருதினை வழங்கிச்
சிறப்பித்தார் டத்தோ வை. பொன்னுசாமி பிள்ளை. 1971-இல் கோலாலம்பூர் பிரிக்பீல்ட்ஸ் ம.இ.கா.
கிளையின் வெள்ளிவிழாவில் ‘சமுதாயக் காவலர்’ என்ற பட்டம் வழங்கப்பட்டது.
டான்ஸ்ரீ 12.10.1979-இல் இதய நோயினால் இயற்கை எய்தினார்.