Dr. Krishnammal Jagannathan

டாக்டர் கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன்

Profession சமூக ஆர்வலர்

Biography

டாக்டர் கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன் திண்டுக்கல் மாவட்டத்தில் பிறந்த கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன், காந்திய வழியில் வாழ்ந்து வரும் மிக உன்னத சமூக ஆர்வலர் ஆவார். நிலமற்ற ஏழை ஒடுக்கப்பட்ட மக்களுக்கு, குறிப்பாகப் பெண்களுக்கு நில உரிமையைப் பெற்றுத் தருவதற்காக ‘லாஃப்டி’ (LAFTI – Land for the Tillers’ Freedom) என்ற அமைப்பைத் தன் கணவருடன் இணைந்து நிறுவினார். உழுபவனுக்கே நிலம் சொந்தம் என்ற கொள்கையின் கீழ் ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களை ஏழைகளுக்குப் பெற்றுத் தந்துள்ளார். இவரின் அரிய அமைதி மற்றும் சமூகப் பணிகளுக்காக ‘ரைட் லைவ்லிஹுட்’ (மாற்று நோபல் பரிசு) மற்றும் இந்திய அரசின் பத்மபூஷண் விருதுகள் வழங்கப்பட்டன.