| Profession | எழுத்தாளர் |
|---|
கும்பகோணம் அருகிலுள்ள உத்தமதானபுரத்தில் வேங்கட சுப்பையர் மகனாக 19.02.1855 அன்று
பிறந்தார். இயற்பெயர் வேங்கடராம சர்மன். இளம் பருவத்தில் பாட்டனாரிடம் இவர் அரிச் சுவடி
படித்தார். அதன் பிறகு துதி நூல்களைக் கற்றார். காருகுடி கஸ்தூரி ஐயங்கார், குன்னம்
சிதம்பரம் பிள்ளை, செங்கணம் விருத்தாசல ரெட்டியார், மீனாட்சிசுந்தரம் பிள்ளை இவர்கள் அளித்த
பயிற்சியினால் இளம் வயதி லேயே செய்யுள் இயற்றும் சிறப்பினைப் பெற்றார்.
1880-இல் கும்பகோணம் அரசு ஆடவர் கல்லூரியில் பணி நிறைவு பெற்ற தியாகராச செட்டியார்
தன்னுடைய இடத்தில் உ.வே.சா.வை பணியில் அமர்த்துமாறு கேட்டுக் கொண்டதற்கு இணங்க கல்லூரி
முதல்வர் கோபால்ராவ் இவரை ஆசிரியராக்கினார்.
‘தமிழ்த்தாத்தா’ என்றழைக்கப்படும் உ.வே.சா., செம்மொழி நூல்களையும், காப்பியங்களையும்,
சிற்றிலக்கியங்களையும் ஓலைச்சுவடியிலிருந்து பதிப்புக்குக் கொண்டு வந்து, அரிய தமிழ்
நூல் களை எல்லாம் முயன்று தேடி அயராது உழைத்து அரும்பணி ஆற்றியவர்.
உ.வே.சா. பதிப்பித்த முதல் நூல் ‘சுப்ரமணி தேசிக விலாசச் சிறப்பு’ என்ற நூலாகும்.
அதன் பின் அவர் பதிப்பித்த நூல்கள்: 1) சீவகசிந்தா மணி, 2) மணிமேகலை, 3) பெருங்கதை,
4) பத்துப் பாட்டு, 5) குறுந்தொகை, 6) ஐங்குறுநூறு, 7) பதிற்றுப்பத்து, 8) பரிபாடல்,
9) புறநானூறு, 10) நம்பி திருவிளையாடல், 11) குமரகுருபரர் பிரபந் தங்கள், 12)
மீனாட்சி சுந்தரம்பிள்ளை பிரபந்தங்கள், 13) சிவக்கொழுந்து தேசிகர் பிரபந்தங்கள், 13)
சீர்காழிக்கோவை, கலைசைக்கோவை ஆகியன வாகும்.
பொதுமக்களுக்குப் புரியும் வகையில் எளிய நடையில் பேச்சு வழக்குச் சொற்களைப் பயன்படுத்தி
மரபு பிறழாது எழுதியவர். என் சரிதம், மீனாட்சி சுந்தரம் பிள்ளை சரித்திரம், தியாகராச
செட்டியார் சரித்திரம், நல்லுரைக்கோவை, நினைவு மஞ்சரி என்பன இவர் படைத்தளித்த சிறந்த
நூல்களாகும்.
உ.வே.சாமிநாதையர் ஒரு நூலைப் பதிப் பிக்கும்போது பிற நூல்களின் சிறப்பை அறிய
நேர்ந்தாலும் பிற நூல்களின் கருத்தாக்கங்கள் பற்றிய செய்திகளையும் குறித்து வைத்து அவற்றை
உரிய நேரத்தில் வெளிப்படுத்தி தாம் உணர்ந்த கருத்தாடல்களைப் பிறர் உணர எழுதி வைக்கும்
இயல்பினர். அவ்வகையில் திருமுறை களையும், திருத்தலங்களின் குறிப்புகளையும் எழுதிச்
சேர்த்த ஓவைச் சுவடிகளையும் உ.வே.சா. நூல் நிலையம் கி.பி.1990-இல் வித்துவான் சு.பால
சுப்ரமணிநாதன் என்பவரைக் கொண்டு பதிப்பித்துள்ளது.
1906-இல் ஐயருக்கு ‘மகாமகோபாத்தியாய’ப் பட்டம் வழங்கப்பெற்றது. 1932-இல் சென்னைப்
பல்கலைக் கழகம் ‘டி.லிட்’ பட்டம் வழங்கிச் சிறப்பித்தது. காஞ்சி சங்கராச்சாரிய சுவாமிகள்
‘தக்ஷிணாத்ய கலாநிதி’ எனும் பட்டத்தை வழங்கிச் சிறப்பித்தார்.