பேராசிரியர் ப.சு.மணியம்

பேராசிரியர் ப.சு.மணியம்

Profession அறிஞர்

Biography

கொங்குப் பகுதியில், பல்லடம் வட்டத்திலுள்ள பருவாயூரில் வசித்த பழனியப்ப ஆசிரியருக்கும்
பழனியம்மாளுக்கும் 01.02.1917-இல் பிறந்தார். இயற்பெயர் ப.சுப்பிரமணியம்.

சூலூர் காங்காயம்பாளை யத்தில் ஆரம்பக் கல்வியையும், சிட்டி முனிசிபல் பள்ளியில்
பள்ளிக்கல்வியையும் பயின்றார். 1936- இல் உயர்நிலைப் பள்ளிக்கல்வியை முடித்ததும், மீனாட்சி
தமிழ்க் கல்லூரியில் (இக்கால அண்ணாமலைப் பல்கலைக்கழகம்) புலவர் படிப்பில் 1947-இல்
மாநிலத்திலேயே முதல் மாணவராகத் தேர்ச்சி பெற்றார்.

1941-இல் பெரியநாயக்கன் பாளையம் இராமகிருஷ்ணா வித்தியாலயத்தில் தமிழாசிரியராகப்
பணியில் சேர்ந்தார். கோவை, மகளிர் கல்வியல் கல்லூரியில் ஐந்து மாதங்கள் பணியாற்றினார்.
1945-1956, 1960-1974 இல் கோவை அரசு கலைக் கல்லூரியிலும், இடையில் 1957-1959 இல்
கும்பகோணம் அரசினர் கலைக் கல்லூரியிலும் பேராசிரியராகப் பணியாற்றினார். இங்கு பெ.ஞான
சுந்தரம், எழில்முதல்வன், முனைவர் கு.வெ. பாலசுப்பிரமணியன் ஆகியோர் இவரிடம் பயின்றனர்.

பத்து வயதிலேயே அன்னையை இழந்தார். தந்தையே தாயுமானார். பதினேழாவது வயதில்
தேசியத்தில் தன்னை இணைத்துக் கொண்டார். பின் 1936-இல் ‘ஒற்றுமை வாலிபர் சங்கம்’
தொடங்கினார். பின்னர் ‘தேவேந்திர குல வேளாளர் சங்கம்’ எனும் அமைப்பை உருவாக்கி
ஒடுக்கப்பட்டோர் மேம்பாட்டுக்காக உழைத்தார்.

ஜவஹர்லால் நேரு வருகை தரும் செய்தியை பறையடித்தபடியே சொல்லி தெருவில்
சென்றிருக்கிறார்.

1946-இல் முத்துலட்சுமியை மணந்தார். இவர்களுக்கு மணிவாசகன், சிவஞானம், ஞானப் பூங்கோதை
என மூன்று குழந்தைகள்.

இவர், தமிழ் முறையில் நூற்றுக்கும் மேற்பட்ட திருமணங்களை நடத்திய சிறப்புக்குரியவர்.

திருக்குறள் சான்றாண்மை விளக்கம், மணிவாசகர் வழிபாட்டு மலர், திருக்குறளில் அறிவு,
பெருநாவலர் பெருநெறி, கோவை ஆசானின் சமயக் கட்டுரைகள் என்பன இவரது இலக்கியப்
படைப்புகளாகும்.

1986- 1988இல் தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக் கழகத்தின் ஆட்சிக் குழு உறுப்பினராக செய
லாற்றினார்.

ப.சு.மணியன், 28.01.2000 அன்று மாணவர் களிடம் ‘நிலையாமை’ பற்றி மூன்று மணி நேரம்
இடைவிடாமல் பேசிக்கொண்டிருந்தார். மறு நாள் மாலை 8.45 மணியளவில் இறைவனடி சேர்ந்தார்.
இவரது சமாதி சாந்தலிங்கம் திருமடத்திற்கு அருகில் நொய்யலாற்றங்கரையில் அமைந்துள்ளது.
மாணவர்களால் ஆண்டு தோறும் இவருக்கு குருபூசை வழிபாடு நடத்தப்படுகிறது. பாரதியார்
பல்கலைக்கழகத்தில் ‘அருட்கலை ஆசான் ம.சு.மணியம் மணிவாசகர் அறக்கட்டளை’
நிறுவப்பட்டுள்ளது.