| Profession | அறிஞர் |
|---|
தஞ்சை மாவட்டத்திலுள்ள திருநாகேச்சுரத்தில் கந்தசாமி முதலியார்- அமிர்தம் தம்பதியருக்கு
14.01.1917 அன்று பிறந்தார்.
1928-இல் திருப்பெருந்துறையிலுள்ள மாணிக்கவாசகர் தேவாரப் பாடசாலையில் சேர்ந்தார். அங்கு
தமிழிலக்கியம், இசை முதலியவற்றைக் கற்றார். 1930-இல் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில்
வித்துவான் தேர்வில் முதல் மாணவராகத் தேர்ச்சி பெற்று, அங்கேயே ஆய்வு மாணவராகச் சேர்ந்து
பயின்றார்.
சிறு வயதிலேயே ‘தொல் காப்பியம்- நன்னூல் எழுத்த திகாரம்’ என்ற ஒப்பீட்டு நூலை (1935-
37) எழுதி முடித்தார். அந்நூல் ‘அண்ணாமலைப் பல்கலைக்கழக இதழில்’ 1941 -62களில்
வெளிவந்து 1962இல் நூல் வடிவம் பெற்றது.
1938 – 43இல் கரந்தைத் தமிழ்ச் சங்க கல்லூரியில் விரிவுரையாளராகப் பணியாற்றினார்.
1942- இல் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் விரிவுரையாளராகச் சேர்ந்து, 1962-இல் இணைப்
பேராசிரியர் ஆனார். 1977-79 இல் தமிழ்த் துறைத் தலைவராகப் பொறுப்பேற்றார். 1979- இல்
மதுரை காமராசர் பல்கலைக் கழகத்தில் சிறப்புநிலைப் பேராசிரியராகப் பணி
யாற்றினார்.1981- இல் தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழக தமிழ் இலக்கியத் துறையில் சிறப்புநிலைப்
பேராசிரியராகப் பொறுப்பேற்றார்.
1939-இல் இவருக்கு பெற்றோர் திருமணம் செய்து வைத்தனர். துணைவியார்: பொற்றடங்கண்ணி.
இவர்களுக்கு ‘மங்கையர்க்கரசி’ என்றொரு மகள்.
‘காக்கை விடு தூது’ என்ற இந்தி எதிர்ப்பு நூலை (பாந்தளூர் வெண்கோழியார் என்ற
புனைபெயரில்) எழுதி, அன்றைய முதலமைச்சர் இராஜாஜிக்கு அனுப்பிப் பெரும் பரபரப்பை
உண்டாக்கினார். ‘தமிழ்ப்பொழில்’, ‘விடுதலை’, ‘திராவிடநாடு’ போன்ற இதழ்கள் அந்நூலைப்
பற்றி எழுதி சிறப்பித்தன.
‘சங்க காலத் தமிழ் மக்கள்’, ‘குறிஞ்சிப் பாட் டாராய்ச்சி’, ‘தமிழ் இலக்கிய வரலாறு: தொல்
காப்பியம்’, ‘சேக்கிழார் நூல் நயம்’, ‘அற்புத திருவந்தாதி உரை’, ‘தொல்காப்பியம் நன்னூல்
சொல்லதிகாரம்’, ‘பன்னிரு திருமுறை வரலாறு’, ‘திருமந்திர அருள்முறைத் திரட்டு’,
‘சைவ சித் தாந்த சாத்திர வரலாறு’, ‘தொல்காப்பியம் பொருளதிகராரம்: புறத்திணையியல்
உரைவளம்’, ‘தில்லைப் பெருங்கோயில் வரலாறு’, ‘தொல்காப் பியப் பொருளதிகார ஆய்வு’,
‘திருவருட்பா சிந்தனை’, ‘தொல்காப்பியம் பொருளதிகாரம் மரபியல் உரைவளம்’, ‘இசைத்தமிழ்’
போன்ற நூல்களை எழுதியுள்ளார். பெரும்பாலான நூல்கள் பல்கலைக் கழக வெளியீடுகளாகவும், கழக
வெளியீடுகளாகவும் வெளிவந்துள்ளன. பல்வேறு பரிசுகளைபும் பெற்றுள்ளன.
தமிழக அரசின் ‘கலைமாமணி’ மற்றும் ‘சித்தாந்தச் செம்மல்’, ‘சிவக்கவிமணி’, ‘தமிழ்ப்
பேரவைச் செம்மல்’ உட்பட பல விருதுகளைப் பெற்றுள்ளார்.
13.06.1988 அன்று இறைவனடி சேர்ந்தார்.