| Profession | அறிஞர் |
|---|
கணியன் பூங்குன்றனார் பிறந்த பூங்குன்றத்தில் முத்துக்கருப்பன் – சிகப்பி தம்பதியர்க்கு
16.10.1881-இல் பிறந்தார்.
சிறுவயதில்காய்ச்சல் நோய் தாக்கியதால் இடது கை, இடது கால் வலுவிழந்ததினால் ஏழு வயதில்
திண்ணைப் பள்ளியில் சேர்ந்து ஏழு மாதங்களே பயின்றார். 14-ஆம் வயதில் இளம்பிள்ளை வாத
நோயினால் ஊன்றுகோல் உதவியுடன் தான் நடக்க முடியும் என்கிற நிலை ஏற்பட்டது.
அரசஞ்.சண்முகனார் இவரது இல்லத்தில் தங்கி தமிழ் நூல்களைப் போதித்தார். தருவை நாராயண
சாஸ்திரியிடம் வட மொழியையும், காரைக்குடி சொக்கலிங்கத்திடம் சைவ சித்தாந்தப்
பாடங்களையும் கற்றார். அரசஞ் சண்முகனார் மூலமாக பல தமிழறிஞர்களின் தொடர்பு ஏற்பட்டது.
நேரிலும், கடிதம் மூலமாகவும் அத்தொடர்பை பெருக்கிக்கொண்டார்.
மறைமலையடிகளைச் சந்திக்க நாகப்பட்டினத் துக்குச் சென்று வருவார். அப்படியான ஒரு
பயணத்தில், சைவ சித்தாந்த சமாஜத்தின் சார்பில் நடைபெற்ற விழாவில் கதிரேசனார் தனது முதல்
உரையாற்றும் வாய்ப்பினைப் பெற்றார். செட்டி நாட்டில் பல இடங்களில் சொற் பொழிவுகளை
நிகழ்த்தினார். கதிரேசனாரின் சொற்பொழிவுகள் அப்படியே அச்சாக்கம் செய்யுமளவிற்கு
நேர்த்தியாக இருக்கும். ஆகவே, இவரின் பேச்சுரைகள் உரைநடைக் கோவை களாக இரு
தொகுதிகளாக பின்னாளில் தொகுக்கப்பட்டன.
இலக்கியப் பணியோடு சமுதாயப் பணியையும் ஆற்றினார். கண்டவராயன்பட்டியில் இருந்து
மகிலம்பட்டி வரை தேவக்கோட்டை வீரப்ப செட்டியார் உதவியுடன் சாலையை அமைத்துக் கொடுத்தார்.
மேலும், அஞ்சலகம், மங்கல விநாயகர் வித்தியாசாலை, மோட்டார் போக்குவரத்து போன்ற
வசதிகளையும் ஏற்படுத்திக் கொடுத்தார். பலவான்குடியில் மணிவாசகர் சங்கம் ஏற்படுத்தி சமய
அறிவை மக்களுக்குப் புகுத்தினார். மேலைச்சிவபுரியில் சன்மார்க்க சபையைத் தோற்றுவித்தார்.
கதிரேசனார் தனது 32-ம் வயதில், 1912-இல் அத்தை மகள் மீனாட்சியைத் திருமணம் செய்து
கொண்டார். இத்தம்பதியருக்கு சுப்பிரமணியன், கனகசபாபதி, மாணிக்கவாசகன், தியாகராசன்,
மங்கையர்க்கரசி, மீனாட்சி, சகுந்தலை என நான்குமகன்களும், மூன்றுமகள்களும் பிறந்தனர்.
1934-46இல் தொடங்கி அண்ணாமலைப் பல் கலைக் கழகத்தில் பேராசிரியர், துறைத்தலைவர்,
ஆராய்ச்சிப்புலத் தலைவர் என்று பல பொறுப்பு களை ஏற்றுப் தமிழ்த் தொண்டாற்றினார்.
1940-இல் மேலைச்சிவபுரியில் இவரின் மணி விழாவில் அண்ணாமலை அரசர் தலைமையில் இவரின்
உருவப் படத்தை இவரின் முன்னிலை யிலேயே திறந்து வைக்கப்பட்டது. இது அக்காலத்தில் ஓர்
அபூர்வ நிகழ்வாகும்.
இந்திய அரசின் ‘மகாமகோபாத்தியாய’ பட்டத்தை ஆளுநர் வழங்கினார். குன்றக்குடி ஆதீனம் ‘சைவ
சித்தாந்த வித்தகர்’, ‘முதுபெரும் புலவர்’ ஆகிய பட்டங்களை வழங்கியது. எனினும் சபை தந்த
‘பண்டிதமணி’ என்ற பட்டமே நிலைத்தது. இரத்தக் கொதிப்பினாலும், வாத நோயினாலும்
பாதிக்கப்பட்ட கதிரேசன்
செட்டியார் 24.10.1953-இல் காலமானார்.1974-இல்திருவுருவச் சிலை திறக்கப்பட்டது.
நினைவு மலர் ஒன்றும் வெளியிடப்பெற்றது.