| Profession | விஞ்ஞானி |
|---|
எஸ். ஆர். ஸ்ரீனிவாச வரதன் சென்னையில் பிறந்து வளர்ந்த சாத்தமங்கலம் ரங்கா ஐயங்கார் ஸ்ரீனிவாச வரதன், உலகப் புகழ்பெற்ற கணித மேதை ஆவார். நிகழ்தகவு கோட்பாட்டில் (Probability Theory) ‘பெரிய விலகல்கள் கோட்பாட்டை’ (Large Deviations Theory) உருவாக்கியதற்காக இவருக்கு 2007-ஆம் ஆண்டு கணித உலகின் நோபல் பரிசாகக் கருதப்படும் ‘ஏபெல் பரிசு’ (Abel Prize) வழங்கப்பட்டது. இப்பரிசைப் பெற்ற ஒரே இந்தியர். நியூயார்க் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணியாற்றும் இவருக்கு இந்திய அரசு பத்மவிபூஷண் விருது வழங்கி கௌரவித்துள்ளது.