பண்டிதர் ம.கோபாலகிருஷ்ண ஐயர்

பண்டிதர் ம.கோபாலகிருஷ்ண ஐயர்

Profession அறிஞர்

Biography

ம.கோபாலகிருஷ்ண ஐயர், திருச்சி அருகேயுள்ள லால்குடி யில் மகாதேவன் – பிரவர்த்த ஸ்ரீமதி
தம்பதியர்க்கு 1878-இல் பிறந்தார். தந்தை மதுரை நீதி மன்றத்தில் சிரஸ்தாதார்.

ம.கோ. ஐயர் உரிய வயதில் தர்மாம்பாளைமணந்து, நான்கு மகள்களையும், இரு மகன்களை யும்
பெற்றார்.

தமது தாய்வழிப் பாட்டனா ரையே தம் குருவாகக் கொண் டார்.

இவர், மதுரை தமிழ்ச் சங்க நிர்வாக அங்கத்தினர், மதுரை மாணவர் செந்தமிழ்ச் சங்கத் தின்
நிறுவனர், திருச்சி தேசியக் கல்லூரியின் தமிழ்த் துறைத் தலைவர்; நச்சினார்க்கினியன்
மற்றும் விவேகோதயம் ஆகிய இதழ்களின் நிறுவன ஆசிரியர் ஆகியபொறுப்புகளை ஏற்றுப் பணி
யாற்றினார்.

முதலில் மதுரையிலும், பின்னர் திருச்சி தேசியக் கல்லூரியிலும் பணியாற்றினார்.

இரவீந்திரநாத் தாகூர் மதுரை வந்தபொழுது வாழ்த்துக் கவிதை வாசித்து அவரை வரவேற் றார்.

பாரதியார் எட்டையபுரத்தை விடுத்து மதுரைக்கு வந்தபோது, அவருக்கு உதவினார்.

பாரதியார் ‘சுதேசமித்திரன்’ இதழில் துணை ஆசிரியராகப் பணியாற்ற உதவினார்.

பாஸ்கர சேதுபதி மன்னருடன் பாம்பன் சென்று சுவாமி விவேகானந்தரை வரவேற்றார். மதுரை,
விவேகானந்தர் சங்கத்தின் தலைமைச் செயலராகப் பணியாற்றினார்.

விவேகானந்தர் 1895-ல் நியூயார்க்கில் ‘இயற்றிய 13 பாடல்களை தமிழாக்கம் செய்து 1904-இல்
‘விவேகசிந்தாமணி’யில் வெளியிட்டார்.

‘விவேகோதயம்’ பத்திரிகையை 1916இல் தொடங்கியபோது, ‘ஞானபானு’வின் ஆசிரியர்
சுப்பிரமணிய சிவா இவரது தமிழ்ப் பற்றையும், நாட்டு நலனில் கொண்டுள்ள ஈடுபாட்டையும்
பாராட்டினார். ‘விவேகோதயம்’ இதழின் சந்தாவில் மகளிருக்குத் தனிச்சலுகை அளித்தார். தன்
சகோதரி பாலம்மாளைத் துணை ஆசிரியர் பொறுப்பில் அமர்த்தினார்.

வ.உ.சி, “தங்கள் பத்திரிகை ஒன்றே என்னால் விரும்பப்படும் பத்திரிகை” எனக்
குறிப்பிட்டுள்ளார்.

‘சுதேசமித்திரன்’ ஜி. சுப்பிரமணிய அய்யர் நினைவு நிதி திரட்ட முடிவு செய்தபோது,
அந்த நிதியில் குறைந்தது, 50 விழுக்காடு நிதியை ஒரு பெண்கள் பள்ளி நிறுவவும், பெண்கள்
முன்னேற் றத்திற்காகவும் ஒதுக்க வேண்டும் என்று தனது பத்திரிகையில் எழுதினார்.

சிதம்பரம் மீனாட்சிக் கல்லூரி அண்ணாமலைப் பல்கலைக் கழகமாக மாற்றும் பணி நடைபெற்றபோது
1927-இல் அழைப்பு விடுத்தனர். ஆனால், உடல்நிலை மோசமடைந்ததால் அதற்குள் அதே ஆண்டு
ஏப்ரலில் இயற்கை எய்தினார்.