| Profession | சமூக ஆர்வலர் |
|---|
சின்னப் பிள்ளை மதுரை மாவட்டம் புல்லேரியைச் சேர்ந்த சின்னப் பிள்ளை, கிராமப்புறப் பெண்களின் பொருளாதார சுதந்திரத்திற்காகப் போராடிய ஒரு சாதாரண ஏழைச் சமூக ஆர்வலர் ஆவார். ‘களஞ்சியம்’ என்ற சுயஉதவிக் குழுக்கள் அமைப்பைத் தொடங்கி, கிராமப்புறப் பெண்களைக் கந்துவட்டிக் கொடுமைகளிலிருந்து மீட்டார். பெண்கள் சிறுசேமிப்பு மூலம் தங்களின் வாழ்வாதாரத்தை உயர்த்திக் கொள்ளும் புரட்சிகரமான மாற்றத்தை ஏற்படுத்தினார். இவரின் அரிய சமூகச் சேவையைக் கண்டு வியந்த அப்போதைய இந்தியப் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய், இவரின் காலில் விழுந்து வணங்கி ‘ஸ்திரீ சக்தி புரசுகார்’ விருதை வழங்கிக் கௌரவித்தார். இவருக்கு பத்மஸ்ரீ விருதும் வழங்கப்பட்டுள்ளது.