| Profession | அறிஞர் |
|---|
சதாவதானி’ செய்குதம்பி, கோட்டாறு (நாகர்கோவில்) பகுதியிலுள்ள இளங்கடையில் பக்கீர்
மைதீன் சாகிபு – ஆமினா தம்பதியருக்கு 31.7.1874 அன்று பிறந்தார்.
ஐந்து வயதில் அரபு கற்றார். எட்டு வயதில் கோட்டாறு அரசுப் பள்ளியில் சேர்க்கப்பட்டார்.
குடும்ப வறுமை காரண மாக நான்காம் வகுப்புடன் படிப்பை நிறுத்திக் கொண்டார். தந்தைக்கு
உதவியாக பாரம்பரியத் தொழிலான நெசவுத்தொழிலில் ஈடுபட்டார்.
இவர் தமிழ் மொழியின் மீது கொண்ட ஈடுபாட்டை அறிந்த தமிழ் ஆசான் நாராயண அண்
ணாவியார்,காணிக்கை எதுவும் வாங்காமல் தமிழ் இலக்கண இலக்கியங்களை முறையாகக்
கற்றுக்கொடுத்து புலவராக் கினார். இதன் விளைவாக 15 வயதிலேயே ‘பிள்ளைத்தமிழ்’,
‘அந்தாதி’, ‘சித்திரக்கவிகள்’ போன்றவற்றை இயற்றும் ஆற்றல் பெற்றார்.
இடலாக்குடியில் வாழ்ந்த ஞானியார் அப்பா ‘நபிகள் நாயக’த்தின் மீது பாடப்பட்ட மெய்ஞ் ஞான
திருப்பாடல் திரட்டு நூலை பிழையில் லாமல் பதிப்பிக்க தமிழறிவும் இஸ்லாமிய அறிவும்
ஒன்றாக வாய்க்கப் பெற்ற செய்கு தம்பியை சென்னைக்கு அழைத்தனர். அப்போது அவருக்கு வயது 21.
நூற்பதிப்புப் பணியில் மிகச்சிறப்பாக பணி யாற்றியதைக் கண்ட அச்சக உரிமையாளர்
பார்த்தசாரதி நாயுடு செய்கு தம்பியைத் தனது அச்சகத்திலேயே வேலைக்கு அமர்த்திக் கொண்டார்.
செய்யுள் நூல்கள் – 6, உரைநடை நூல்கள்-4, சீறாப்புராண பொழிப்புரை நூல் – 1 ஆகிய வற்றை
எழுதி பதிப்பித்தார். மேலும் ‘யதார்த்த வாதி’, ‘இஸ்லாமியமித்திரன்’ இதழ்களையும்
பொறுப்பேற்று நடத்தினார். திருக்குறள், சீறாப் புராணம், கம்பராமாயணம் குறித்து சொற்
பொழிவுகளையும் நிகழ்த்தினார்.
இவரது தமிழ்ப் பணியைப் பாராட்டி பல்வேறு அமைப்பினர் ‘சோடசதாவதானி’, ‘சதா வதானி’,
‘மகாமதி’, ‘தேவாமிர்தப் பிரசங்கக் களஞ்சியம்’, ‘கலைக்கடல்’, ‘அல்லாமா’ (டாக்டர்),
‘தமிழ்ப் பெரும் புலவர்’, ‘பாவலர்’ ஆகிய பட்டங்களை வழங்கிச் சிறப்பித்தனர்.
செய்குதம்பி பாவலர் தனது 33-வது வயதில் (1907) இடலாக்குடிக்கு வந்தார். கோட்டாறில்
வசித்த முகமது பாத்திமா பீவியை திருமணம் செய்துகொண்டார். ஒரு மாதத்திற்குப் பின் மீண்டும்
சென்னை திரும்பினார். அங்கு நச்சுக்கடி வியாதி அதிகரித்து துன்பப்பட்டார். 1909-இல்
மீண்டும் கோட்டாறு திரும்பினார்.
1920-இல் சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டார். 1937-இல் நடைபெற்ற தேர்தலில் காங்கிரஸ்
வேட்பாளருக்கு ஓட்டு கேட்டார்.
நச்சுக்கடி பாதிப்பால் 1950-இல் காலமானார்.