| Profession | எழுத்தாளர் |
|---|
ஜெயமோகன் 1962 ஏப்ரல் 22 பிறந்தார். தந்தை பெயர் எஸ். பாகுலேயன் பிள்ளை. அம்மா பி. விசாலாட்சி அம்மா. 1998 முதல் 2004 வரை ‘சொல் புதிது’ என்ற சிற்றிதழை நண்பர்களுடன் இணைந்து நடத்தி இருக்கிறார். 2009 இல் விஷ்ணுபுரம் இலக்கியவட்டம் என்ற அமைப்பு வாசகர்களால் உருவாக்கப்பட்டது. இலக்கியக்கூட்டங்கள் நடத்துவது, கருத்தரங்குகள் நடத்துவது, வருடம்தோறும் இலக்கிய விருது வழங்குவது ஆகியவை இதன் செயல்பாடுகள். விஷ்ணுபுரம், கொற்றவை, வெண்முரசு போன்ற பெருநாவல்கள் மூலம் தமிழ் இலக்கியத்தின் எல்லையை விரிவுபடுத்தியவர். மனித உணர்ச்சிகளின் ஆழத்தையும், சமூகத்தின் சிக்கல்களையும் யதார்த்தமாகவும், தத்துவார்த்தமாகவும் விவரிப்பதில் நிகரற்றவர். தனது தளம் Jeyamohan Official Website மூலம் பல புதிய இளம் எழுத்தாளர்களை உருவாக்கி கலை மற்றும் இலக்கியத்திற்கான ஒரு இயக்கத்தை நடத்தி வருகிறார். மேலும் விவரங்களுக்கு: https://www.jeyamohan.in/