தொ.மு.சி.ரகுநாதன்

தொ.மு.சி.ரகுநாதன்

Profession எழுத்தாளர்

Biography

திருநெல்வேலி சிதம்பர தொண்டைமான் – முத்தம்மா தம்பதியர்க்கு 20.10.1923 அன்று
பிறந்தார்.

1936-ல் உயர்நிலைப் பள்ளியில் படித்துக் கொண்டிருந்த போது இவரது தந்தை காலமானார்.
1939-ல் நெல்லை இந்துக் கல்லூரியில் இன்டர் மீடியட் வரை படித்தார். விடுதலைப் போராட்டத்தில்
ஈடு பட்டு சில மாதங்கள் தலை மறைவு வாழ்¢க்கையும், சிறை வாசமும் அனுபவிக்க நேர்ந்ததால்,
கல்லூரிக் கல்வி தடை பட்டது.

1944-இல் ‘தினமணி’யில் உதவி ஆசிரியராகச் சேர்ந்தார். பிறகு ‘சக்தி’, ‘சாந்தி’ ஆகிய
இதழ்களின் ஆசிரியராக அடுத்தடுத்து 1956 வரை பணியாற்றி னார். 1967-இல் சோவியத்
செய்தித்துறை ஆசிரியரானார். 1947-ல் ‘இலக்கிய விமர்சனம்’ நூலினை எழுதி வெளியிட்டார்.
இதுவே தமிழில் வெளிவந்த முதல் இலக்கிய விமர்சன நூல். அப்போது தொ.மு.சி.க்கு 25
வயது.

24.07.1948 அன்று திருமணம். துணைவியார் ரஞ்சிதம். திருமணத்திற்குப் பின் சென்னையில்
குடியேறினார். இவர்களுக்கு ஓர் ஆணும் மூன்று பெண்களுமாக நான்கு குழந்தைகள்.

3 சிறுகதைத் தொகுதிகள், 4 நாவல்கள், 4 கவிதைத் தொகுதிகள், 3 நாடகங்கள், 2 இலக்கிய
விமர்சனங்கள், 4 ஆய்வு நூல்கள், 2 ஒப்பிலக்கிய நூல்கள், 4 பாரதி ஆய்வு நூல்கள், 1
புதுமைப் பித்தன் வரலாற்று நூல் ஆகியவற்றை எழுதி யுள்ளார். 14 நூல்களை தமிழாக்கம்
செய்துள்ளார். 2 நூல்களைப் பதிப்பித்துள்ளார்.

இவரது ‘பஞ்சும் பசியும்’ நாவல் செக்கோஸ்லேவியா மொழியிலும், பல சிறுகதைகள், கவி
தைகள், இலக்கியக் கட்டுரைகள் மலையாளம், வங்காளி, செக், போலிஷ், ஹங்கேரியன், ஜெர்மன்,
ரஷ்யன், ஆங்கிலம் மொழிகளில் புத்தகங்களாகவும் பத்திரிகைகளிலும் வெளிவந்துள்ளன.

இவரது நூல்கள் பாரதிதாசன் பல்கலைக் கழகம், கேரள பல்கலைக் கழகம், தில்லி பல்கலைக் கழகம்,
கொழும்பு ஆசிரியர் பயிற்சிக் கல்லூரி, பாளையங்கோட்டை தூய சவேரியர் கல்லூரி ஆகியவற்றில்
பாட நூல்களாக இடம் பெற்றுள்ளன.

சோவியத் நாடு ‘நேரு நினைவுப் பரிசு’, ‘இலக்கியச் சிந்தனை’ விருது, ‘சாகித்ய
அகாதெமி’ விருது, ‘கல்கத்தா தமிழ் எழுத்தாளர் சங்கம்’ விருது, தமிழக அரசின் ‘தமிழ்
வள்ர்ச்சித் துறை’ பரிசு, தஞ்சை தமிழ்ப் பல்கலைக் கழகத்தின் ‘தமிழன்னை’ விருது உள்ளிட்ட
ஏராளமான விருதுகளைப் பெற்றுள்ளார்.

தமிழ் எழுத்தாளர் சங்கம், முற்போக்கு எழுத் தாளர் சங்கம், கலை இலக்கியப் பெருமன்றம் போன்ற
இயக்கங்களிலும், சாகித்ய அகாதமி ஆலோசனைக் குழு உறுப்பினர் போன்ற பல்வேறு
பொறுப்புகளிலும் பணியாற்றி யுள்ளார்.

2001 டிசம்பர் 31 அன்று காலமானார்.