| Profession | எழுத்தாளர், பதிப்பாளர் |
|---|
கடந்த 35 ஆண்டுகளாக பதிப்பகத் துறையில் கோலோச்சிக் கொண்டிருப்பவர். அறிவியல், தொழில்நுட்பங்களை கிராமப்புற மாணவர்கள், குறிப்பாக தமிழ் வழிக் கல்வி மாணவர்கள் கற்க இயலாத காலகட்டத்தில், அனைவரும் எளிதாக புரிந்து கொள்ளும் வகையில் தமிழில் கணிப்பொறி குறித்தும் செல்பேசிகளின் தொழில்நுட்பங்கள் குறித்தும், அறிவியல் தொழில்நுட்பங்கள் குறித்தும் கம்ப்யூட்டர் உலகம் இன்டர்நெட் உலகம் மொபைல் உலகம் ஆகிய மாத இதழ்களை தொடர்ந்து 35 ஆண்டுகளாக நடத்திக் கொண்டிருப்பவர். தமிழில் நூற்றுக்கும் அதிகமான பதிப்பக நூல்களை வெளியிட்டுள்ளார். இவர் வெளியிட்டுள்ள நூல்களைப் படித்தும், மாத இதழ்களை தொடர்ந்து வாசித்தும் பயன்பெற்றுள்ள பல்லாயிரக்கணக்கான மாணவர்கள், பொறியியல் படிப்புகளை முடித்து மிகப் பெரிய பதவிகளை அலங்கரித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.